அம்மிக் கல்லால் கணவனை கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குச்சிபாளையம் காலனி தெருவில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஹோட்டலில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் 4 வருடங்களுக்கு முன்பாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அதன்பின் மனைவியை பார்ப்பதற்காக இளையராஜா வந்த நிலையில் கொடூரமான முறையில் […]
Tag: women arrested
பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மும்முனை சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பேருந்திலிருந்து இறங்கி வந்த பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவரை விசாரணை நடத்தியதில் அவர் சித்தால் கிராமத்தில் வசிக்கும் பச்சையம்மாள் என்பதும், புதுச்சேரி பகுதியில் இருந்து மதுபாட்டில்களை பேருந்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய இருந்ததும் காவல்துறையினருக்கு […]
பெட்டிக் கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.புதூர் கிராமத்தில் இருக்கும் பெட்டி கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மீனா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 21 புகையிலை பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் முன்னிலையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தியாகராஜபுரத்தில் வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்த அதே ஊரில் வசிக்கும் மொட்டையம்மாள் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 30 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.