மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் சிறுத்தையும் பூனையும் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இருந்த ஒரு பூனையை சிறுத்தை ஒன்று பிடிப்பதற்காக வேகமாக தூரத்தியுள்ளது.. அதன் பிடியில் இருந்து எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று பூனையும் வேகமாக ஓட, இறுதியில் இரண்டுமே அந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டது.. இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் இரண்டையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.. அப்போது கிணற்றின் ஒரு […]
Tag: ViralVideo
மங்களூருவில், பெண்ணின் ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பகாயமடைந்த அந்தப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூருவிலுள்ள கத்ரி கம்ப்லாவின் அருகே சாலையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, அந்த வழியாக வேகத்தில் வந்த ஒரு கார் அந்தப் பெண்ணின் ஸ்கூட்டி மீது வேகமாக மோதியதில், அந்தப் பெண் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்து […]
வயிறுநிரம்ப உணவை உட்கொண்ட பின் ஒரு மலை பாம்பு உடலை குளிர்ச்சியாக வைக்க தண்ணீரில் மூழ்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில் மலை பாம்பு ஒன்று ஏதோ ஒன்றை விழுங்கிவிட்டு வயிறுமுட்டிய நிலையில் வேகமாக நகர முடியாமல் […]
தன்னுடைய பெற்றோரை ஒருமையில் பேசியதாக காவல் உதவி ஆய்வாளருடன் ஒருவர் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி உணவுக்கடை நடத்திவருபவர் வேல்மயில். இவர் வழக்கம்போல் ஜூன் 17ஆம் தேதி தன்னுடைய மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் கடையில் வியாபாரம் செய்துவந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மணிக்கு மேல் கடையைத் திறந்துவைப்பதற்கு அனுமதியளிக்காத போதிலும், அவர் கடையை திறந்து வைத்துள்ளார். அதனால் அப்போது ரோந்துப் […]
கர்நாடக மாநிலத்தில் சுகாதார பணியாளர் ஒருவர் இருக்கையில் உட்கார்ந்து, செல்போனில் பேசிக்கொண்டே ஏனோ தானமாக ரயில் பயணிகளை அரைகுறையாக சோதனை செய்து அனுப்பும் வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் தும்கூர் இரயில் நிலையத்தில் சுகாதார உதவியாளர் நரசிம்மமூர்த்தி என்பவர் பயணிகளுக்கு கொரோனா இருக்கிறதா என்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒவ்வொரு பயணிகளாக வரிசையில் வந்தனர். ஆனால் அவர், பயணிகளின் நேருக்குநேர் நின்று வெப்பநிலை மானியை வைத்து சோதனை செய்யாமல் சேர் போட்டு ஹாயாக […]
சீனாவில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை யானைகள் குடித்துவிட்டு மனிதனை போல உறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் யுன்னான் (Yunnan) மாகாணத்தில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சில யானைகள் அங்கிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து விட்டன. பின்னர் அங்கிருந்த வீட்டைப் பார்த்த யானைகள் அதனை துவம்சம் செய்து விட்டது. மேலும் வீட்டுக்குள் இருந்த 30 லிட்டர் ஒயினையும் இரண்டு யானைகள் மிகவும் ரசித்து ருசித்து குடித்தன. இதனால் யானைகளுக்கு போதைத்தலைக்கேறி விட்டது. இதையடுத்து […]
அமெரிக்காவில் வெறிச்சோடி காணப்பட்ட உயிரியல் பூங்கா ஒன்றில் 2 பென்குயின்கள் சுதந்திரமாக சுற்றிப்பார்த்த வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 105 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 6, […]
தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் கழிவுநீர் தொட்டியில் காய்கறிகளை போட்டு சுத்தம் செய்து எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோ எந்த மாநிலத்தில் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை. வீடியோவில் ஒரு தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் தன்னிடம் உள்ள தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிபிளவர் போன்ற காய்கறிகளை, தெருவோரத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கழுவி சுத்தப்படுத்தி, பின் தள்ளுவண்டியில் அடுக்கி வைத்து எடுத்து செல்கிறார். இதையடுத்து காய்கறிகளை சாக்கடையில் வியாபாரி […]
பெரிய யானையை ஒரு எருமை கன்று பயமில்லாமல் விரட்டியடிக்கும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆம், இணையதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு மிகப்பெரிய யானையை பார்த்து தாய் எருமை பயந்து போய் பின்னால் நிற்கிறது. ஆனால் எருமையின் கன்று பயமில்லாமல் துணிச்சலாக செயல்பட்டு அதை விரட்டிக்கொண்டே செல்ல யானையும் […]
ஒரு குட்டி கொரில்லா குரங்கு வைக்கோல் குவியலில் குதித்து ஜாலியாக விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குட்டி கொரில்லா ஒன்று சிறிய சுவர் மீதி ஏறி நின்று கொண்டு வைக்கோல் குவியலில் மீது மீண்டும் மீண்டும் குதித்து ஜாலியாக விளையாடுகிறது. தொடர்ந்து அப்படி செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த அதன் தாய் கொரில்லா குறும்புக்கார குட்டியை […]
தென்னாப்பிரிக்காவில் ஆபத்தான விஷப் பாம்புடன் அணில் தைரியமாக வம்புக்கு இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கலாகடி உயிரியல் பூங்காவில் மஞ்சள் நிறத்தில் விஷ தன்மை கொண்ட நாகம் ஒன்று சுற்றி வந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த ஒரு அணில் பாம்பை பார்த்ததும் வேகமாக கீழே இறங்கி வந்து அதனுடன் தைரியமாக சண்டையிடத் தொடங்கியது. தனது வாலை ஆயுதமாகப் பயன்படுத்திய அந்த அணில், பாம்பின் கவனத்தைத் லாவகமாக திசை திருப்பி அதைத் தாக்க முயல்கிறது. அதேநேரத்தில் […]
வயதான முதியவர் ஒருவர் நாய் ஒன்றுக்கு தனது உள்ளங்கையில் தண்ணீர் பிடித்துவந்து கொடுத்து தாகம் தணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா (Susanta Nanda IFS) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வயதான முதியவர் ஒருவர் நீல நிற தொப்பி அணிந்து கொண்டு தெருநாய் ஒன்றுக்கு, அருகில் உயரமாக அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து உள்ளங்கையில் தண்ணீரை பிடித்து வந்து கொடுக்கிறார். பாவம் நாய் தாகத்தில் […]
போலந்தில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை மூதாட்டி ஒருவர் தைரியமாக துடைப்பத்தால் அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. போலந்து நாட்டில் பிங்க்ஸின் என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி வைத்திருக்கிறார். இந்த அங்காடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் முகமூடி அணிந்து கொண்டு வந்த கொள்ளையன் ஒருவன் கடையில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளான். அப்போது அந்த மூதாட்டி அவனை பார்த்ததும் துப்பாக்கியை நீட்டி மிரட்டியுள்ளான். ஆனால் அந்த மூதாட்டி […]
கிர் சரணாலயத்தின் வெளிப்புற பகுதியில் பெண் சிங்கம் மற்றும் அதன் குட்டிகள் பைக்கிற்கு வழிவிட்டு நிற்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் பர்மல் நத்வானி ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், குஜராத் மாநிலம் கிர் சரணாலயத்தின் வெளிப்புறத்தில் ஒரு சிறிய பாதையில் செல்லும் தாய் சிங்கத்தை பின் தொடர்ந்து 2 சிங்க குட்டிகள் செல்கின்றன. அப்போது திடீரென அவ்வழியில் இருசக்கர வாகனம் ஓன்று வருகிறது. அதில் இருவர் இருந்தனர். இதனை […]
பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவன் ஒருவனை அவனது தாயார் கண் முன்னால் பிட் புல் ரக நாய் ஓன்று கடித்து குதறும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த லக்ஸ் உப்பால் (Laksh Uppal). 15 வயது மாணவனான இவன் நேற்று டியூசன் சென்றுவிட்டு சைக்கிளில் மாலை வீடி திரும்பினான். அப்போது அங்கிருந்து வந்த ஒரு பிட் புல் (pitbull) ரக நாய், திடீரென சிறுவனின் காலை கடித்து குதற தொங்கியது. […]
சீனாவில் ஆற்றில் இருந்தது அனகோண்டா என்று நினைத்த அனைவருக்கும் பதில் கிடைத்துள்ளது. சீனாவில் உள்ள கார்ஜஸ் அணையில் 65 அடி நீளத்தில் மர்மமான ஒரு உயிரினம் ஊறிச் செல்வதாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவை 60,00,000 – த்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதனை கண்ட பலரும் இது என்ன உயிரினம் என்று வியப்பில் ஆழ்ந்தனர். சிலர் இது ஒரு மிகப்பெரிய அனகோண்டாவாகவோ அல்லது ராட்சத மீனாகவோ இருக்கலாம் என சந்தேகத்தின் படி தெரிவித்தனர். அதிலும் இந்த வீடியோ என்றைக்கு எடுக்கப்பட்டது என்றே […]
மத்தியபிரதேசத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியபிரதேசம் இந்தூரில் போக்குவரத்து சிக்னல் விளக்கு வேலை செய்யாததால் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கிக்கொண்ட மத்தியபிரதேச விளையாட்டுத்துறை அமைச்சர் ஜித்து பத்மாரி தனது காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை சீர் செய்ய தொடங்கினார். அவருக்கு பொதுமக்கள் சிலர் உதவி செய்யவே போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் நகரத் தொடங்கினார். இந்த காட்சி தற்போது […]
உத்திரபிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சப்பாத்தியும் உப்பும் மதிய உணவாக கொடுக்கப்பட்டது போன்ற வைரலான வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் குக்கிராமம் ஒன்றில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் மதிய உணவாக சப்பாத்தி மற்றும் உப்பை மாணவர்களுக்கு வழங்கப்படும் காட்சியை செய்தியாளர் ஒருவர் படம் பிடித்து சமூக வலை தளத்தில் கடந்த மாதம் பதிவிட்டார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் மாநில அரசுக்கு எதிராக கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. […]
ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் மிக உயரமான கட்டடத்தின் உச்சியில் சிமென்ட் கட்டைகளில் சர்வ சாதாரணமாக துள்ளிக் குதித்து ஓடும் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் வாழும் பலர் நாம் ஏதாவது ஒரு சாதனைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏதாவது சாகச வீடியோவை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் உயிரை பணயம் வைக்கும் விதமாக சர்வ சாதாரணமாக சாதனைகளை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில்,ரஷ்யாவின் காடரின்பர்க் (Yekaterinburg) என்ற பகுதியில் வசித்து வரும் ஷெர்ஙஸ்டையாசென்கோ (Sherstyachenko) என்ற […]
திருச்சியில் காவலர் ஒருவரை மிக தரக்குறைவாக குடிபோதையில் இளைஞர் ஒருவர் பேசும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி வந்துள்ளார். இதனை கவனித்த அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் இளைஞர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சாவியை பறிமுதல் செய்துள்ளார். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் எல்லை மீறி மிக […]
மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென மாயமாக மறைவதை கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்து வருகின்றனர். ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’என்று சொல்லப்படும் ஒளியியல் மாய தோற்றத்தின் தொழில்நுட்பத்துக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளத்தில் அடிக்கடி வெளியாகும் வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், என்ன நடக்கிறது என்பதை அறிய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போது ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயையால் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ […]
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தர்ம அடி விழுகின்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் […]