இன்றைய தினம் : 2019 டிசம்பர் 03 கிரிகோரியன் ஆண்டு : 337_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 338_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 28 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 915 – இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின்காலியை வந்தடைந்தது. 1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 1799 – வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது. 1800 – மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன. 1818 – இலினொய் அமெரிக்காவின் […]
Tag: World
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 02 கிரிகோரியன் ஆண்டு : 336_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 337_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 29 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. 1804 – நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான். 1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர். 1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் […]
அமேசான் காடுகளில் தீ ஏற்பட்டதற்கு ஹாலிவுட் நடிகர் லியார்னடோ தான் காரணம் என பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ வைத்த குற்றச்சாட்டுக்கு லினானர்டோ மறுப்பு தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் ஆஸ்கர் நாயகன் லியார்னடோ டிகாப்ரியோ, சுற்றுச்சுழல் சார்ந்த பல கருத்துகளை அவ்வப்போது சில பிரச்னைகள் ஏற்படும் போது தெரிவித்துவந்துள்ளார். சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது கூட அவரது கருத்து பல தரப்பினரையும் கவர்ந்தது. சமீபத்தில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட கடும் தீ விபத்தை பற்றிக் கூட தனது ட்விட்டர் […]
புகழ்பெற்ற லண்டன் மேம்பாலத்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரிட்டன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சாலையில் நடந்து சென்ற பொது மக்களை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார். யாரும் எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், அப்பாவி மக்கள் இருவர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை சம்பவ […]
வேக்ஃபிட்.கோ நிறுவனம், 100 நாட்களுக்குத் தினமும் 9 மணி நேரம் தூங்கும் வேலைக்கு ரூ 1 லட்சம் உதவித்தொகை அளிக்கும் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” திட்டத்தை அறிவித்துள்ளது. மக்களுக்குத் தூங்குவதற்கு சொல்லியா தரவேண்டும், பள்ளி வகுப்பறையில் தொடங்கிய தூக்கம் அலுவலகத்தில் பணிபுரிவது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதைப் போல், பிரபல இந்திய நிறுவனம் வேக்ஃபிட்.கோ (Wakefit.co) என்னும் மெத்தை நிறுவனம் “ஸ்லீப் இன்டர்ன்ஷிப்” என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதில், 100 நாட்கள் நடைபெறும் இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்கும் […]
புவெனஸ் அயர்ஸ் ரயில் நிலைய நடைமேடையில் செல்போன் பார்த்துக்கொண்டே நடந்த நபர் தண்டவாளத்தில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மக்களுக்கு உபயோகமான செல்போன் எந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை முதலில் மக்கள் தெரிந்திருக்க வேண்டும். சாலை அல்லது ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், பல விபத்துகளைத் தவிர்க்க நேரிடும். அதற்கு எடுத்துக்காட்டாகத் தான், அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸ் ரயில் நிலையத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு, ரயில் நிலையத்தின் நடைமேடையில் […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவை குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர். இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வரச்சொல்லி, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அழைப்பையேற்ற அவர், இந்தியாவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியா வந்தடைந்தார். நாட்டின் தலைநகர் டெல்லியில் வந்திறங்கிய அவரை, மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். கோத்தபயவுடன் இலங்கை வெளியுறவுத் துறை […]
இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றி பெற்று, இலங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றி பெற்றதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். மோடியின் வரவேற்பை ஏற்ற, கோத்தபய ராஜபக்ச மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா வரும் கோத்தபய ராஜபக்ச, குடியரசுத் […]
அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் நேற்று சத்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டது. ரிக்கர் அலகில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஏராளமான கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள அல்பேனியா அரசு, 350 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷிஜாக் நகர் அருகே சுமார் 30 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் […]
பிலப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் தென்கிழக்கு ஆசிய கால்பந்துத் தொடரில் தாய்லாந்து – வியட்நாம் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தென்கிழக்கு ஆசிய கால்பந்து போட்டி பிலப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிருக்கான கால்பந்து போட்டியில் பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மர் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இதில், இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் நடப்பு […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டு : 331_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 332_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 34 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 25 – இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 602 – பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார். 1095 – திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார். 1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது. […]
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 இந்தியர்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்துள்ளனர். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சார்ந்த 900த்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரணடைந்தனர். ஆப்கான் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த பயங்கரவாதிகளில் இந்தியர்கள் பத்துபேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுடன் மனைவி மற்றும் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆப்கான் அதிகாரிகள், சரணடைந்த நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும், விசாரணைக்குப் பின் […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் மிட்சல் சான்ட்னர் பறவையைப் போல் பறந்து பிடித்த கேட்ச் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி20 தொடருக்குப் பிறகு, டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் வாட்லிங், சான்ட்னர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், நியூசிலாந்து அணியின் சான்ட்னர் பிடித்த கேட்ச் தற்போது ரசிகர்களிடையே […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நிற வெறியால் அவமானப்பட்ட போது தன்னால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் மன வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார். பெ ஓவல் நகரில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.இதில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுக்க, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து, 262 ரன்கள் பின்தங்கிய […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டு : 330_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 331_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 35 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1161 – சீனாவில் சொங் கடற்படையினர் சின் கடற்படையினருடன் யாங்சி ஆற்றில் பெரும் போரை நிகழ்த்தினர். 1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக். 1789 – சியார்ச் வாசிங்டனால் அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது. 1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, […]
அமெரிக்க கடற்படை செயலர் ரிச்சர்ட் ஸ்பென்சரை அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்க கடற்படையில் ( NAVY SEAL) பணிபுரிந்து வரும் அலுவலர் எட்வர்ட் கேலர். இவர், 2017ஆம் ஆண்டு ஈராக்கில் பணியமர்த்தப்பட்டார். அப்போது, ஒரு பிணத்தின் அருகே நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எட்வர்ட் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டு வரும் டிசம்பர் 2ஆம் தேதி விசாரணை நடைபெறவிருந்தது. இந்நிலையில், எர்வர்ட் […]
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி, இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி சௌதி, வாக்னர் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு அனைத்து […]
கென்யாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, கென்யாவின் மேற்கு பொக்கோட் மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக […]
இத்தாலியின் லிகுரியா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்தது. இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் சவோனா கடற்கரை நகர் அடுத்த லிகுரியா பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட பயங்கர அதிர்வால், அங்குள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒரு கார் சிக்கியிருக்கலாம் என லிகுரியா தலைவர் ஜியோவானி டோடி தெரிவித்தார். ஆனால், இந்தத் தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.அந்தப் பாலத்தை பராமரித்து வந்த […]
அமெரிக்கா தொடுத்த அணு ஆயுத தாக்குதலிலிருந்து உயிர்ப் பிழைத்த நாகசாகிவாசிகளை சந்தித்துப் பேசிய போப் பிரான்சிஸ், அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது ஒரு குற்றம் எனத் தெரிவித்துள்ளார். போப் பிரான்சிஸ் நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அணு ஆயுதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நாகசாகி நகரங்களிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கிய பிரான்சிஸ், ஆயிரக்கணக்கான மக்களோடு அணு ஆயுதத்திற்கு எதிராகப் பேரணி சென்றார். பின்னர் கூட்டத்தில் பேசிய பிரான்சிஸ், ” அணு ஆயுதத் தாக்குதலால் நொடிப்பொழுதியில் அனைத்தும் படுகுழிக்குள் தள்ளப்பட்டன. […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டு : 329_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 330_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 36 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர். 1034 – இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான். 1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான். 1343 – திரேனியக் கடலில் நிலநடுக்கம் […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு : 327_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 328_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 38 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான். 1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார். 1248 – மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர். 1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில்ன் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் […]
விமானத்தில் முதியவரின் உயிரைக் காப்பாற்றச் சற்றும் யோசிக்காமல், சிறுநீரை வாயால் உறிஞ்சிய மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சீன நாட்டின் குவாங்சோ பகுதியிலிருந்து நியூயார்க் நகரத்துக்குச் சென்ற விமானத்தில், பயணம் செய்த முதியவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் பயணித்த மருத்துவர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்க்சியாங் ஆகியோர் அவரை பரிசோதனை செய்ததில், முதியவர் உடலில் ஒரு லிட்டர் சிறுநீரைக் கழிக்காமல் வைத்துள்ள காரணத்தினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது எனக் கண்டுபிடித்தனர். எனவே, உடனடியாக சிறுநீரை வெளியேற்றினால் […]
கடையில் ட்ரெயல் பார்ப்பது போல் 8 ஜீன்ஸ் பேன்ட் திருட முயன்ற பெண் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நம்மால் ஒரு நேரத்தில் ஒரு ஜீன்ஸ் பேன்ட் அணிவதே மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், ஒரு பெண் எட்டு ஜீன்ஸ் பேன்ட் அணிந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இளம்பெண் துணிக்கடையில் ஜீன்ஸ் பேன்ட் ட்ரெயல் பார்ப்பது போல், திருட முயற்சித்துள்ளார். இவர் ட்ரெயலுக்கு எடுத்துச் சென்ற எட்டு ஜீன்ஸ் பேன்ட்களையும் […]
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்சித் தீ வேகமாகப் பரவி வரும் நிலையில், அதிலிருந்து வரும் புகை சிட்னி நகரைச் சூழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் சுமார் 50 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வேகமாகப் பரவி வரும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.இதனிடையே, ஆஸ்திரேலியாவின் முக்கிய வர்த்தக நகரமான சிட்னி புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. வானைத் தொடும் அடுக்குமாடி கட்டங்களைக்கூட கூட இந்த புகை சூழ்ந்து மங்கலாகத் தென்பட்டன. காற்றின் தரம் இயல்பைவிட 10 […]
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 241 ரன்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், டொமினிக் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் […]
ரூ. 1 பில்லியன் மதிப்புள்ள எம்.கே – 45 என்னும் நவீன ரகத் துப்பாக்கிகளை இந்திய கடற்படைக்கு வழங்க அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (US Defence Security Cooperation Agency) செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.அதில் இந்தியக் கடற்படைக்கு பயன்படுத்தக்கூடிய எம்.கே – 45, 5 இன்ச்/62 காலிபர் (எம்ஓடி 4) நவீனத் துப்பாக்கிகளை, நம் நாட்டு அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. […]
23 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. 23 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஓமன் உள்ளிட்ட எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. […]
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியா சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். இப்போட்டியில் இளவேனில் 250.8 புள்ளிகளை எடுத்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.250.7 புள்ளிகளை எடுத்த […]
சான்செங் பகுதியில் உள்ள ஸ்பா கடையின் மேற்பகுதியில் 10 வருடங்களாக மலைப்பாம்பு குடியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சான்செங் பகுதியில் உள்ள பிரபல ஸ்பாவில் பாம்பு கடையின் மேற்பகுதியிலிருந்து கீழே விழுந்ததைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பாம்பைப் பார்த்ததும் ஸ்பாவின் உரிமையாளர் ஒரு நிமிடம் உறைந்து போகியுள்ளார். ஏற்கெனவே, உரிமையாளரிடம் பத்து வருடங்களுக்கு முன்பு பாம்பு இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதை நம்ப வில்லை. பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பாவை […]
ஸ்வாசிலாந்து நாட்டு அரசர் மிஸ்வாட்டி 3, தனது 15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பரிசளித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஸ்வாசிலாந்து நாடு, உலகளவில் வறுமை விகிதத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு காணப்படுகிறது. அதன் அரசர் மிஸ்வாட்டி 3, தனது மனைவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக சுமார். ரூ 175 கோடி மதிப்புள்ள 19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பரிசாக அளித்து உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளார். இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஸ்வாசிலாந்து நாட்டிற்கு 4 […]
இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 70 வயதான கோத்தபய ராஜபக்ச தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, சஜித் பிரேமதாசவை சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு சர்வதேச தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். […]
திருமணத்தில் மணப்பெண்ணைத் தங்கத்தினால் அலங்காரம் செய்யாமல் தக்காளியால் அலங்கரித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானில் சமீப நாட்களாகத் தக்காளி உற்பத்தி குறைந்து காணப்படுவதால், தக்காளியின் விற்பனை விலை அதிகளவில் ஏறியுள்ளது. இதனால், மக்கள் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு இந்திய மதிப்பில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இடையே அதிருப்தி நிலவி வருகிறது. தனது நாட்டின் தற்போதைய நிலைமையை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், இளம்பெண் […]
அமெரிக்காவின் வால்மார்ட்டில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்திலுள்ள டன்கன் என்ற ஊரிலுள்ள வால்மார்ட்டில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. வால்மார்ட் அங்காடியின் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். ‘இரண்டு ஆண் உடல்கள், ஒரு பெண் உடல் என மொத்தம் மூன்று உடல்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் இரு உடல்கள் காரின் உள்ளேயும் ஒரு […]
குத்துச்சண்டை வீரர் கிரிலின் விபரித ஆசையால் வைக்கப்பட்ட பெட்ரோலிய ஜெல்லியால் நிரப்பட்ட போலி பாப்பாயி பைசெப்ஸ் உயிருக்கு பயந்து அகற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். ரஷ்யாவில் வசித்து வருகிறார் பிரபல குத்துச்சண்டை வீரர் கிரில் தெரெஷின் (Kirill Tereshin). இவருக்கு 24 அங்குல எண்ணெய் உட்செலுத்தப்பட்ட பைசெப்ஸ் வைத்து இருப்பார். இவர் பாப்பாயி பைசெப்ஸ் வேண்டும் என்னும் ஆசையில், சின்தோலுக்கு பதிலாக மலிவான வாஸ்லைன் போன்ற பெட்ரோலிய ஜெல்லியை மூன்று லிட்டர் எற்றியுள்ளார். சின்தோல் தான் பெரிய […]
வரலாற்றில் இன்று நவம்பர் 19…!!
இன்றைய தினம் : 2019 நவம்பர் 19 கிரிகோரியன் ஆண்டு : 323_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 324_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 42 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 461 – லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 636 – ராசிதீன் கலீபாக்கள் ஈராக்கின் அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தனர். 1493 – கிறித்தோபர் கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (பின்னாளைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார். 1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் […]
ப்ளூம்பெர்க் வெளியிட்ட பணக்காரர்கள் அட்டவணையில் முதலிடம் பிடித்த ஜெஃப் பெசோஸ்யை, கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் பில்கேட்ஸ் சமீபத்தில் இந்த ஆண்டுக்கான பணக்காரப் பட்டியலை ப்ளூம்பெர்க் (Bloomberg) பத்திரிகை வெளியிட்டது. அதில் அமேசான் தலைமை அதிகாரி ஜெஃப் பெசோஸ்(Jeff Bezos) முதலிடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பில்கேட்ஸ் இரண்டாம் இடமும் பிடித்தனர். 24 ஆண்டுகளாக பணக்காரப் பட்டியலில் வலம் வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பில்கேட்ஸை கடந்த ஆண்டு ஜெஃப் பெசோஸ் முதல் […]
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்பளிப்பாக சாண்டா கிளாஸிடம், 26 வகையான பொருட்களை கேட்ட 10 சிறுமியின் கடிதம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்த மாதம் வெகுவிமர்சையாகக் கொண்டாட பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இன்னும் ஒருமாதம் பண்டிகைக்கான நேரம் இருக்கும் நிலையில், 10 வயது சிறுமி தனக்கு தேவையான 26 பொருட்களின் பட்டியலை கடிதமாக எழுதி சாண்டா கிளாஸிடம் கேட்டுள்ளார். அந்த கடிதம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கிறிஸ்துமஸ் லிஸ்ட் என்று தொடங்கும் […]
வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரியில் 2016ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவி உள்பட 22 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், பயங்கரவாத தடுப்பு தீர்பாய நீதிமன்றம் வருகிற 27ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது. வங்கதேச தலைநகர் டாக்காவில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி உள்ளது. இந்த பேக்கரிக்குள் கடந்த 2016ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்தனர். 12 மணி நேரம் நடந்த இந்த […]
சீனா மிகப்பெரிய நாடு என்றாலும் அது சிறிய கடற்கரையை கொண்டுள்ளது. இந்திய பெருங்கடல் மீது கண்வைக்கும் சீனாவுக்கு இந்தியாவின் வளர்ச்சி ஒரு தடையாக உள்ளது. அமெரிக்கா- இந்தியா ராணுவ கூட்டுப் பயிற்சியை (டைகர் ட்ரம்ப்) அந்நாடு விரும்பவில்லை. எனினும் இந்திய வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு.! பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்நாட்டு அதிரபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பொன்றை வெளியிட்டார். இருநாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் என்பதே அந்த அறிவிப்பு. இந்த […]
தனியார் முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு குறைந்த விலையில் இந்திய பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபரான பில்கேட்ஸ் தனது மனைவி மிலின்டா கேட்ஸூடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு இந்தியா எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள அவர் இந்தியாவின் சுகாதாரம், வேளாண்மை, பின்தங்கிய மக்களின் நிதித் தேவைகள் குறித்துப் பேசினார். பொதுச்சுகாதாரம் குறித்து பேசிய […]
தனது குழந்தையின் கண்கள் மிகவும் பயங்கரமாக இருப்பதாக குழந்தையின் தாய் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது. மக்கள் கடின முயற்சியில் செய்யும் வேலைகள், தொழில்நுட்பத்தின் மூலம் சுலபமாக முடிந்துவிடுகிறது. அதேபோல், குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் முதல் கடமை ஆகும். அதையும் எளிமைப்படுத்தும் வகையில், பல வீடுகளில் குழந்தை இருக்கும் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி 24 மணி நேரமும் அதனை பெற்றோர் கண்காணிக்கின்றனர். இந்நிலையில், PassionPop என்ற சமூக […]
இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச 65% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே 65% வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவை வென்றார். தேர்தலில் சஜித் பிரேமதாச 28% வாக்குகள் […]
இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச முன்னிலை வகித்து வருகிறார். இலங்கையில் 8ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவுற்றது.இதனை அடுத்து, நேற்று மாலையே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாச 6 லட்சத்து 91 ஆயிரத்து 998 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக, பொதுஜன […]
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக் டி20 தொடரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டீவன் ஸ்மித் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபர் ஸ்டீவன் ஸ்மித். இவர் தற்போது ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறார். இதன் மூலம் கடந்த மாதம் ஆஸ்திரேலிய டி20 அணியிலும் இடம்பிடித்தார்.இவர் ஆஸ்திரேலியாவின் டி20 அணிக்கு கிட்டத்திட்ட மூன்றரை வருடங்களுக்கு தற்போது இடம்பிடித்துள்ளார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்மித் […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 17 கிரிகோரியன் ஆண்டு : 321_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 322_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 44 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1292 – ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார். 1405 – சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது. 1511 – எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன. 1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார். 1603 – ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார். 1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன. 1800 – ஐக்கிய அமெரிக்க […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பாவின் ஆசி வேண்டி இளம்ஜோடி ஒன்று தங்கள் திருமணத்தை மருத்துவமனையில் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் மைக்கேல் தாம்சன் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு அலியா என்பவருடன் விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, மணமகனின் தந்தை நீரிழிவு நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.இந்நிலையில், தாம்சன் – ஆலியா இருவரும் மணமகனின் […]
டிக்டாக் செயலியை உலக அளவில் அதிக டவுன்லோடுகளை செய்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து கலக்குகின்றது. அனைவரும் தெரிந்த கூகுள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலியை சுமார் 1.5 பில்லியன் டவுன்லோடு செய்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 466.8 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது மொத்த டவுன்லோடு சதவிகிதத்தில் 31 % ஆகும்.கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி டிக்டாக் செயலி பெற்றுள்ளது. இதில் 45.5 மில்லியன் பயன்பாட்டாளர்களை பெற்று சீனா உள்ளது. […]
கலிஃபோர்னியா மாகாணத்தின் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சவுகஸ் (Saugus) மேல்நிலைப்பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய 16 வயது மாணவன், திடீரென்று தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அருகிலிருந்த மாணவர்களை நோக்கிச் சுடத்தொடங்கினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒரு 16 வயது மாணவியும், ஒரு 14 வயது மாணவனும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் […]
உலகெங்கிலும் அரங்கேறிய பயங்கரவாத தாக்குதல்களால் உலக பொருளாதாரம் ரூ.72 லட்சம் கோடி (1 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பை சந்தித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 11ஆவது பிரிக்ஸ் மாநாடு பிரேசிலில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:சர்வதேச நாடுகளின் அமைதி, வளர்ச்சிக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது. உலக அளவில் அதிகரித்துவரும் […]