காட்டெருமை தாக்கியதால் வனக்காப்பாளர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மசினகுடி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உப்பள்ளா என்ற இடத்தில் புதர் மறைவில் நின்ற காட்டெருமை வனத்துறையினரை நோக்கி ஓடிவந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் தப்பி ஓடினர். ஆனால் காட்டெருமை வன காப்பாளரான சசிதரன் என்பவரை முட்டி தள்ளியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் வன ஊழியர்கள் சத்தம் போட்டு காட்டெருமையை விரட்டினர். […]
Tag: Wild animal attack
கரடி தாக்கியதால் பெண் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் மேல் பிரிவு பழைய பாடி பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபிதா குமாரி(19) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று சபிதாகுமாரி அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த போது தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் பதுங்கி இருந்த கரடி திடீரென அவரை நோக்கி ஓடி சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சபிதா […]
குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கும் பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி அப்பகுதிக்குள் நுழைந்து வீட்டின் தடுப்பு சுவரை ஏறி உள்ளே குதித்து சென்றது. இதனை அடுத்து நாய் குரைக்கும் சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது வெளியே கரடி உலா […]
பசுமாட்டை புலி அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்லையன் புரம் பகுதியில் விவசாயியான நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மெய்ச்சலுக்கு விட்டு சென்ற மாடுகளை நாகலிங்கமாவின் மகன் மகேஷ் என்பவர் பார்க்க சென்றுள்ளார். அப்போது மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து வனப்பகுதிக்கு இழுத்து சென்றது. பின்னர் காட்டுப்பகுதியில் கடித்துக் கொன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி கிராம […]
கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிபாறைஎஸ்டேட் பகுதியில் கூலித்தொழிலாளியான தங்கம்(54) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கம் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அவர் இஞ்சிபாறை எஸ்டேட் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது புதரில் இருந்து வெளியே வந்த கரடிகள் தங்கத்தை தாக்கியது. இதனால் தங்கம் அலறி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கரடிகளை விரட்டியடித்தனர். இதனை அடுத்து […]