ஆபத்தான நிலையில் இருக்கும் நீர்த்தேக்க தொட்டியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள திப்பணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இந்த நீர்த் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து காணப்படுகிறது. அதன் தூண்களின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக ஆபத்தான நிலையில் இருக்கும் […]
Tag: Water tank
பயனற்று கிடக்கும் நீர் தொட்டியை அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் 1-ஆம் மையில் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பள்ளி வளாகத்திற்குள் அமைக்கப்பட்ட தரைத்தள குடிநீர் தேக்க தொட்டி எந்தவித பயனும் இன்றி காணப்படுகிறது. இதனால் அங்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்களின் […]
திருவெண்ணைநல்லூர் அருகே தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் அறிவழகன். இவருடைய மனைவி வித்யா. இவர்களுக்கு ஹரிணி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. ஹரிணியும் அவளது தாய் வித்யாவும் மாலையில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது இரண்டு வயது குழந்தையான ஹரிணி பூ பறிப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி […]