விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் தரை பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த அஞ்சாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை சுற்றியுள்ள செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் அருகே பள்ளம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பள்ளம் சுமார் 10 அடி அகலம் 15 அடி ஆழத்திற்கு நீர் நிறைந்து காணப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]
Tag: #Villupuram
விழுப்புரம் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழையை நம்பி பயிரிடப்பட்ட மக்காச் சோளப் பயிர்கள் செழித்து வளர்ந்து கதிர் விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மாணாவரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சராபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்காச் சோளப் பயிர்கள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. மக்காச் சோளப் பயிர்கள் விரிந்து வளரும் தன்மை கொண்டதால், பெரிய அளவில் பராமரிப்பு செலவு விதமான லாபத்தை ஈட்டித் தரக்கூடிய பயிர்கள் என்கின்றனர். […]
விழுப்புரத்தில் பல்பொடி என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்துள்ள கோணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம். பதிமூன்று வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீராம் பல்பொடி என்று நினைத்து எலி பேஸ்டை எடுத்து பல் துலக்கியுள்ளார். இதில் எலி பேஸ்ட்டை முழுங்கிய அவர் திடீரென வாந்தி எடுத்து […]
மது அருந்த மனைவி பணம் தராததால் விரக்தியில் கணவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை அடுத்த அயன் வேலூர் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். சுந்தரபாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் அதிகமாக உண்டு அந்த வகையில் தினம்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் சுந்தரபாண்டி. மனைவி […]
விழுப்புரத்தில் திடீரென மாணவன் வாந்தி மயக்கத்துடன் மரணித்தது குறித்து காவல்துறைனர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதி அருகே வசித்து வருபவர் பழனி. இவரது மகன் ஆகாஷ் என்பவர் மணலூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் ஆகாஷ் இன்று பள்ளிக்கு சென்றுள்ள நிலையில், பள்ளியில் வைத்து திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பின் பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். அங்கு […]
விழுப்புரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் செய்யப்படுவதாக ரகசிய தகவல் காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. இதன் பெயரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் காவலர் ஜோசப் ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்டவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் மணல் கொள்ளையில் ஈடுபட்ட காசிநாதன் உள்ளிட்ட 5 […]
திண்டிவனத்தில் போக்குவரத்து துறை அதிகாரி என கூறி இருசக்கர வாகனங்களில் செல்வோரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டு வரும் நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டிவனம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் புதன்கிழமை மாலை திண்டிவனத்தில் இருந்து வீடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் அவரை வழிமறித்த ஒரு நபர் தலைக்கவசம் அணியவில்லை என கேட்டவாறு அவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு காவல் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி […]
கள்ளக்குறிச்சியில் திருமணமான சில நாட்களில் மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த பொறியாளரான பால முருகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பாலமுருகன் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துள்ளனர். மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாலாவின் நண்பர் சந்தோஷ் […]
விழுப்புரத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவா என்ற நபரை மர்ம நபர்கள் இரண்டு பேர் வழிமறித்து துப்பாக்கியை […]
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பள்ளிக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். இதற்காக 10 குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிறப்பாக மற்றும் எண்ணிக்கையில் அதிகமாக செய்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து இந்த விதை பந்துக்களை ஏரிக்கரைகள், […]
நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தொல்.திருமாவளவன் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 1 மக்களவை தொகுதிகளும் , 1 மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருந்தது . இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்று அறிவித்தார் . […]