தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கரடி மசாலா பொடி வியாபாரியான வைகுண்டமணி(58), அதே பகுதியில் வசிக்கும் நாகேந்திரன்(56), அவரது சகோதரர் சைலப்பன்(50) ஆகியோரை கடித்து குதறியது. இதனால் முகம் சிதைந்து படுகாயமடைந்த மூன்று பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் வனத்துறையினர் காட்டுப்பகுதிக்கு சென்று கரடியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு […]
Tag: Wild animal death
பாறையில் இருந்து தவறி விழுந்து மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று காலை கொடைக்கானல்-பழனி மலை பாதையில் பி. எல். செட் அருகே ஒரு மான் இரைத்தேடி வந்தது. இந்நிலையில் அங்குள்ள பாறையில் ஏற முயன்ற போது நிலைதடுமாறி மான் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மானை மீட்டு சிகிச்சை […]
கார் மோதிய விபத்தில் காயமடைந்த புள்ளிமானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி விநாயகர் கோவில் அருகே இருக்கும் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது. அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரியான குருராஜ் என்பவர் ஓட்டி சென்ற கார் புள்ளி மான் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் புள்ளிமானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து குருராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் […]