ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் காதல் செய்யாத இளைஞர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஒருசிலர் வேண்டுமானால் இருக்கலாம். சிலர் நீண்ட நாட்களாக ஒருதலையாகவே காதலித்து வருகின்றனர். சமயம் பார்த்து காதலை சொல்ல நினைக்கின்றனர். ஆனால் காதலை ஏற்க மறுத்து விட்டால் ஓன்று அந்த பெண்ணை கொலை செய்ய முயல்கின்றனர். இல்லையென்றால் தங்களை தானே அழித்து கொள்ள […]
Tag: Virudhunagar
நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின் மேரி தம்பதியர் கோவிலுக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே வந்துபோது, காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் கார் நிலைதடுமாறி நான்குவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி […]
காரியாபட்டி அருகே ஒரு வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் – சுஷ்மிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு வயது மகன், வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் குழந்தையின் தந்தையே தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டு கொலை செய்ததாகவும் கூறி குழந்தையின் தாயார் காரியாபட்டி காவல் […]
ஆளுநரிடம் திமுக மனு கொடுத்ததற்கு விரக்தி காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு தனது பேத்தியின் காதணி விழாவிற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதை ஏற்று பொதுத்தேர்வு இல்லை என்று அறிவித்துள்ளோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது” என்றார். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக மற்றும் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் பள்ளி மாணவிகளை ஈடுபடுத்திய தனியார் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, சி.பி.எம், காங்கிரஸ், பாப்புலர் பிரண்ட்ஸ் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தனியார் பள்ளி மாணவிகளும் கலந்துகொண்டனர். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தை […]
2021இல் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாமக மாநில பொருளாளர் திலகபாமாவின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவாகரம் […]
விருதுநகரில் நடந்த குற்ற சம்பவங்களில் பெரும்பான்மையான பங்கு வடமாநிலத்தவர்களுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தற்போது வரை நடைபெற்ற கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களிளும் பெரும்பான்மையாக வட மாநிலத்தவர்களின் பங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக சமீபத்தில் சிவகாசி அருகே 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் கைது செய்யப்பட்டார். இந்த […]
அருப்புக்கோட்டை தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த நாகநாதன் என்பவருடைய மகன் ஹரிஷ் பாபு. இவர் அருப்புக்கோட்டை தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று காலை வகுப்பு முடிந்து மதிய உணவு இடைவெளியில் விடுதிக்கு சென்ற மாணவர் நீண்ட நேரமாகியும் வகுப்பிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் இறந்த புள்ளிமான் குறித்து வாகனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அந்த வகையில் மான் வகையைச் சேர்ந்த கடமான், புள்ளி மான்களும் அதிக அளவில் அங்கு காணப்படுகிறது. இந்நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் நேற்றிரவு மான்கள் கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து […]
விருதுநகர்: மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர் ஒருவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று நள்ளிரவில் ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் மகேந்திரமணி, கோபால் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் ஓட்டுநர் மகேந்திரமணி லாரியின் இடிபாடுகளிடையே […]
மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாகக் கூறப்படும் நிர்மலா தேவி விவகாரத்தில், அவரது வழக்குக்கு ஆதரவாக வாதாடி வந்த வழக்கறிஞர் விலகுவதாக தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ குற்றம்சாட்டப்பட்ட நிர்மலாதேவி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, கலைச்செல்வன், தங்கப்பாண்டியன் உள்ளிட்டவர்களுக்காகத்தான் கல்லூரி பெண்களை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக தன்னிடம் நிர்மலாதேவி தெரிவித்தார்’ எனக் […]
சின்னங்கள் குளறுபடியால் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவில் 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட […]
பரளச்சி அருகே விளைநிலத்தில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . விருதுநகர் மாவட்டம் ராணிசேதுபதி கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் நேற்று தனது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். மாலையில் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்று உறவினர்கள் பார்த்த போது பெண்ணின் செருப்பு மட்டுமே கண்டெடுக்கப்பட்டதால் பரளச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . பல இடங்களில் தேடப்பட்ட நிலையில் இன்று காலை விளைநிலத்திலேயே கழுத்தறுக்கப்பட்ட […]
ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேரை வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரம் எழுந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் (27) அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் […]
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக, மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ரோகிணி, மகாகவி பாரதியாரின் கவிதைகளை பாடிய சிறுவர்களுக்கு பாரதியார் புத்தகங்கள் பரிசுப்பொருட்கள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோகிணி, பாரதியார் பாடல்கள் டிஜிட்டல் மயமாக்குவது வரவேற்கத்தக்கது. ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவத்தில் தனக்கு உடன்பாடு இல்லை […]
மாநில அளவிலான கியூப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதல் பரிசை வென்றார். கியூப் விளையாட்டானது மனிதர்களின் மூளையையும் கைகளையும் வேகமாக செயல்பட வைத்து உடலையும் சுறுசுறுப்பாக வைப்பது மட்டுமின்றி, முடிவுகளை சரியாக எடுக்கவும் உதவும். இந்நிலையில், மாநில அளவிலான கியூப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 98 மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த போட்டியில், சென்னையைச் […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே படைபுளு தாக்குதலிலிருந்து மக்காச் சோளப் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு இலவசமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை அடுத்த தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு படைபுளு தாக்குதலால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை இந்த ஆண்டு தவிர்க்கும் பொருட்டு வேளாண்துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்கி அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மூன்று வயது குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரில் பஞ்சாயத்து சார்பாக மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க அந்த ஊரில் பல பகுதிகளில் பணி நடந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் என்பவரின் வீட்டிற்கு அருகே 6 அடி அளவு கொண்ட மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க கிராம பஞ்சாயத்து சார்பாக குழி தோண்டப்பட்டுள்ளது.அப்போது அந்தப் பகுதியில் பெய்த […]
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெற்கு தெருவில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகின்றது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “கிருஷ்ணன் கோயிலுக்கு 20 மீட்டர் தொலைவில் மதுக்கடை அமைந்துள்ளது. மேலும் இந்த மதுக்கடை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலையில் அமைந்துள்ளது. அங்கு மது அருந்துபவர்கள் […]
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் முதற்கட்ட பணிகளில் பயிர்கள் வளர்ச்சி அடைந்து இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிர்களை பயிரிட்டு உள்ளனர். அவ்வபோது பெய்து வரும் மழையால் பயிர்கள் செழித்து இருப்பதாகவும் அடுத்தகட்ட விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த விவசாயிகள், தற்போது பயிர்களை சீரமைத்து களை எடுத்து பராமரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அக்டோபர் […]
சிவகாசியில் பட்டாசு மூலப்பொருட்களை அரைக்கும் கிரைண்டிங் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த விஜயகண்ணன் என்பவர் சொந்தமாக கெமிக்கல் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இத்தொழிற்சாலையில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அரைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது பணி முடிந்து வீடு சென்றவுடன் வெடி உப்பில் திடீர் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டு கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து தகவல் கொடுக்கப்பட்ட […]
7 நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப் சிலம்ப போட்டியில் மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை […]
விருதுநகரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன், 6.51 வினாடிகளில் 302 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் பாலவேலன். இவர் சிறு வயது முதலே யோகாசன கலையை முறையாக பயிற்ச்சி பெற்று வருகிறார். தாம் கற்ற கலையில் எப்படியாவது உலக சாதனை புரிய வேண்டும் என்ற லச்சியத்தோடு இருந்த பாலவேலன், அதற்கான பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், யூனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்காட்ஸ் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் […]
திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர் பகுதியில் உள்ள பனியன் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் லட்சுமி நகர் பகுதியில் பழைய பேப்பர் கிடங்கு ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அட்டை பெட்டிகள், நூல் கோன்கள் மீது மளமளவென பரவிய தீ குடோனில் உள்ள பனியன் அட்டை பொருட்களிலும் முழுவதும் எரியத்தொடங்கியது. உடனடியாக […]
தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானதோடு மேலும் 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக செல்வதற்காக திருப்பூரிலிருந்து சிவகிரிக்கு காரில் 8 பேர் சென்றுகொண்டிருந்தனர் .அப்போது கார் கிருஷ்ணன் கோவில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த 7 பேரை அக்கம் பக்கத்தினர் […]
தளவாய்புரம் வங்கி ஊழியரை அடித்துக்கொலைசெய்ததற்காக 2 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம்ராஜபாளையத்தை அடுத்துள்ள அயன்கொல்லங்கொண்டான் சாலையில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் மிதந்ததை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில் இறந்தவர் ராஜபாளையம்மாவட்டம் நக்கனேரி தெருவை சேர்ந்த இசக்கி என்பதும், 34 வயதான இவர் தனியார் வங்கியில் நகைக்கடன் வாங்கி கொடுக்கும் பணியாளரை வேலைப்பார்த்து […]
விருதுநகரில் தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரே அரசு உதவி பெறும் தனியார் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற இரவு முழுவதும் நீண்ட வரிசையில் பெற்றோர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை செய்தனர். இதனையடுத்து மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர்களில் சிலர் மூடப்பட்ட பள்ளியின் […]