விழுப்புரம் அருகே மையானத்திற்கு பாதை இல்லாததால் விளைநிலங்கள் வழியாகவே சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை தொடர்வதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோழியுனுர் அருகே உள்ள காவணி பாக்கம் கிராமத்தில் மையானத்திற்க்கு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சடலங்களை விளைநிலங்கள் வழியாக சுமந்து செல்ல வேண்டிய நிலை பல ஆண்டுகளாக தொடர்வதாக கிராம மக்கள் […]
Tag: Villagers
களக்காடு அருகே ஆற்று பாலம் இல்லாததால் சடலங்களை ஆற்றுக்குள் கயிறு கட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடக்கு மூங்கிலடியை சேர்ந்த பட்டியலின மக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை மூங்கிலடி ஆற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்துவருகின்றனர்.இந்த இடுகாட்டிற்கு செல்ல மூங்கிலடி ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ள நிலையில் ஆற்றில் பாலம் இல்லாததால் உயிர் இழந்தவர்களின் சடலங்களை எடுத்து செல்ல கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர் . மேலும்,மலைக்காலங்களில் அதிக […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாய் கரடி மற்றும் குட்டி கரடி இரண்டும் சேர்ந்து 5 பேரை தாக்கியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தின் தர்மாரம் என்ற கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் தாய் கரடி மற்றும் குட்டி கரடி இரண்டும் திடீரென நுழைந்து அப்பகுதியில் வசித்து வரும் ராஜு, நரசிம்மப்பா, பெத்தப்பா உள்ளிட்ட 5 பேரை கடுமையாக தாக்கியது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அங்கிருந்த கட்டைகள் மற்றும் கம்புகளால் அடித்து அந்தக் கரடியை பிடிக்க தீவிர முயற்சி […]