பன்னாட்டு டெலிவரி நிறுவனமான ’ஃபெட் எக்ஸ்’ சென்னையைச் சுற்றியுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு தங்களது சேவையை விரிவுபடுத்த முயற்சி மேற்கொண்டுவருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு டெலிவரி நிறுவனமான ஃபெட் எக்ஸ் சரக்கு போக்குவரத்து மற்றும் பொருட்கள் விநியோகத்தில் முன்னணியில் உள்ளது. உலக வர்த்தக சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் இந்நிறுவனம், இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கும் சென்னையில் தங்களது சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னையிலிருந்து ஆட்டோ மொபைல், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், மருந்துப் […]
Tag: World
ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் இந்துக்களுக்கு எதிராக பதாகை வைக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் ஆளுங்கட்சி பிரமுகர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். பாகிஸ்தானில் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்லாப் கட்சியைச் சேர்ந்தவர் அக்ரம் உஸ்மான். இவர் கட்சியில் லாகூர் பொதுச்செயலாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு விளம்பர பதாகை ஒன்றை நிறுவியிருந்தார். அந்த பதாகை இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி அமைந்திருந்ததாக சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் […]
ஏமனில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்துள்ளார். ஏமனில் அமெரிக்க வீரர்கள் நடத்திய தாக்குதலில் காஸிம் அல் ரிமி மற்றும் அய்மன் அல் ஹவகரி ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்கள் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஏமன் பகுதி தலைவராகவும், துணை தலைவராகவும் இருந்தவர்கள். இதுமட்டுமின்றி அரேபியன் பெனிசுலா என்ற இயக்கத்தையும் நடத்திவந்தனர். இந்த இயக்கத்தின் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் இருவரும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதனை […]
ஜப்பானில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கட்சுனோபு கேதோ கூறினார். சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகையால் இங்குள்ள வெளிநாட்டினர் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர். ஜப்பான் அரசும் சுகாதார அவசரநிலையை அறிவித்து சீனாவில் சிக்கியுள்ள ஜப்பானியர்களை மீட்டுவருகிறது. அந்த வகையில் ஹாங்காங்கிலிருந்து 273 ஜப்பானியர்கள் விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. தற்போது […]
அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கொன்றவழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஆபேல் ஓச்சோவா (Abel Ochoa) என்ற நபர் ஒருவர் கொகைன் போதை மருந்துக்கு அடிமையானதால் தனது மனைவி மற்றும் 2 மகள்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்று விட்டான். மேலும் மாமனார், மைத்துனி ஆகியோரையும் கொலை செய்தான். இதையடுத்து அவன் மனைவியின் காரில் தப்பிச் சென்று கொண்டிருந்தான். அப்போது வழிமறித்த […]
அல்கொய்தா அமைப்பின் துணை தலைவன் குவாஸிம் அல் ராய்மி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவாஸிம் அல் ராய்மி (Qasim al-Raymi0) தலைமையின் கீழ் இருக்கும் அல்கொய்தாவின் அராபிய வளைகுடா பிரிவு பயங்கரவாதிகள் யேமனில் உள்ள அப்பாவி மக்களுக்கு எதிராக தீவிர வன்முறையில் ஈடுபட்டதாகவும், அமெரிக்கா மற்றும் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை தூண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலில் துணை தலைவன் ராய்மி கொல்லப்பட்டிருப்பது, […]
ஆஸ்திரேலியாவில் பெண் செய்தியாளர் ஒருவர் தனது தோளில் மலைப்பாம்பை வைத்து கொண்டு செய்தி அளித்து கொண்டிருந்தபோது சீரியதால் அவர் பயந்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் சாரா கேட் ( Sarah Cawte) என்ற பெண் ஒருவர் நைன் நெட்வொர்க் சேனலில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பாம்புகளின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து சிறப்பு செய்தியை வழங்குவதற்காக வாகா வாகா (Wagga Wagga) என்ற பகுதியில் உள்ள ஒரு பாம்பு பண்ணைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் தனது […]
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டாக்ஸி ஓட்டுநர் மருத்துமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் அனுதின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சீனாவில் மட்டும் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு […]
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மாபெரும் வரலாற்றுப்பிழையை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள முசாபராபாத் மாகாணத்தில் உள்ள சட்டப்பேரவையில் அந்நாட்டின் முதலமைச்சர் இம்ரான் கான் இன்று உரையாற்றினார். அந்த உரையின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் இம்ரான். குறிப்பாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து பேசிய அவர், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் […]
கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பனிச்சரிவில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 33 பேர் உயிரிழந்திருப்பதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். கிழக்கு துருக்கியில் குளிர்காலம் என்பதால் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே பனிச்சரிவுகள் ஏற்பட்டு, விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது. நேற்று வேனில் பயணம் செய்த ஒன்பது பேர் இந்தப் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து ஆளுநர் மெஹத்ன் எமின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இதுவரை பனிச்சரிவில் சிக்கிய 14 மீட்புப் படை வீரர்களின் உடல்களும் ஒன்பது பொதுமக்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. […]
75 படங்கள், 92 நடிப்புக்கான அங்கீகாரம் என சூப்பர்ஸ்டார் என்ற பெயர் வருவதற்கு முன் சிறந்த நட்சத்திரமாக ஜொலித்தவர் கிர்க் டக்ளஸ், தனது இறுதி மூச்சை விடுத்து இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளஸ் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 103. சூப்பர்ஸ்டார் என்ற பெயர் வழக்கில் வருவதற்கு முன்பே நட்சத்திர நடிகராக ஜொலித்த கிர்க் டக்ளஸ் உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இவரது மறைவை நடிகரும், கிர்க் டக்ளஸின் மகனுமான மைக்கேல் டக்ளஸ் […]
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பிரதியை (நகலை) எடுத்து நான்சி பெலோசி கிழித்து விட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் இருக்கும் கேபிட்டல் கட்டிடத்தில், செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (ஸ்டேட் ஆப் தி யூனியன்) நடைபெற்றது. இதில் அதிபர் டொனால்டு டிரம்ப் 3-ஆவது முறையாக உரையாற்றினார். சுமார் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் ட்ரம்ப் உரையாற்றினார். இந்த உரையின் போது, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி […]
மலேசியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த சிறுமி முற்றிலும் குணமடைந்துவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் தெரியும். இந்த வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து தான் முதலில் பரவ தொடங்கியது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா, மலேசியா உள்பட 23 நாடுகளுக்கு சரசரவென வேகமாக பரவி விட்டது. எப்படியாவது கொரோனா பரவுவதை தடுத்துவிட வேண்டும் என உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு விதமாக மருத்துவ […]
ஆண் ஒருவரின் தலைக்குள் இருந்த நாடா புழுவை சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில மாதங்களாகவே கடும் தலைவலி இருந்துவந்துள்ளது. கடந்த ஆண்டு, கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த அவர், திடீரென்று மயங்கி விழுந்தார். அப்போது மருத்துவமனையில் அவருக்கு எம்.ஐ.ஆர். ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஸ்கேனில் அவரது தலைக்குள் நாடா புழு இருந்ததைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தலைக்குள் இருந்த நாடா புழுவை அகற்ற, மிகவும் சிக்கலான […]
கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,000 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கலிஃபோர்னியா […]
பிக் பாஷ் டி20 தொடரின் இறுதி போட்டி ஒருவேளை மழையால் ரத்தாகும் பட்சத்தில், இப்போட்டி சிட்னி சிக்சர்ஸ் அணியின் சொந்த மண்ணில் நடைபெறுவதால் அவர்களுக்கே கோப்பை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போல, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளன. பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சிட்னி சிக்சர்ஸ் அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மெல்போர்னில் […]
இந்தாண்டு ஆஸ்திரேலியாவிலும், அடுத்தாண்டு இந்தியாவிலும் நடைபெறும் அடுத்தடுத்த இரண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் தான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருப்பேன் என இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஐசிசியின் விதிமுறைப்படி கடந்த ஆண்டு தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது. கிரிக்கெட்டை கண்டுப்பிடித்த நாடு இதுவரை உலகக் கோப்பை வெல்லவில்லையே என்ற பேச்சுக்கும் மோர்கன் அண்ட் கோ முற்றுப்புள்ளி வைத்தது. இதைத்தொடர்ந்து, வரும் […]
உலகையே அச்சுறுத்தி உலா வந்துகொண்டிருக்கும் கொடிய கொரானா வைரஸ். அப்படினா என்ன ? எப்படி வந்தது ? ஏன் ? இப்படியெல்லாம் உலகமே யோசித்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது அது குறித்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த நோய் குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓலை சுவடிகளில் சித்தர்களால் கூறப்பட்டுள்ளது . என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? ஆம் …உண்மை..! இப்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி சித்தர் […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. நாளுக்கு நாள் இந்த கலாச்சாரம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. அந்த வகையில், டெக்ஸாஸ் மாகாணத்தின் காலேஜ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஏ அண்ட் எம் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல்கலைக் கழக விடுதிகளில் ஏராளமான மாணவர்கள் தங்கியுள்ள நிலையில், திடீரென பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. […]
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர். கென்யாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ககமிகா நகரில் தொடக்கப் பள்ளி ஓன்று உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பலர் ஒருவர் மீது மற்றவர் விழுந்ததில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு 14 குழந்தைகள் […]
கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,400 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் […]
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், சீன கால்பந்து கிளப் அணிகள் ஆடவுள்ள ஏ.எஃப்.சி. சாம்பியன்ஸ் லீக் தொடரின் குரூப் சுற்றுப்போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை இந்த வைரஸுக்கு 492 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையான பரிசோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். […]
நான்கு மாதமாக நடைபெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 536 பேர் உயிரிழந்ததாக ஈராக்கில் சுதந்திரமாக செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. பாக்தாத், மத்திய மற்றும் தெற்கு ஈராக் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. சீர்திருத்தங்களை மேற்கொண்டு ஊழலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் எனவும் போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் இந்த […]
தான்சானியாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தான்சானியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் கிளிமாஞ்சாரோ பிராந்தியம் உள்ளது. இந்த பிராந்தியத்தில் தான் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம், வாம்போசா என்ற நபர் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தியபின், கையில் இருக்கும் குடுவையில் புனித எண்ணெய் இருப்பதாக கூறிவிட்டு, அதனை தரையில் ஊற்றினார். பின்னர் அந்த எண்ணெய்யை யாரெல்லாம் தொடுகிறார்களோ அவர்களுக்கு இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகும் என்று கூறியுள்ளார். அவர் […]
70 ஆண்டுகளில் இல்லாத வகையில், வெட்டுக்கிளிகள் கூட்டம் பாகிஸ்தானைத் தொடர்ந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் படையெடுத்து சென்று வேளாண் பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளையெல்லாம் சிறிய ரக விமானங்கள் மூலம், பூச்சிமருந்து தெளித்து விரட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பார்க்கும் போது நமக்கு கண்டிப்பாக நியாபகம் வருவது சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “காப்பான்” படம் தான். அந்த படத்தில் வில்லன் தரப்பில் இருந்து, வெட்டுக்கிளிகளை வளர்த்து ஏவி, வேளாண் […]
சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை பாகிஸ்தான் அரசு மீட்டு வர மறுத்துவிட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் : சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் சுமார் 361 பேரை காவு கொண்டுள்ளது. அங்குள்ள உகான் மாகாணத்தில்தான் இந்த நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. அங்கு இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் பலர் மருத்துவ படிப்பு படிக்கிறார்கள். கொரோனா தாக்குதல் காரணமாக அந்த உகான் நகரம் ஒரு தீவுபோல் ஆகி விட்டது. அங்கு வெளியாட்கள் […]
இங்கிலாந்தின் லண்டன் ஸ்ட்ரீதம் (Streatham) பகுதியின் வீதியில் செல்லும் பொதுமக்களை சரமாரியாகக் கத்தியால் தாக்கிய நபரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்ட்ரீதம் பகுதியில் மதியம் 2 மணிளவில் ஒருவர் கையில் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்காட்லாந்து காவல் துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் […]
சீனா செல்வதற்காக இணையத்தில் விசா விண்ணப்பிக்கும் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுள்ளது. சீனாவில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகின்றது. கொரோனா வைரஸ் சீனாவின் மொத்த பகுதிக்கும் பரவி இருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றது. அதனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருகின்றது.சீனாவில் தங்கி இருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. தற்போது ஏராளமானோர் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவில் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு […]
கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக வூஹான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதேபோல கேரளாவிலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், […]
ஈராக்கின் புதிய பிரதமராக முகமது தவுபிக் அலாவி என்பவரை அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார். தொடர் போர்கள், நாட்டின் பொருளாதார சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் என அரசாங்கத்துக்கு எதிராக ஈராக்கில் கடந்த நான்கு மாதங்களாகப் போரட்டங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில், முன்னாள் பிரதமர் அடில் அப்துல் மஹ்தி நவம்பர் மாதம் பதவி விலகினார். இதனையடுத்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை, ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி, முன்னாள் தகவல் […]
பிரபல தொழிலதிபரான எலான் மசுக்கின் காதலி கிரிம்ஸ் தான் கர்ப்பம் தரித்திருப்பதாக தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான எலான் மசுக்கின் காதலி கிரிம்ஸ்( 31 ). கனடா பாடகியான இவர், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தான் கர்ப்பம் தரித்ததை போல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்த பதிவுகள் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வெளியிட்ட இன்ஸ்ட்கிராம் பதிவில் தான் […]
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 216 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 83 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசி. ஏ அணி 7 விக்கெட்டுகளை இழந்து […]
ஆங்கில மர்மக்கதைகளில் புகழ்பெற்ற நாவலாசிரியரான மேரி ஹிக்கின்ஸ் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். ஆங்கில மர்மக் கதைகளில் புகழ்பெற்ற நாவலாசிரியர் மேரி ஹிக்கின்ஸ் கிளார்க். 92 வயதான இவர் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். மேரியின் மரணச்செய்தியை அவருடைய பதிப்பாளர்கள், அதிகாரப்பூர்வமாக சைமன் & ஸ்கஸ்டர் டிவிட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டனர். It is with deep sadness we say goodbye to the "Queen of […]
ஜப்பானில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு இதயத்தை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர். ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் இதயத்தை எடுத்து வேறொருவருக்கு பொருத்திக்கொள்வதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் அந்த நபரின் இதயத்தை அகற்றப்பட்டு, டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒருவருக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து இதயத்தை உடனடியாக கொண்டு சென்று அவருக்கு பொருத்தவேண்டும் என்று கூறிய டாக்டர்கள் விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக காவல்துறையின் ஹெலிகாப்டரில் எடுத்துச்சென்றனர். அப்போது […]
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகமாக வெட்டுக்கிளிகள் படையெடுத்து சென்று பயிர்களை நாசம் செய்து வருவதால், அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்து, தெற்கு பஞ்சாப், கைபர் பக்துன்க்வா உள்ளிட்ட பல பகுதிகளில், இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 9 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வெட்டுக்கிளிகள் பரவி பயிர்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த பல முயற்சிகள் […]
ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பபூஸ் – கிறிஸ்டினா இணை கைப்பற்றியது. 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஹங்கேரியின் பபூஸ் – ஃபிரான்ஸின் கிறிஸ்டினா இணையை எதிர்த்து தைவானின் சூ வெய் – செக் குடியரசின் பார்பொரா ஸ்ட்ரிகோவா இணை எதிர்த்து ஆடியது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய […]
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் இளம் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவை எதிர்த்து டாமினிக் தீம் ஆடினார். முதல் செட்டின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடிய ஸ்வெரவ், முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் 6-4 என டாமினிக் தீம் கைப்பற்றி பதிலடி கொடுக்க, […]
பிரபல தொழிலதிபர் பில்கேட்ஸின் மூத்த மகள் ஜெனிஃபர் கேட்ஸ், எகிப்து நாட்டின் குதிரைப் பந்தய வீரர் நயல் நாசருடன் திருமண நிச்சயம் செய்துகொண்டார். உலகறிந்த தொழிலதிபர் பில்கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதியின் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸுக்கு, அவரது சக குதிரைப் பந்தய வீரரும், எகிப்து நாட்டைச் சேர்ந்தவருமான காதலன் நயல் நாசருடன் (28) நிச்சயதார்த்தம் நடைபெற்றது.தனது நிச்சயதார்த்த வைர மோதிரத்தை அணிந்துகொண்டு, காதல் ஜோடிகள் இருவரும் மகிழ்ச்சியாக உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், […]
கொரனோ வைரஸ் தீவிரமாக பரவி இருக்கும் நிலையில் தமிழர்களை மீட்க கூறிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் சிங்கப்பூர் , சீனா , மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுனர் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ஜனவரி 7ஆம் தேதி சீனாவில் கொரனோ என்ற புதிய வகை […]
சீனாவிலிருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனா , ரஷ்யா , பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். தற்போது உலக நாடுகளில் பலவும் கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக சீனாவில் இருக்கக்கூடிய அனைவரையும் தங்கள் நாட்டுக்கு திருப்ப அளிக்கின்றனர். அந்தவகையில் தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இன்று தாயகம் திரும்பினர். சீனாவில் தங்கி மருத்துவம் படித்த மாணவர்களாகவும் […]
உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கொரோன வைரஸ் தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம் சுகாதாரம் தொடர்பாக பொதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. இருமல் மற்றும் சளியை சிந்திய பிறகு சோப் அல்லது திரவ கிருமிநாசினி கொண்டு குழாய் நீரில் கைகளை கழுவ வேண்டும். சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் துணியால் வாய் […]
கொரனா வைரஸ் பாதித்த கேரளா மருத்துவ மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் […]
பிரபல அமெரிக்க தொழிலதிபர் வாரன் பஃபெட், தனது நாளிதழ் தொழில்களை முற்றிலுமாகக் கைகழுவும் முடிவுக்கு வந்துள்ளார். பெர்க்ஷியர் ஹாத்வே (Berkshire Hathaway) எனப்படும் ஒற்றை நிறுவனத்தின் கீழ் பல்வேறு கிளை நிறுவனங்களை நிறுவி, அதனை சிறப்பான முறையில் நிர்வகித்துவருபவர் வாரன் பஃபெட். சர்வதேச அளவில் நான்காவது பெரும் பணக்காரராக விளங்கும் இவரின் வர்த்தகச் சொத்து மதிப்பு மட்டும் 88.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். பங்குச்சந்தையில் தனது வியாபார நுண்ணறிவின் மூலம், சரியான இடத்தில் மூதலீடு செய்து, வெற்றிகரமான […]
கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகநாடுகளில் வேகமாக பரவிவருவதால் அவசரநிலையை உலக சுகாதாரநிலையம் அறிவித்துள்ளது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணடறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதல் வலுவடைந்து வருவதால் உலக நாடுகள் […]
சூரியனை இனோய் என்னும் சூரிய தொலைநோக்கி மூலம் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை என்எஸ்எஃப் (தேசிய அறிவியல் அறக்கட்டளை) வெளியிட்டுள்ளது . பொதுவாக சூரியன் எதுவொன்றும் நெருங்க முடியாத வெப்பத்தைக் கொண்டது. தற்போது இனோய் என்னும் சூரிய தொலைநோக்கி மூலம் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை என்எஸ்எஃப் (தேசிய அறிவியல் அறக்கட்டளை) வெளியிட்டுள்ளது . எப்போதும் சாதுவான மஞ்சள் உருண்டை போல காட்சியளிக்கும் சூரியன் தற்போது சர்க்கரை பாகில் கொதிக்கும் சோளத்தை போல இப்புகைப்படத்தில் காட்சியளிக்கிறது. இதுகுறித்து […]
யு-19 உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதியில் இந்தியா பந்துவீச்சாளரை முழங்கையால் தாக்கிய ஆஸி. வீரர் சாமிற்கு ஐசிசி நெகட்டிவ் புள்ளிகளை வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டிற்கான ஐசிசி யு-19 உலகக்கோப்பைத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இதில் சூப்பர் லீக் காலிறுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 234 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா நிர்ணயித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கின்போது 31ஆவது ஓவரை இந்திய பந்துவீச்சாளர் அதர்வா வீசினார். […]
ரஷ்யாவின் 11ஆவது பெரும் பணக்காரரும் பில்லியனருமான மிக்காய்ல் ஃப்ரிட்மேன் என்பவரது 19 வயது மகன் அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன் இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டில், தன் சொந்த உழைப்பில் வாடகை செலுத்தி வசித்துவருகிறார். ரஷ்யாவின் பெரும் பில்லியனர்களில் ஒருவர் மிக்காய்ல் ஃப்ரிட்மேன். அந்நாட்டின் 11ஆவது பெரும் பணக்காரர்களில் ஒருவரான மிக்காய்லின் 19 வயது மகன் தனது எளிமைக்காகச் செய்திகளில் இடம்பெற்றுள்ளார். தந்தை 13.7 பில்லியன் டாலர் சொத்துகளை தனது பெயரில் கொண்டுள்ள போதும், அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன் தந்தையை சார்ந்து […]
சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டுடனான எல்லையை ரஷ்யா அடைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸானது அந்நாட்டில் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்து முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த கரோனா வைரஸால் இதுவரை 170 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், ஏழுயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க சீனாவுடனான எல்லையை மூடுவதாக […]
கேரளவில் 4 பேருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் ஒரு மாணவிக்கு கொரனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 170 பேர் பலியாகியிருப்பதாகவும், வூகான் மாகாணத்தில் மட்டும் 7,700 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தகவல் வெளியாகி மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
திருவனந்தபுரத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா […]