தங்கை உணவு, தண்ணீரின்றி கணவன் வீட்டார் துன்புறுத்தி வருவதாக மனைவி புகுந்த வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியை அடுத்த மார்க்கெட் லைன் ஏரியாவை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத். இவர் அதே பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 2017ம் ஆண்டு முதல் தனி குடுத்தனத்தில் வசித்து வந்தார். கணவன், மனைவி […]
Tag: Violence
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போரட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட 70 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் ஜேஎன்யு-வில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பேருந்துகளும் மற்ற […]
மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். ஜாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் குறித்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கைவிட்டு அமைதி காத்தால் மட்டுமே வழக்கை விசாரிப்போம் என உச்ச நீதிமன்ற தலைமை […]
ஈராக்கில் அரசைக் கவிழ்க்க நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தடியடி நடத்தி கண்ணீர் குண்டுகளை வீசி காவல்துறையினர் போராட்டத்தைக் கலைத்தனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். 1700க்கும் அதிகமனோர் படுகாயம் அடைந்தனர்.ஈராக்கில் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கடந்த மூன்று வார காலமாக அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில் பாக்தாத் தெருக்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு உள்ளிட்டவற்றுக்கு எதிராக […]
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பெண் காவலர் ஒருவர் தர்காவிற்கு வருகை தந்த ஒருவரை அரையும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாநிலத்தில் அஜ்மீர் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கே பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவர் தர்காவிற்கு வழிபாட்டிற்கு வந்த ஒருவரை அறைவது போன்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. எதற்காக அந்த நபரை பெண் காவலர் அறைந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது இந்த வீடியோ […]
நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு […]
பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் விசிக கட்சி சார்பில் 24_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் போட்டியிடும் சின்னமான பானையை ஒரு சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை […]