குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியிலிருந்து குனியமுத்தூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளுக்கு குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கோவை பொள்ளாச்சி சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய […]
Tag: #Water
பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்டிகுப்பம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதிமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் […]
குடிநீர் வினியோகிக்க படாததால் காலி குடங்களுடன் சாலைக்கு வந்த பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் குடிநீரானது ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள எம்ஜிஆர் நகரில் சுமார் இரண்டு வாரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் நகராட்சி அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி பெண்கள் எம்ஜிஆர் நகர் அருகே […]
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வத்தல்பட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் கடந்த 25 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் இச்செயலால் மிகுந்த கோபம் அடைந்த கிராம மக்கள் கையில் காலிக்குடங்களுடன் […]
கேன் நீர் குடிக்கும் சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மெட்ரோ நகரங்களான சென்னை,கோயம்புத்தூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பெரும்பாலும் கேன் வாட்டர்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள், குடிநீர் கேன்கள், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் 187 மாதிரிகளை சென்னை மாநகராட்சி ஆய்வுக்கு அனுப்பியது. இதில், 40 மாதிரிகள் குடிப்பதற்கு தரமற்றவை என்றும், 30 மாதிரிகளில் […]
மேட்டூர் அணையில் இருந்து குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் ஆணைக்கு தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் தோன்றி சுமார் 860 கி.மீ பயந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் […]
உணவிற்கே மிக முக்கியமானது அரிசி. அவற்றை கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகுபடுத்த பயன்படுத்தலாம்…!! 1. அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு முடியை சுத்தம் செய்தால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. 2. இந்த அரிசி கழுவிய தண்ணீரில் ஏராளமான வைட்டமின், மினரல்ஸ்,அமினோ அசிட் இருப்பதாக தெரியவந்துள்ளது. 3. அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை பாதுகாக்கும் சத்துகள் இருக்கின்றன அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுக்கும். தளர்ந்து இருக்கும் சருமத்தை சரி செய்து விடும். […]
நீரும் ஒருவகை உணவு தான் என்று ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் அவர்களது அச்சம் தவிர்க்கவும், உடல்நிலையை பராமரிப்பதற்காக ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தொடர்ந்து உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது நாம் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் நீரும் உணவு தான் அதை தினமும் எட்டு முறை பருக வேண்டும் என்று […]
செங்கல்பட்டு அருகே தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க கோரி சாலை முன்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை அடுத்த பெரிய வெளிக்காடு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மிகப்பெரிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இந்த தொட்டிகளில் இருந்து மக்களுக்கு சரியாக நீர் விநியோகிக்கப்படுவது இல்லை. இதனால் சிறியவர்கள், பெரியவர்கள் பெண்கள், குழந்தைகள் என பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் […]
குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு உரிமம் வழங்குவதில்லை என்ற புகாரை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தை குடிநீர் உரிமையாளர்கள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சென்னையில் ஓரிரு நாள்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் குடிநீர் கடைகளுக்கு உரிமம் வழங்கப்படுவதில்லை என்ற புகார் முற்றிலும் பொய். SEMICRITIC மற்றும் NORMAL […]
குடிநீர் கேன் உரிமையாளர்களின் தொடர் போராட்டத்தினால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை எடுப்பதற்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க கோரி மூன்று நாட்களாக குடிநீர் கேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆலைகளில் இருந்து குடிநீர் கேன்கள் வெளி நபர்களுக்கு வினியோகிக்கப் படுவதில்லை. பெரும்பாலும் சென்னை மக்கள் கேன் குடிநீரையே நீராதாரமாக பயன்படுத்தி வந்த நிலையில், இதனால் அவர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்பது […]
வயதான முதியவர் ஒருவர் நாய் ஒன்றுக்கு தனது உள்ளங்கையில் தண்ணீர் பிடித்துவந்து கொடுத்து தாகம் தணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா (Susanta Nanda IFS) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வயதான முதியவர் ஒருவர் நீல நிற தொப்பி அணிந்து கொண்டு தெருநாய் ஒன்றுக்கு, அருகில் உயரமாக அமைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து உள்ளங்கையில் தண்ணீரை பிடித்து வந்து கொடுக்கிறார். பாவம் நாய் தாகத்தில் […]
தண்ணீரின் மகிமை மற்றும் அவற்றின் தேவை அனைவரும் அறிந்திருப்பர்,ஆனால் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன பலன் என்று அறிவீரா..? தண்ணீர் மிகவும் அவசியமானது என அனைவரும் அறிந்தது. தண்ணீர் தாகத்தை தணிப்பதோடு மட்டுமில்லாமல் நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் சீராக செயல்பட உதவுகிறது. அத்தகைய தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துக் கொள்ளும் பழக்கமானது […]
சென்னை பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை அடுத்த கண்டலூர் அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் மூலம் சென்னை பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் முதற்கட்டமாக 2 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது 3200 கன அடியாக உயர்த்தப்பட்டு திறந்துவிடப்படுகிறது. இதன்படி பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அங்கிருந்து […]
இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிட கூறிவிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை வீணாக திறந்ததற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக இரண்டாம் போக நெல் சாகுபடியை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பியே தொடங்குவர். அந்த வகையில் கடந்த வருடம் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கிய போதிலும் போதிய மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் படாமல் விவசாயிகள் […]
தண்ணீர் குடிப்பதே நன்மையை கொடுக்கும், அதிலும் செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் வைத்து குடித்தால் ஆரோக்கியத்தை கொடுக்கும்: செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து பாருங்கள், அறையில் இருக்கும் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து விடும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழும். ரத்தத்தில் செம்பு குறைபாடு ஏற்படும் பொழுது, ரத்த சோகை குறைகிறது. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் இருந்து கர்நாடக வரையிலான நிலப்பரப்பில் வளிமண்டலத்தில் காற்றழுத்த சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது . சென்னையை பொறுத்தவரையில் வானம் […]
அனைத்து உயிர் இனங்களும் – செடிகள் மற்றும் பிராணிகள் ஆகியவைகள் -உயிர்வாழ நீர் மிகவும் அவசியமாகும். அனைத்து ஜீவாராசிகளுக்கும் வளர்ச்சிதைவு இழப்பை ஈடு செய்வதற்கு தூய நீரைப் பருக வேண்டியது அவசியமாகிறது. மேலும் நாம் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடித்தால் அல்சர் பிரச்னை வராமல் தடுக்கலாம். குடல் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 4 மாதங்களில் 4வது முறையாக நிரம்பி வழிகிறது . நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானி ஆறு மற்றும் மாயா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது .105அடி உயரம் உள்ள அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது .அணைக்கு 1935 கன அடி நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் நிலையில் 3100 கனஅடி வெளியேற்றப்பட்டுள்ளது . 1955ஆம் ஆண்டு முதலாக அணை வரலாற்றில் முதன்முறையாக 4மாதங்களாக அணை முழு […]
கேன்களில் அடைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான ஒழுங்குமுறை சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உணவு தரக்கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழா, சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரபிரபு தலைமையில் நடைபெற்றது . தலைவர் அனந்தநாராயணன், அன்பு, ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உணவு தரக்காட்டுப்பாட்டு ஆணைய மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் கலந்து […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீன் வெட்டிப்பாறை அருவியில் பல வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் கொட்ட தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கையின் அழகை பெற்ற சுற்றுலா தளமான செண்பகத்தோப்பு பகுதியில் மீன் வெட்டிப் பாறை, சறுக்குப் பாறை முதலிய அருவிகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு பிறகு பெய்த தொடர் மழையால் . மீன் வெட்டிப் பாறை, சறுக்குப் பாறை முதலிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. அருவியில் குளித்தும், சறுக்கி விளையாடியும், […]
பவானிசாகர் அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடித்து வரும் நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் பாசனத்திற்கு திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் அமைந்துள்ள பவானிசாகர் அணை 105அடி உயரத்தையும் 32.8டி.எம்.சி கொள்ளளவையும் கொண்டுள்ளது .அணையின் நீர் பிடித்த பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கடந்த மதம் நவம்பர் 8ஆம் தேதி முழு கொள்ளளவை பவானிசாகர் அணையில் இருந்து உபரி திறக்கப்பட்டு வருகிறது .இன்று கால நிலவரப்படி அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு […]
கேரளாவில் உள்ள பள்ளிகளில் தண்ணீரை குடிக்க பெல் அடிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவனின் வாக்கு. அதன்படி பார்த்தால் உலகு மட்டுமின்றி உடலும்தான். நம் உடலின் இயக்கங்களுக்கு தண்ணீர் அத்தியாவசியமானது. தண்ணீரின் தேவை மனித உடலுக்கு அவசியம் என்பதை உணர்ந்த கேரள அரசு அதற்காக ஒரு திட்டத்தையே வகுத்துள்ளது.அத்திட்டத்தின்படி, கேரளாவில் பள்ளி மாணவ-மாணவிகளை தண்ணீர் குடிக்க வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பாடவேளைகளில் நேரம் ஒதுக்கி தண்ணீர் பருக வைக்கிறார்கள் ஆசிரியர்கள். பள்ளிக்கு […]
சத்துக்கள் வீணாகாமல் சமைப்பது எப்படி? காய்களை எப்போதும் கழுவிய பின் நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவினால் அதில் உள்ள சத்துகள் வீணாகும். அதிக வெப்பத்தில் உள்ள எண்ணெயில் உணவை பொறிக்கும் பொழுது அதிகளவில் சத்துகள் வீணாகிறது.முடிந்த வரை உணவை வேகவைத்து உண்பது நல்லது . தேவையான அளவு தண்ணீர் வைத்து அது கொதித்தவுடன் உணவுப் பொருட்களை போட்டு சமைப்பது நல்லது .இல்லை எனில் சத்துக்கள் வீணடிக்கப்படும் . பாத்திரத்தை மூடி சமைப்பதால் சத்துக்கள் வீணாவது குறைக்கப்படுகிறது. […]
உடல் சூட்டை தணிக்கும் வழி முறைகள் : தினமும் இருவேளை குளிக்க வேண்டும் .குளிர்ந்த பொருட்கள் சாப்பிடவோ , குடிக்கவோ கூடாது . காரமான உணவுகள் வேண்டாம் .பதப்படுத்தப் பட்ட பொருட்கள் சாப்பிட கூடாது .மாமிச உணவுகளை சாப்பிட கூடாது . எண்ணெய் பலகாரங்கள் கூடாது .மாதுளை ,முள்ளங்கி ,வெள்ளை பூசணி , தர்பூசணி , வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம் . நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் .இளநீர் , எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்து வரலாம் .காலையில் […]
பன்னீர் தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் எலுமிச்சை பழம் – 1 செய்முறை : அடுப்பில் கடாயை வைத்து பாலை ஊற்றி கொதி வரும் போது எலுமிச்சை சாறை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி கொண்டே இருக்க வேண்டும் . பன்னீர் தனியே பிரிந்து வரும் வரை கிளறி வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து அலசி மீண்டும் வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இப்போது சூப்பரான பன்னீர் தயார் !!!
கர்நாடகாவில் இருந்து காவேரிக்கு உறுதியாக தண்ணீர் வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்படுவதால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணிர் நிச்சயம் வரும் என்று தெரிவித்தார். மேலும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு என […]
தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது . கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ,அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பில் உறுப்பினர்கள் பங்கேற்றனர் . இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு, […]
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பவானி சாகர் அணையில் நீர் வரத்து 2301 கன அடியாக உயர்ந்துள்ளது . ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானி சாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டி எம் சி கொள்ளளவும் கொண்டது .இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளிலும் […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1964 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மொத்தம் 105 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 58.50 ஆக இருந்ததையடுத்து, […]
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ தமிழகத்துக்கு வெறும் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியது. இந்நிலையில் கடந்த 25_ஆம் தேதி டெல்லியில் உள்ள சேவா பவனில் […]
ஜூன் , ஜூலை காவேரியில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை கொடுக்க காவேரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ தமிழகத்துக்கு வெறும் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியது. இது குறித்து கர்நாடகா_விடம் […]
உலகம் முழுவதும் 220 கோடி பேர் காதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பதாக ஐநா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவ மழை போதிய அளவு பெய்யாமல் இருந்ததால் இந்தியாவில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகின்றது. மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கடுமையாக அவதிப்படுகின்றனர். வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் வீதியெங்கும் அலைந்து திரிகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமும் , ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான யூனிசெப் அமைப்பும் இணைந்து ஆய்வு ஒன்றினை நடத்தியது.அந்த ஆய்வில் கடந்த […]
காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் வால்விலிருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை அடுத்துள்ள காவனூர் எனும் பகுதியில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் காவிரி கூட்டுக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் பல லட்சம் அளவிலான நீர் வெளியாவதாகவும் பலமுறை புகார் அளித்தும் மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாதத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்று நீர் நிரம்பி பல லட்சம் லிட்டர் அளவில் தண்ணீர் வீணாவதாகவும். குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் வீணாகும் […]
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் நாள்தோறும் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என தனியார் பள்ளியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கத்ரி எனும் தனியார் பள்ளியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், நகராட்சியிடம் இருந்து குடிநீர் பெற்று தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்து வந்தனர்.இந்நிலையில் குடிநீர் விலை அதிகரித்ததாலும், நகராட்சி பொதுமக்களுக்கு அதிகளவில் தண்ணீர் தரவேண்டியிருப்பதால், பள்ளிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை இதனால் அப்பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர் […]
சந்து பொந்து எல்லாம் சென்று மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை வீரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.இந்த ஆண்டுக்கான 100% பருவ மழையில் 40% தான் மழை பெய்துள்ளது. 60 சதவீதமான மழை இல்லை. பாதிக்குமேல் பருவமழை கிடையாது. இந்த சூழ்நிலையில் வைத்துக்கொண்டு அரசு சமாளித்து வருகிறது. எனவே யாரும் இதில் அரசியல் செய்வது என்பது […]
தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு பெண்ணின் முகத்தில் வெட்டிய சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை பல்லாவரத்தை அடுத்த அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் சுபாஷினி மற்றும் மோகன் இவர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதே பகுதியில் வசித்து வருபவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் இவர் தலைமைச் செயலக பணியாளர் மற்றும் சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார் […]
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் ஒரே நாளில் நீர் மட்டம் ஆனது 8 அடி உயர்ந்து 20.40 அடியாக அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது . இதன்படி தற்போது அணையின் நீர்வரத்து 1153 கன அடியாக உள்ளது. மேலும் அதே நெல்லை மாவட்டத்தில் இருக்கக்கூடிய தென்காசி பகுதியில் சாரல் விழுந்து […]
ஓடும் பேருந்தில் பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் நடத்துனரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர் . மதுரை to தஞ்சை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் திருஞானம்.கோடை வெயில் சுட்டெரிப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குஆளாகுவதையும் , தண்ணீரின்றி கஷ்டப்படுவதையும் வெகுநாட்களாக கண்டு வந்துள்ளார் திருஞானம் . இதனால் வேலைக்கு புறப்படும் முன்பே தனது வீட்டிலிருந்து சுமார் இருபது பாட்டில்களுக்கும் மேல் தண்ணீர் எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்வார். பேருந்தில் களைப்புடன் மற்றும் தண்ணீர் […]
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் குதிரைகள்,மான்கள், குரங்கு உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் அங்குள்ள நீர்நிலைகள் தற்போது வறட்சி அடைந்து காணப்படுகின்றது. . இதனால் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை வரவழைத்து அங்குள்ள தொட்டிகளில் நிரம்புகின்றனர்.
மதுராந்தகம் அருகில் குடிநீர் கேட்டு மக்கள் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரையபாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடடும்பங்கள் வசித்துவருகின்றனர் இவர்களுக்கு பாலாற்று ஆழ்துளை கிணறு வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன் பைப்லைனில் பழுது ஏற்பட்டதால் அதை சீர்செய்ய வேண்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரம் குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்ட காரணத்தால் கோபமடைந்த மக்கள், மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் சாலையில் குடங்களுடன் […]
கன்னியாகுமரி, திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் . தொடர்ந்து பெய்த கனமழையால், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குளுகுளுவென கொட்டித்தீர்க்கும் அருவியில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள், குளியலிட்டு மகிழ்ச்சியில் பூரிப்படைந்துள்ளனர் .
ஆத்திகுளம் அருகில் கண்மாயில் குளிக்க சென்ற 9-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆத்திக்குளத்தை சேர்ந்த அஜய் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை காரணமாக தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றார்.நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படை […]
குடிநீர் வழங்க கோரி வெங்கத்தான்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அடுத்து வெங்கத்தான்குடி ஊராட்சி ஆற்றங்கரை தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தென்பரை பாமணி ஆற்று படுகையில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணற்றின் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கைப்பம்பு மூலம் வரும் உப்பு நீரை தான் […]