சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் சின்னாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னாண்டி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சின்னாண்டியின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளியை அருகில் உள்ளவர்கள் […]
Tag: viruthungar
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள களத்தூர் நாகலாபுரம் கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. 23 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 45 பணியாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசாயன மருந்து கலக்கும் கட்டிடத்தில் மருந்து கலக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது உராய்வின் காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி பகுதியில் மாடத்தியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துவீரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாடத்திம்மாளை முத்துவீரன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென மாடத்தியம்மாளுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மகனின் தோளை பிடிப்பதற்கு முயற்சி செய்த போது மூதாட்டி நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை அடுத்து படுகாயம் […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் டென்சிங் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் தேசிய மாணவர் படையையும் இவர் கவனித்து வந்துள்ளார். இந்த தேசிய மாணவர் படையில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த மாணவியும் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் டென்சிங் பாலையா தேசிய மாணவர் படை தொடர்பாக பயிற்சிக்கு சென்ற இடங்கள் […]
வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள உள்ள புல்லலக்கோட்டை சாலையில் நகராட்சி துப்புரவு பணியாளர் காலனி அமைந்துள்ளது. இங்கு ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளரான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் சுற்று சுவர் திடீரென இடிந்து லட்சுமியின் மீது விழுந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது […]
பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மலையடிப்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியான பால்ராஜுக்கு […]
மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சரண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பாம்பு பதுங்கி இருந்ததை பார்த்த சரண்குமார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பதுங்கி […]
காயங்களுடன் கண்மாய் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாலையம்பட்டி பகுதியில் இருக்கும் கண்மாயில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அருப்புகொட்டை டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேவை மைய கட்டிடத்தை அரசு மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர் திறந்து வைத்துள்ளார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது கலெக்டர் கூறும்போது, சூலக்கரை அன்னை சத்யா குழந்தைகள் காப்பக வளாகத்தில் இந்த மையமானது இயங்கி வந்த நிலையில், தற்போது 48 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]