ரஜினியை வரவேற்கிறோம், மக்கள் பணியாற்ற வேண்டும், மக்கள் அங்கீகாரம் கொடுப்பதை மக்களோடு சேர்ந்து நாங்களும் பார்ப்பதற்கு ஆர்வத்தோட இருக்கிறோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பத்தாவது நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் […]
Tag: wishes
நீங்கள் ஒவ்வொரு முறையும் சிரிக்கும்போதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்து விளையாடும் போதும் பாடும் போதும் அம்மா என்று கூப்பிடும் போதும் எனது மனம் உருகிவிடுகிறது என சன்னி லியோன் தனது இரு மகன்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் தனது மகன்கள் அம்மா என்று கூப்பிடும்போது மனம் உருகிவிடுவதாக சன்னிலியோன் கூறியுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த […]
அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும் வளங்களும் பெருகட்டும் என்று முதல்வர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தீப ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் என்னும் அரக்கனை அன்னை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இத்தீபாவளி திருநாள், தீமைகள் […]
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவராக செயற்பட்டு வந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வை பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர். ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை @DrTamilisaiBJP வாழ்த்துகிறேன். — வைரமுத்து (@Vairamuthu) September 1, 2019 இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது […]
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தெலுங்கானா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜப்பான் மக்கள், தங்கள் புதிய மன்னருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜப்பானின் மன்னராக இருந்த அகிட்டோ, வயதான காரணத்தால் ,பதவி விலகியதால் மன்னரின் மூத்த மகன், நொருகிட்டோ புதிய மன்னராக பதவி ஏற்றார். டோக்கியோ நகரில் உள்ள அரண்மனையில் ,கூடும் மக்கள் மன்னரை வாழ்த்தி முழக்கமிட்டு வாழ்த்தி வருகின்றனர். மன்னரும், ராணியும் மக்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் .