நகராட்சியை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு சங்கம் சார்பாக நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட செயலாளர் சரவணன், முருகேசன் மற்றும் சின்ன கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கூட்டமைப்பு தலைவர் ரங்கன் தொடங்கி வைத்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குப்பைகள் கொட்ட இடம் ஒதுக்கித் தருமாறும், பேட்டரி வண்டிகளை நகராட்சி நிர்வாகமே […]
Tag: workers struggle
குறைகளை சொல்வதற்காக வந்த பணியாளர்களை அலுவலர் உள்ளே அனுமதிக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சியில் நடக்கும் பல திட்டப்பணிகளை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் மண்டல இயக்குனர் சசிகலா ஆகியோர் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதிகாரிகளை சந்தித்து தங்களின் குறைகளை சொல்வதற்காக அலுவலகத்திற்கு 100-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் வந்துள்ளனர். ஆனால் அவர்களை நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி ஒருமையில் பேசி அதிகாரிகளை சந்திக்க விடாமல் தடுத்ததாக […]
17-வது நாளாக தொழிளார்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையானது கடந்த 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இதனை அடுத்து அரவை பருவத்தை தொடங்க வேண்டியும் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க கோரியும், 30-க்கும் அதிகமான தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 17-வது நாளாக கஞ்சி காய்ச்சி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சர்க்கரை ஆலையை திறக்க வேண்டி தொழிலாளர்கள் 6-வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூரில் உள்ள வடபுதுபட்டில் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையானது அமைந்திருக்கிறது. இந்த சர்க்கரை ஆலை கடந்த மூன்று வருடங்களாக இயங்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த வருடம் அரவை பருவம் 2021-22 தொடங்க வேண்டும் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்க கோரியும் மற்றும் 50 ஆயிரம் மெகா டன் போதிய கரும்பு உள்ள நிலையில் தமிழக அரசு அலையை […]
வேலைக்கான சம்பளம் வழங்காத காரணத்தினால் ஊழியர்கள் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகராட்சியில் 100-க்கும் அதிகமான நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் எல்லோருக்கும் கடந்த அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்காமல் இருந்து வருகிறது. இதனால் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று காலம், தொடர் தடுப்பூசி முகாம்கள் என விடுமுறை இன்றி வேலை பார்த்து வரும் தங்களுக்கு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி ஆகியும் அக்டோபர் […]
மாவட்ட கலெக்டரை நேரில் சந்திப்பதற்காக சென்ற தொழிலாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக 100-க்கும் அதிகமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஒன்று கூடி வந்துள்ளனர். அதன்பின் அவர்கள் அனைவரும் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயற்சித்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரிடம் நேரில் சந்தித்து மனு அளிக்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். அதன்பேரில் முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை நேரில் […]