குடிநீர் பிரச்சனையால் அவதிப்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காந்திநகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் காந்திநகர் பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட மின்மோட்டார் பழுதடைந்த காரணத்தால் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் கோபமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலையில் […]
Tag: water problem
தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் 3 பேர் இணைந்து ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வ்ல்லாரோடை கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது சரஸ்வதிக்கும், அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரது மனைவியான வேலுமணி என்ற பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இரு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை […]
குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல முக்கிய பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் பல முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம், ஆலங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இவ்வாறு சாலையில் வீணாக வெளியேறும் தண்ணீரை […]
சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறை மடையூர், அரசூர், ரெட்டியார் நகர், அமனலிங்காபுரம், கோடங்கிபட்டி போன்ற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆழியாற்றில் இருந்து தண்ணீரை எடுத்து கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீராக வழங்குகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு […]
குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனத்தை சிறை பிடித்ததால் பழனி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகில் இருக்கும் ஜவகர் நகரில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கோதைமங்கலம் ஊராட்சிக்கு பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அவர்கள் ஆத்திரமடைந்து பழனி தாராபுரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
தனது வீட்டில் குடிநீர் வராத கோபத்தில் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புலிவந்தி பகுதியில் பாலமுருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி நின்று ஏதோ செய்து கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் அவரிடம் குடிநீர் தொட்டியில் ஏறிக்கொண்டு என்ன செய்கிறாய் என்று வினவியுள்ளனர். அதற்கு பாலமுருகன் தனது வீட்டில் குடிநீர் வராததால் இந்த தொட்டியில் விஷம் […]