உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். நேற்று முன்தினம் பெர்ன்ஹில் ரயில்வே விருந்தினர் மளிகை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டெருமை படுத்து கிடந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் […]
Tag: wild buffalo
காட்டெருமை தாக்கியதால் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பன்னிமேடு எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்கள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த காட்டெருமை மணிகண்டன் என்பவரை முட்டி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனை […]
காட்டெருமைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் வனவிலங்குகள் நடமாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் சாலையில் கூட்டமாக நிற்கிறது. அதிலும் சில காட்டெருமைகள் சாலையில் நின்றுகுட்டிகளுக்கு பாலூட்டி கொண்டிருக்கிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது இரவு நேரத்தில் குட்டிகளுடன் காட்டெருமைகள் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனை அடுத்து […]
வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் வெளியே கொண்டு வந்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் தன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குட்டியுடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டெருமை திடீரென நிலை தடுமாறி தன்ராஜின் வீட்டு மேற்கூரையை உடைத்து கொண்டு வீட்டிற்குள் விழுந்துவிட்டது. இதனை அடுத்து வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையால் வெளியே வர இயலவில்லை. அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் […]
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த காட்டெருமை விவசாய பயிர்களை மிதித்து அட்டகாசம் செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டெருமை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி பேபி நகருக்குள் புகுந்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அடித்து பிடித்து ஓடினர். இதனையடுத்து அந்த காட்டெருமை நீண்ட நேரமாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து விவசாய பயிர்களை மிதித்து […]
ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளியை காட்டெருமை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுகுன்றா எஸ்டேட் மேல் பிரிவு பகுதியில் குமார் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது சொந்த வேலைக்காக வால்பாறைக்கு சென்றுவிட்டு மீண்டும் சிறுகுன்றா எஸ்டேட் மேல் பகுதிக்கு ஸ்கூட்டியில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது ஸ்கூட்டி தேயிலைத் தோட்டப் பகுதி வழியாக சென்று கொண்டிருக்கும் போது, திடீரென அங்கு வந்த காட்டெருமை இவரது ஸ்கூட்டியை முட்டித் தள்ளியுள்ளது. இதில் படுகாயமடைந்த […]