நியூசிலாந்து வெள்ளைத் தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான ஒயிட் தீவில் உள்ள எரிமலை டிசம்பர் 9ஆம் தேதி வெடித்தது. இதில், சுற்றுலாப் பயணிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற அந்நாட்டு மீட்புப் படையினர், படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கடந்த இரண்டு வாரங்களாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று […]
Tag: Volcano
நியூசிலாந்திலுள்ள வெள்ளைத் தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறிய விபத்தில் ஐந்து நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது . எரிமலைகள் நிரம்பிய வெள்ளைத் தீவை சுற்றிப்பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகளை படகுகளில் அழைத்துச் செல்லப்பட்டனர் . இந்த நிலையில் , அங்கு திடீரென்று எரிமலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் .தற்போது அங்கு புகை மூட்டம் அதிகமாக இருப்பதால் அசாதாரண நிலை நிலவுகிறது […]
இத்தாலியில் புகையை மட்டும் வெளியேற்றி வந்த ஸ்ட்ராம்போலி எரிமலை திடீரென நெருப்பு பிளம்பை தெறிக்க விடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமாகும். இங்கு சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இந்த கடலை ஒட்டி அமைந்திருக்கும் ஸ்ட்ரோம்போலி என்ற எரிமலையானது உலகிலேயே அதிக செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகளில் ஒன்று என ஜியாலஜி டாட் காம் (geology.com) என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்ட்ரோம்போலி எரிமலை 1932-ம் ஆண்டு முதலே அடிக்கடி சீறி வருகின்றது. கடந்த 2 நாட்களாக இது புகையையும் […]
பெரு நாட்டில் வானத்தில் தொடர்ந்து உபினாஸ் எரிமலை சாம்பலை உமிழ்ந்து வருகின்றது. பெரு நாட்டில் பத்துக்கும் மேற்ப்பட்ட எரிமலை உள்ளன. இவற்றில் உபினாஸ் எரிமலை கடந்த வாரம் முதல் அடிக்கடி குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இரவு நேரத்தில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களில் காற்றில் கரும் புகையையும் சாம்பலையும் வெளியேற்றி வருகிறது. மக்கள் கண் எரிச்சல் சுவாச கோளாறால் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக எரிமலைக்கு அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை சில மாதங்கள் அல்லது ஓராண்டு வரை எரி குழம்புகளை ளஉமிலும் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் […]