வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த சுதந்திர தின விழாவில் அனைவரும் தேச ஒற்றுமையை முன்னிறுத்தி, தேசப்பற்றை மேம்படுத்தி, நாட்டின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு முன்னெடுப்புகள் நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் தேசிய கொடி: அந்த வகையில் மத்திய – மாநில அரசுகளும் இதனை தொடர்ச்சியாக பொது மக்களிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு 13, […]
Tag: Village
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வத்தல்பட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் கடந்த 25 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் இச்செயலால் மிகுந்த கோபம் அடைந்த கிராம மக்கள் கையில் காலிக்குடங்களுடன் […]
கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களை நோக்கி ஓடிய மக்கள் கொரோனா தாக்கத்திற்கு பின் நகர்ப்புற ஆசையை விட்டுவிட்டு கிராமங்களை நோக்கி குடிபெயர ஆரம்பிப்பார்கள் என ஒரு சில தரவுகளின் அடிப்படையில் கூறப்பட்டுவருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல நிறுவனங்களும் கம்ப்யூட்டர் துறை ரீதியான பணிகளும் தங்களது நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தி வந்தனர். சென்னையை பொருத்தவரையில் 70 சதவிகிதம் ஐடி துறையை சார்ந்த வெளியூர்களில் இருந்து ஆட்கள் இங்கே வந்து பணிபுரிந்து வருகின்றனர். […]
ருசியான உளுந்தம் சோறு… தேவையான பொருட்கள்: 1. வெந்தயம் – 2 டீஸ்பூன் 2. பூண்டு – 2 3. தேங்காய் – துருவியது 4. உப்பு […]
மீன் குழம்பை விட அதிகம் விருப்பபட்டு சாப்பிடக் கூடியது கருவாட்டு குழம்பு தான். அதிலும், கருவாட்டு குழம்பு வைத்து மறுநாள் உண்டால் அதன் ருசியே தனி. சுவையான கருவாட்டு குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம். கருவாடோட மருத்துவ குணங்கள் : கருவாடு உடல் உஷ்ணத்தை குறைக்கும். பொதுவாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து உஷ்ணம் வெளியேற கருவாட்டை சாப்பிடுவார்கள். தேவையானவை : கருவாடு – 200கிராம் கத்தரிக்காய் – 1/4 கிலோ உருளைக்கிழங்கு – 2 […]
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சுகந்தலையில் விளையாட்டுப் போட்டி உற்சாகமாக நடந்து முடிந்தது. தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழர்கள் புதுஆடை அணிந்து , வீடுகளில் கோலம் போட்டு , பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதே போல இரண்டாம் நாள் பண்டிகையாக மாட்டு பொங்கலையும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு போட்டி நடத்தி அன்றைய நாளை உற்சாகத்துடன் போக்குவார்கள். […]
பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டி சுகந்தலையில் சிறப்பாக நடைபெற்றது.. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மாட்டுப்பொங்கலான இன்று அனைத்து பகுதியிலும் விளையாட்டுப் போட்டி நடத்தி மாட்டுப்பொங்கலை சிறப்பாக தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை கிராமத்தில் விளையாட்டு போட்டி நடத்துவதற்காக அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது. EVLK இளைஞரணி சார்பில் பொங்கல் விளையாட்டு விழா முன்னெடுக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு […]
பிகார் மாநிலத்தில் பூர்னியா மாவட்டத்திலுள்ள பாகிஸ்தான் கிராம மக்கள், தங்களது கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தான் பெயரைக் கேட்டாலே, பெரும்பாலான இந்திய மக்கள் அதிருப்தியடைகின்றனர். அப்படிப்பட்ட மனநிலையிலிருக்கும் காலத்தில், பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்திலும் பாகிஸ்தான் என்ற பெயர்கொண்ட ஒரு கிராமம் இருக்கிறது. இந்தியா நாட்டில், பாகிஸ்தான் எனும் பெயர் கொண்ட கிராமத்தால், அப்பகுதி மக்கள் மிகவும் எரிச்சலடைகின்றனர். இப்பெயரைக் கண்டு நாங்கள் மிகவும் வருத்தமடைவதாகவும் தெரிவிக்கின்றனர். […]
பாரத் இணைய சேவை மூலம் தமிழ்நாட்டில் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் அமைப்பதற்கு மத்திய அரசு 1,815 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பாரத் இணைய சேவை திட்டம் மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களுக்கு பாரத் பைபர் கேபிள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளிலும் பிராட்பேண்ட் தொடர்பை உருவாக்க திட்டம் ஏற்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தரைவழி ஆப்டிகல் பைபர் கேபிள் வசதியை 55,000 கிலோ […]
சுகந்தலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல்வேறு பனை மற்றும் தென்னை மரங்கள் எரிந்து நாசமாகின. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியில் சுகந்தலை என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. வறண்ட குளத்தின் காய்ந்து கிடந்த அமலைச்செடிகளில் 2 மணியளவில் மர்மநபர் யாரோ தீ வைத்ததாக சொல்லப்படுகின்றது.காற்றின் வேகம் அதிகரித்த காரணத்தால் தீ மளமள வென பரவியது. சுற்றியுள்ள தென்னை , பனை மரங்களில் பரவிய தீ ஊரின் நடுவே இருக்கும் […]