Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அதிகாரிகளின் கவனக்குறைவு” தலைகீழாக பறந்த தேசிய கொடி…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு தினமும் காலை 6 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்கு இறக்குவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் காலை 6 மணிக்கு தேசியக் கொடியை சிறைச்சாலையில் ஏற்றியுள்ளனர் ஆனால் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் யாரும் கவனிக்காத நிலையில் சிறைச்சாலையின் அருகே அமைந்திருந்த சாலையில் சென்ற மக்கள் தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கவனித்து சிறைச்சாலை வாயிலில் காவலுக்கு இருந்த காவலரிடம் தெரிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

FlashNews: விழுப்புரம் : பள்ளிளுக்கு விடுமுறை …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காரில் இருந்த பொருள்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக காரில் கடத்தி வந்த மதுபானத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரி ஜான் ஜோசப், காவல்துறை அதிகாரிகள் மஞ்சுநாதன், செல்வம் ஆகியோர் பொம்மையார்பாளையம் பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 1128 மதுபான பாட்டில்கள் காரில் இருந்ததைக் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தபால் நிலையத்திலும் மோசடியா?…. அதிகாரி செய்த செயல்…. மடக்கிப்பிடித்த போலீசார்….!!

தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடி மோசடி செய்த அதிகாரியை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தில் ஒரு தபால் நிலையம் உள்ளது. அங்கு உதவிக் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளரான பிரவின் என்பவர் சில அதிகாரிகளோடு இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்குகளைத் தணிக்கை செய்துள்ளனர். அந்த தணிக்கையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கிளை அதிகாரியாக வேலைப் பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்” போராட்டத்தில் மிரட்டிய பெண்….விழுப்புரத்தில் பரபரப்பு…!!

பொதுமக்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட மொழியனூர் ஊராட்சியில் நெடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கோபமடைந்த கிராம மக்கள் தனி ஊராட்சியாக நெடிக் கிராமத்தை  அறிவிக்கவில்லை என்றால் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை அனைவரும் புறக்கணிப்போம் என முடிவு எடுத்துள்ளனர். அதோடு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிலுவையில் உள்ள 35 கோடி கடன்தொகை…. ஊழியர்களின் தீடிர் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்  தீடிரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் மூர்த்தி, மண்டல தலைவர்கள் கடலூர் ஜான் விக்டர், திருவண்ணாமலை சேகர் மற்றும் மண்டல பொதுச்செயலாளர்கள் வேலூர் ரவிச்சந்திரன், விழுப்புரம் ரகோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்க […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பருவமழையை எதிர்கொள்ள…. துரிதப்படுத்தப்படும் தூய்மைப்பணிகள்…. மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தூய்மைத்திட்ட பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் மின்வாரிய காலனி, தாமரைகுளம், கே.கே சாலை, திருச்சி சாலை போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் டி.மோகன் தொடங்கி வைத்துள்ளார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு குடிநீர் வழங்கல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இந்த தூய்மைப் பணிமுகாமை  6 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மக்களிடம் கருத்து கேட்கவில்லை” கிடப்பில் போடப்பட்ட திட்டம்…. மீண்டும் சூடுபிடிக்கும் பணிகள்….!!

கிடப்பில் போடப்பட்ட சாலை திட்ட பணிகளை மீண்டும் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக தொடங்கியுள்ளனர்.  விழுப்புரம் – நாகப்பட்டினம் செல்லும் 194 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு கடந்த 2012-ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் விழுப்புரத்தில் உள்ள ஜானகிபுர கூட்டுச் சாலையிலிருந்து நாகப்பட்டினம் புறவழிச்சாலை தொடங்குவதாக அமைந்துள்ளது. இந்த சாலை விழுப்புரத்தில்  16, கடலூரில் 61, நாகையில் 43 மற்றும் புதுச்சேரியில் 14 என மொத்தமாக 134 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

600 இடங்களில் சிறப்பு முகாம்கள்…. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. ஆட்சியரின் விழிப்புணர்வு…!!

சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதற்காக தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த முகாம்கள் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, வளவனூர் விக்கிரவாண்டி, மரக்காணம், திருவெண்ணைநல்லூர், வானூர், கோட்டகுப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொரோனா ஆய்வகத்தில் தீ விபத்து… வெடித்து சிதறிய சோதனை மாதிரிகள்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

 அரசு மருத்துவமனையில் ஏ.சி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா  பரிசோதனை ஆய்வகம் அமைந்துள்ள ஆர்என்ஏ கண்டறியும் ஆய்வகத்தில் இருந்த ஏசி எந்திரம் வெடித்ததில் ஆய்வகம் தீ பற்றி எரிந்தது. ஆய்வகம் முழுவதும் ஆல்கஹால் கலந்த சோதனை மாதிரிகள் அதிகம் இருந்ததால் அவை அனைத்தும் வெடித்து புகைமூட்டமாகியது. இதனையடுத்த மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 571ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நேற்றைய நிலவரப்படி 551 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 387 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 156 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அ, ஆ சொல்லி தரவே ஆளில்லையாம் இதில் பொது தேர்வு வேற…

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்று வெறும் மூன்று ஆசிரியர்களுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் ப.வில்லியனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. சுமார் 150 குழந்தைகளின் கல்வி ஆதாரம் இந்த பள்ளிதான் கடந்த 18 மாதங்களாக தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களுடன் மட்டுமே இந்த ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. அவர்களும் ஆறு முதல் எட்டாம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எஸ்.ஐ. எழுத்துத் தேர்வில் பிட் அடித்து பிடிபட்ட காவலர் …!!

விழுப்புரத்தில் திங்களன்று (ஜன.13) நடைபெற்ற எஸ்.ஐ.க்கான எழுத்துத் தேர்வில் காவலர் ஒருவர் “பிட் “ அடித்த போது பிடிபட்டார்.   விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை ஒதுக்கீட்டில் 857 பேர் காவல் உதவி ஆய்வா ளர் பணிக்கான எழுத்துத் தேர்வை எழுதினர்.  இந்த நிலையில் விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப் பட்ட தேர்வு மையத்தில் காவலர் ஒருவர்  பிட் அடித்துத் தேர்வெழுதினார். எழுத்துத்  தேர்வை கண்கணித்த டி.எஸ்.பி. ரவீந்தி ரன், அந்த காவலரைப்  பிடித்து அதிகாரி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

”திருமணத்திற்கு மறுப்பு” காதலன் கண் முன் காதலி தற்கொலை…!!

கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் திருமணம் செய்ய மறுத்ததால் அவரது கண் முன்னேயே காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஐந்தாண்டுகளாக நகமும் , சதையுமாக காதலித்து வந்த நிலையில் காதலன் கண்முன்னே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து திடீரென காதலி தற்கொலை செய்து கொண்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு வின் மகள் 22 வயதான நிஷா.  நிஷா செவிலியர் பட்டப்படிப்பு […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை …

விழுப்புரம் மாவட்டத்தில் ,நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இன்று  ஒரு மாணவி தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்  கூனிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்  மோனிஷா.   நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இவர் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்ததால், மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . இந்நிலையில் மோனிஷா, இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   மோனிஷா எழுதிவைத்துள்ள தற்கொலை கடிதத்தில், ”தனது தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததே” என குறிப்பிட்டுள்ளார். பின்னர் […]

Categories

Tech |