புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் தெற்கு தெருவில் முகமது பதுருதீன்-பவுசியா பீவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிபானா பஸ்லீம்(23) என்ற மகள் உள்ளார். இவருக்கு சதாம் உசேன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்த சிபானா பஸ்லீம் 1000-க்கும் மேற்பட்ட குடியரசு தினம், சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெண்களுக்கான விழிப்புணர்வு, கொரோனா விழிப்புணர்வு, இயற்கை காட்சிகள் உள்பட பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்துள்ளார். இதனால் “விரிஷா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்” […]
Tag: World record
உலகில் அதிகமானோரின் கெட்ட பழக்கம் என்னவென்றால் கோபம் வரும்போது கையில் கிடைக்கும் பொருளை தூக்கி வீசுவது தான். அது மொபைல் போன்-ஆக இருந்தாலும் கூட தூக்கி எறிந்து விடுவார்கள். அப்படி இருக்கையில் நீங்கள் உங்கள் மொபைல் போனை FINLAND நாட்டில் தூக்கி எறிந்தால் உங்களுக்கு ஒரு பெரிய பணத்தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதனை கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதா..? ஆம், கடந்த 22 வருஷமாக FINLAND நாட்டில் நடத்தப்பட்டு வருகிற போட்டிகளில் MOBILE PHONE THROWING-யும் உண்டு. இதில் […]
நெல்லை மாவட்டத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் புத்தகம் வாசித்து உலக சாதனை படைத்தனர். நெல்லை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி 1ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள வாஉசி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ள இந்த திருவிழாவின் ஒரு பங்காக உலக சாதனை படைக்க தொடர் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. 520 பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்து வருகின்றனர். இந்நிலையில்பார்வை மாற்றுத்திறனாளிகள் இருவர் […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரோபோக்கள் மூலம் மர கன்றுகளை நடுவதில் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் இயங்கி வரும் தனியார் ரோபோடிக் நிறுவனத்தில் பயின்று வரும் 326 மாணவர்கள், 326 ரோபோக்களை கொண்டு கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். தாங்கள் வடிவமைத்த ரோபோடிக் கருவியின் மூலமாக மா,நெல்லி, புளி, வேம்பு உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில நட்டனர். உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே […]
உலக நாடுகளின் கொடிகளை பார்த்தவுடன் அவற்றின் பெயர், இந்திய நாட்டின் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களைக் கண்டவுடன் அவர்களின் பெயர்களைக் கூறி அசத்தி ஒன்றரை வயதில் உலக சாதனை புரிந்த தேனியைச் சேர்ந்த சிறுவன் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு தேனி அருகே உள்ள ரத்தினம் நகரைச் சேர்ந்தவர் வருசை பீர் மைதீன் – நபிலாபேகம் தம்பதியினர். இவர்களது இரண்டரை வயது குழந்தை முகமது நதீனிடம் குழந்தைப் பருவத்திலேயே பழங்கள், பூக்கள் படங்களைக் காட்டி அதன் பெயர்களைக் […]
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், கின்னஸ் சாதனைக்காக இந்தியாவில் உள்ள 501 கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்தவர்கள் பாண்டித்துரை, கார்த்திகேயன். சகோதரர்களான இவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக இந்தியாவில் உள்ள பழமையான 501 கோயில்களுக்குச் செல்ல சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இந்த சுற்றுப்பயணத்திற்காக எடுத்து கொண்டுள்ள மொத்தப் பயணத்தொலைவு 13,000 கி.மீ ஆகும். நவம்பர் 7ஆம் தேதி தங்கள் கின்னஸ் பயணத்தைத் தொடங்கிய இவர்கள், இதுவரை சுமார் 28 […]
அன்னை தெரசாவின் ஓவியத்தை ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து உருவாக்கி கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளார். புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் . இவர் அன்னை தெரசாவின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு சாதனை ஒன்றை மேற்கொண்டுள்ளார் . இவர் 8500 சதுர அடியில் அன்னை தெரசாவின் ஓவியத்தை வரைந்து , அவ்ஓவியத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு ரூபாய் நாணயங்கள் வைத்து சாதனை புரிந்துள்ளார். மேலும் , அன்னை தெரசாவின் சேவை மனப்பான்மையை அனைவரும் பின்பற்ற […]