அமெரிக்காவில் பூசணிக்காய்யை பயன்படுத்தி படகு சவாரி செய்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் எதாவது ஒரு சம்பவம் வினோதமாக மாறி சமூக வலைத்தளம் மூலம் வைரலாகி வருவதை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் தற்போது சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது ஒரு வீடியோ. அமெரிக்க நாட்டின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியை சார்ந்தவர் ஜஸ்டின். இவர் கடந்த 4 ஆண்டுகளாக பெரிய அளவிலான பூசணிக்காய் ஒன்றை வளர்க்க வேண்டும் தொடர்ந்து முயற்சி செய்து , இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார். அவரின் நீண்டகால […]
Tag: World
ஏமன் உள்நாட்டுப் போரின் காரணமாக தற்போதுவரை 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக யூனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏமன் அரசிற்கும் அந்நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. அதன் விளைவாக இதுவரை 5000-த்திக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் 5,00,000 – த்திற்கும் அதிகமான சிறுவர்கள் பள்ளிகளில் இருந்து இடைநிற்றல் செய்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) தனது ஆய்வறிக்கையில் […]
அரசுமுறை பயணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தாயகம் திரும்பினார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அழைப்பின் பேரில் கடந்த 17ஆம் தேதி அந்நாட்டிற்கு அரசுமுறை பயணமாக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தார். அங்கு தலைநகர் மணிலாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மகாத்மா காந்தி கல்வி நிலையத்தை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் […]
தோட்டத்தில் வளர்ந்த பெரிய பூசணிக்காயை படகாக மாற்றி சவாரி செய்து அசத்தியுள்ளார் விவசாயி ஒருவர். அமெரிக்காவின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியில் வசித்துவருகிறார் ஜஸ்டின். இவர் கடந்த நான்காண்டாகப் பெரிய அளவில் பூசணிக்காய் வளர்க்க வேண்டும் என முயற்சி செய்துவந்துள்ளார். அவரது ஆசை போலவே இந்தாண்டு தோட்டத்தில் வளர்ந்துள்ள பெரிய பூசணிக்காயின் எடை 412 கிலோ இருந்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். பூசணிக்காயை வைத்து வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என யோசித்த ஜஸ்டினுக்கு புதிய சிந்தனை உதித்துள்ளது. […]
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் வரும் 31 ஆம் தேதி இந்தியா வருகிறார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் வரும் 31-ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் தங்கயிருக்கிறார். இந்த தகவலை இருநாட்டு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நியூயார்கில் ஐநா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கலை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இரு […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 24 கிரிகோரியன் ஆண்டு : 297_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 298_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 68 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர். 1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது. 1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன […]
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மிதிற்கு கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை வழங்கி மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்(எம்சிசி) கௌரவித்து. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித் எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்துக்கு தேர்வாகியுள்ளார்.இதுகுறித்து எம்சிசி தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகளுக்காக தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித்திற்கு எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்த்தை வழங்குகிறோம் என்று பதிவிட்டுள்ளது. யார் இந்த கிரேம் ஸ்மித்: தென் […]
லெபனான் நாட்டில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் குழந்தையை உற்சாகப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டில் அரசியல் தலைவர்கள் ஊழலில் மிகுந்து விட்டதாக அவர்களை எதிர்த்து பொதுமக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனது 15 மாதக் குழந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த எலியானே ஜாபுவாரின் காரை போராட்டாகர்கள் சூழ்ந்விட்டார்கள். தனது காரில் உள்ள குழந்தை பயந்துவிட்டதாக எலியானே கூறிய மறுகணமே அவர்கள் குழந்தைகளுக்குப் பிடித்த பாடலான ‘பேபி ஷார்க்’ பாடலை […]
இங்கிலாந்தில் பிறந்து நைஜீரிய அணிக்காக கால்பந்து ஆடும் ஓலா ஐனாவின் கதை. ”செல்சீ கிளப் அணியின் பயிற்சியில் பங்குபெற காரில் பயணம் செய்துகொண்டிருந்தோம். திடீரென கார் பழுதானது. எவ்வளவோ முயன்றும் சரி செய்ய முடியவில்லை. சரியான நேரத்திற்கு அங்கு செல்ல வேண்டும். காரை அந்த இடத்திலேயே என் அப்பா வேறொருவரிடம் விற்றுவிட்டு, என்னை ரயிலில் ஏற்றினார். அவரும் என்னுடன் வந்தார். ஏனென்றால் அதற்கு முன்பாக நான் ரயிலில் தனியாக பயணித்தது இல்லை. எனது பயிற்சியில் அனைத்து நேரங்களிலும் […]
தென்கிழக்கு இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் பகுதியில் கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள போலீசார், பல்கேரியாவிலிருந்து வந்த கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்களை மீட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ மரைனர் கூறும்போது, 38 பெரியவர்களையும், ஒரு இளைஞனையும் அடையாளம் காண அதிகாரிகள் முயற்சித்து வருவதாக இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். மேலும் அக்டோபர் 19 -ஆம் தேதி லாரி நாட்டிற்குள் நுழைந்தது என்றும், “விசாரணைக்கு எங்கள் கூட்டாளர்களுடன் போலீசார் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்கள்” […]
ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக கோடாய்ஷி நருஹிதோ சினோ (Kotaishi Naruhito Shinno) முடி சூடிக் கொண்டார். ஜப்பான் நாட்டின் மன்னராக இருந்தவர் அகிஹிதோ (Akihito). 85 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக தன் மன்னர் பதவியை துறந்தார். இதனைத் தொடர்ந்து இவரின் இளைய மகனான கோடாய்ஷி நருஹிதோ சினோ புதிய மன்னராக முடி சூடி கொண்டார். ஜப்பானில் மன்னர்கள் இறக்கும் வரை அந்த பதவியில் இருப்பது வழக்கம். ஆனால், அகிஹிதோவின் வயது மூப்பை காரணம் காட்டி […]
நான் எக்சல்லோ ப்ரோ பால் பவுடர் சட்ட விதிப்படி முற்றிலும் பாதுகாப்பானது என்கிறது நெஸ்லே நிறுவனம். பாதிக்கப்பட்ட நபரின் 6 மாத குழந்தைக்கு தாய் பாலுக்கு பதிலாக மருத்துவர் பரிந்துரை செய்த நெஸ்லே நிறுவனத்தின் நெஸ்லே நான் ப்ரோ பால் பவுடர் குழந்தைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்க துவக்கத்திலிருந்தே குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. பால் பவுடரின் தரத்தில் சந்தேகமடைந்த தந்தை சம்பந்தப்பட்ட பால்பவுடர் நிறுவனத்தை அணுகி உள்ளார்.அவர்களும் வீட்டிற்கே வந்து ஆய்வு நடத்திவிட்டு உங்களுக்கு அறிக்கை தருகின்றோம் என்று […]
ஐ.டி.சியின் ஃபேபெல் எக்ஸ்கிசைட் சாக்லேட் வகை ( Fabelle Exquisite Chocolate brand) தற்போது ‘டிரினிட்டி – ட்ரஃபிள்ஸ் எக்ஸ்ட்ராஆர்டினெய்னர்’ (‘Trinity – Truffles Extraordinaire’) என்ற புதிய வகை சாக்லேட்டை தயாரித்து கின்னஸ் சாதனைக்கு வித்திட்டுள்ளது. மிச்செலின் ஸ்டார் செஃப் பிலிப் கான்டிசினி, ஃபேபெல்லின் மாஸ்டர் சாக்லேட்டியர் இணைந்து ‘டிரினிட்டி – ட்ரஃபிள்ஸ் எக்ஸ்ட்ராஆர்டைனெய்ர்’ என்ற புது வகையான சாக்லெட்டை தயாரித்துள்ளது. அந்த சாக்லேட்டின் விலை கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ. 4.3 லட்சம் என்று […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 23 கிரிகோரியன் ஆண்டு : 296_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 297_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 69 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 42 – உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான். 425 – மூன்றாம் வலன்டீனியன் தனது ஆறாவது அகவையில் உரோமைப் பேரரசனாக முடி சூடினான். 1157 – டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான். 1295 – இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோரது பெயர்கள் மிகவும் ஆபத்தான பிரபலங்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் உபயோகித்துவருகின்றனர். இதனால் அவர்கள் அதிகமான நேரங்களில் இணையத்திலேயே தங்கள் பொழுதையும் கழிக்கின்றனர். அதிலும் சில வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் பார்க்கவும் செய்கின்றனர்.இப்படியான நிகழ்ச்சிகளை காண்பதற்கு ஒரு சில நிறுவனங்கள் கட்டணங்கள் விதிக்கின்றன. ஆனால் கட்டணம் செலுத்தாமல் இந்த நிகழ்வுகளை இலவசமாக பார்க்க […]
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோவை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் சுபான்கர் டே அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று பாரிசில் தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சுபான்கர் டே (54ஆவது ரேங்க்), இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோ (19ஆவது ரேங்க்) ஆகியோர் மோதினர். இதில் சுபான்கர் முதல் செட்டை 15 – 21 என்ற கணக்கில் […]
ட்ரோன்களை பயன்படுத்துவதில் உலக நாடுகள் முனைப்புக் காட்டிவரும் நிலையில், பல நாடுகளின் பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால், அதனை பயன்படுத்த கடும் விதிகள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ட்ரோன்கள் என்னும் ஆளில்லா விமானத்தின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், பல நாடுகளின் பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதேபோல், பாகிஸ்தானுக்குச் சொந்தமான ட்ரோன்கள் […]
கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று 19ஆவது ஆட்டத்தில் நமிபியா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. T20WorldCup: அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் நமிபியா அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற நமிபியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நமிபியா அணியின் தொடக்க வீரர் ஸ்டீபன் பார்ட் […]
கனடாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 338 இடங்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு நேற்று (அக்டோபர் 21) பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்தப் பொதுத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றிபெறுவது கடினம் என்றே கருத்துக்கணிப்புகள் கூறின. வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து மாலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அந்நாட்டின் தேர்தல் ஆணைய தளத்தில் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து குறைவான வாக்கு […]
சீனா_வில் உள்ள பாலத்தின் கீழ் விமான சிக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவில் விமானத்தின் பாகத்தை பெரிய அளவிலான, நீளமான ட்ரக்கில் வைத்து எடுத்துச் செல்லும் பொது அந்த சாலையில் இருந்த பாலத்தின் கீழ் பகுதி வழியாக சென்றுவிடலாம் என நினைத்த ட்ரக் ஓட்டுநர் பாலத்திற்கு கீழே செல்லும் வகையில் ட்ரக்கை இயக்கியுள்ளார். ஆனால் அந்த பாலம் எவ்வளவு பெரிய விமான பாகத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் பாலத்திற்கு நடுவே ட்ரக் […]
300 எலிகளுடன் ஒரே வேனில் பல மாதங்களாகத் தங்கியிருந்த பெண்ணுக்குப் பயத்தைக் காட்டிய எலிகள். சான் டியாகோ பகுதியில் வசித்து வருபவர் கர்லா. இவர் தனக்குச் சொந்தமான வேனில் 300-க்கும் மேற்பட்ட எலிகளை வளர்த்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக். 8-ஆம் தேதி சான் டியாகோ ஹ்யுமேன் சங்கத்திற்கு (San Diego Humane Society) கர்லாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் கர்லா தன்னிடமுள்ள எலிகளை அடக்கமுடியவில்லை.. என்னைக் காப்பாற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]
இந்தியாவுடனான தபால் சேவையை எந்தவித முன்னறிவிப்புமின்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட எந்த தபால்களையும் அந்நாடு ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து வரும் தபால்களையும், இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய தபால்களையும் அந்நாடு நிறுத்தி வைத்ததையடுத்து, இந்திய தபால் துறை அலுவலர்களும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தபால்களை நிறுத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் […]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை அழித்ததை, இந்தியா நிரூபிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், இந்திய ராணுவத்தினரைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அக்டோபர் 10ஆம் தேதி மாலை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் இந்திய வீரர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.இதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், தங்கதார் செக்டாருக்கு எதிர்ப்புறமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 222 கிரிகோரியன் ஆண்டு : 295_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 296_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 70 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 362 – அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது. 794 – பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ) மாற்றினார். 1383 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 1633 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது. 1707 – சில்லி கடற்படைப் […]
இரவு தூங்கிக்கொண்டிருந்த மகன் அருகில் குழந்தை உருவம் இருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார். உலகில் தொழில்நுட்பத்தால் பல்வேறு குறும்புத்தனமான நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதே போலவே, மரிட்சா (Maritza) என்ற பெண்ணுக்குத் தொழில்நுட்பத்தால் இரவு துக்கமே பறிபோகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.மரிட்சா என்பவர் தனது மூன்று வயது மகனை இரவு நேரத்தில் கண்காணிக்க தனியாக கேமரா பொறுத்தியிருந்தார். தினமும் கேமராவை கண்காணிக்கும் மரிட்சாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கேமரா திரையில் தனது மகன் அருகில் குழந்தை […]
இந்தாண்டுக்கான சர்வதேச அளவில் தலைசிறந்த 10 நிறுவனங்கள் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனம் இடம்பெறவில்லை. உலகளவில் தலைசிறந்த நிறுவனங்களைத் தொகுத்து Global Brand Consultancy Interbrand’s annual Ranking என்ற பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு வெளியான பட்டியலில் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் தலைசிறந்த 10 நிறுவன பட்டியலில் இடம்பெறவில்லை.இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கோகோ கோலா நிறுவனங்கள் முறையே இரண்டு, மூன்று, […]
கேட்டலோனிய மக்கள் தங்கள் கைகளில் கிடைக்கும் குப்பைகளைக் காவல் துறையினர் அமைத்து வைத்திருந்த தடுப்புகளுக்கு வெளியே வீசி, அரசாங்கத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் […]
உலகிலேயே மிக நீண்ட விமான பயண சேவையை ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனம் சோதனை செய்துள்ளது. விமானச் சேவையைப் பயன்படுத்தும் பலரும் இடைநிறுத்தம் இல்லாத பயணத்தையே விரும்புவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இதனால் சக்திவாய்ந்த சிறிய விமானங்களை கொண்டு நீண்ட தூர விமானச் சேவையை வழங்க பல்வேறு நிறுவனங்களும் முன்வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து இடைநிறுத்தம் இல்லாமல் சிட்னி வரை தனது சேவையைத் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனை கடந்த வாரம் வெற்றிகரமாக […]
ஜி7 மாநாடு தனக்கு சொந்தமான விடுதியில் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு ஜூன் 10 – 12ஆம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடக்கவுள்ளது. புகழ்பெற்ற இந்த மாநாடு நடத்தப்படும் இடங்களைத் தேர்வுசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த மாநாடு அமெரிக்க ட்ரம்புக்கு சொந்தமான ‘ட்ரம்ப் தேசிய டோரல் மியாமி’ விடுதியில் நடைபெறும் என்று கடந்த வியாழக்கிழமை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 21 கிரிகோரியன் ஆண்டு : 294_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 295_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 71 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது. 1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1520 – பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது. 1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் […]
கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல்போன் மாடல்கள் இந்தியாவுக்கு விற்பனைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்ப்பாபேட் (Alphabet) நிறுவனத்தின் அடுத்த மொபைல் மாடல்களான Google Pixel 4 மற்றும் Pixel 4 XL ஆகியவை கடந்த வாரம் நியூயார்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 90hz டிஸ்பிளே, ஆண்டிராய்டு 10 இயங்குதளம் என்று பல அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மொபைலின் முக்கிய அம்சமே இதிலுள்ள சோலி ரேடார் சிப். மொபைலை தொடாமலேயே நமது கையசைவுகளின் […]
லெபனானில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கூட்டணி அரசைச் சேர்ந்த 4எம்.பி.க்கள் பதவி விலகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானில் பெருகி வரும் விலைவாசி உயர்வு, ஊழல் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்துக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அந்நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சியமைத்து ஒரு வருடம் கூட ஆகாத பிரதமர் சாத் ஹரிரி தலைமையிலான கூட்டணி, அரசைக் கலைக்க வேண்டும் என்பதே போராட்டக்கார்களின் கோரிக்கையாகவுள்ளது. இதனிடையே, இந்த பிரச்னைக்கு […]
நாய் ஒன்று பச்சை நிறத்தில் குட்டி போட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. கொலராடோ நாட்டில் வசித்துவருபவர் கேடி வில்லியம்ஸ். இவர் அமி என்று அழைக்கப்படும் மூன்று வயது நாய் ஒன்றை வளர்த்துவந்தார். அமி நாய் கிரேட் டேன் வகையைச் சேர்ந்தது. சில நாள்களுக்கு முன்பு எமி நாய் ஒன்பது குட்டிகளைப் போட்டுள்ளது. அதில் ஒரு நாய்க்குட்டி மட்டும் பச்சை நிறத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் வில்லியம்ஸ். இது குறித்து அவர் கூறுகையில், “முதலில் அந்த […]
உலகளவில் நீளமான கொம்புள்ள மாட்டின் பட்டியலில் பக்கில்ஹெட் (Bucklehead) முதலிடத்தைப் பிடித்துள்ளது. டெக்சாஸ் பகுதியில் 14 வயதுள்ள மார்செலா கோன்சலஸ் (Marceala Gonzalez) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாகப் பக்கில்ஹெட் மாடு ஒன்று இருக்கிறது. இந்த மாட்டினுடைய கொம்பின் நீளம் 11 – அடியும், அகலம் 1.8 அங்குலம் இருக்கும் என அளவிடப்பட்டுள்ளது. கடந்த அக். 4-ஆம் தேதி ஒக்லஹோமாவில் நடைபெற்ற ஹார்ன் ஷோகேஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பக்கில்ஹெட் மாடு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் […]
டிக்டாக் செயலி புதிதாக #Edutok திட்டத்தைக் கல்விக்காக அறிமுகம் செய்துள்ளது. டிக்டாக் செயலிக்கு புதிய அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக்கில் புகுந்து விளையாடுகிறார்கள். டிக்டாக் செய்து மகிழ்வது மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. டிக்டாக்கிற்கு எதிராக பல்வேறு குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் தனக்கென்று தனி இடத்தினை பிடித்துத்தான் நிற்கிறது. இந்நிலையில் டிக்டாக் செயலியின் அடுத்த பிரமாண்ட திட்டமாக #EDUTOK என்னும் கல்விக்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதை அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் குழந்தைகளுக்கான சோப்பு , ஷாம்பு , பவுடர் , லோசன் உள்ளிட்ட தயாரிப்புகள் தான் உலக அளவில் இந்நிறுவனத்திற்கு பெயர் பெற்றுத் தந்தது. அதேநேரம் இந்த […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 20 கிரிகோரியன் ஆண்டு : 293_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 294_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 72 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1740 – மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது. 1803 – அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. 1818 – அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1827 – துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. […]
கேட்லோனியா தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நேற்று கேட்டலோனியா மக்கள் நடத்திய போராட்டத்தால் பார்சிலோனா நகரமே ஸ்தம்பித்துப் போனது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் மக்கள், தனிநாட்டுக்கு ஆதரவாக […]
சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி Q2 காலாண்டு முடிவில் 6.2 விழுக்காடாக இருந்ததில் இருந்து Q3 காலாண்டில் 6 விழுக்காடாக சரிந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா கடந்த 27 ஆண்டுகள் கண்டிராத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே நீண்ட நாட்களாக நடந்த வர்த்தகப் போர் காரணமாக சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சரிந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்க அரசு வரி உயர்வு செய்ததால் ஒப்பந்தம் செய்த […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் துளசி கபார்ட் ஒரு ரஷ்ய கைக்கூலி என முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசகரான டேவிட் பிளப்ஃபியுடன் சேர்ந்து பாட்காஸ்ட் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஹிலாரி கிளின்டன், “ஜனநாயகக் கட்சியின் முன்னணி பெண் வேட்பாளர் ஒருவரை ரஷ்யா தன் கைக்குள் போட்டுக்கொண்டு அவருக்கு ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்யர்களின் விருப்பத்திற்குரியவராக அவர் விளங்குகிறார். அந்த நபரின் தேர்தல் […]
பாகிஸ்தான் டெஸ்ட், டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃப்ராஸ் அகமதுவை நீக்கியது சரிதான் என்ற முறையில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 போட்டிகளின் கேப்டனாக சர்ஃப்ராஸ் அகமது செயல்பட்டு வந்தார். சமீபத்தில், பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் இலங்கை அணியோடு மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது.பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம் தலைமையில், இலங்கை அணியை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் […]
விமான நிலையத்தில் லக்கேஜ் குறிப்பிட்ட அளவைவிட எடை அதிகமாக இருந்ததால் அதிகப் பணம் கேட்ட அலுவலர்கள் வாயைப் பிளக்கும்படி பெண் ஒருவர் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ரோட்ரிக்ஸ் என்ற இளம்பெண் விடுமுறையைக் கொண்டாடுவதற்கு ஊருக்குக் கிளம்பியுள்ளார். விமான நிலையத்தில் ரோட்ரிக்ஸின் லக்கேஜை பரிசோதித்ததில் அனுமதிக்கப்பட்ட எடையளவான ஏழு கிலோவை விட இரண்டரை கிலோ அதிகமாக அதாவது 9.6 கிலோ இருந்துள்ளது. இதனால் ரோட்ரிக்ஸ் அதிகப்பணம் கட்ட வேண்டும் என்னும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அதிகப் […]
வீட்டு நீச்சல்குளத்திலிருந்து வெளியே செல்ல முடியாத 9 அடி முதலையை வனத்துறை அலுவலர் தோளில் சுமந்து நடந்து சென்று அசத்தியுள்ளார். புளோரிடா மாகாணத்தில் வீட்டின் ஒன்றில் 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்துள்ளது. வீட்டில் உள்ள நீச்சல்குளத்தில் இறங்கிய முதலை வெளியே வரமுடியாமல் நீண்ட நேரமாகத் தவித்து சுற்றிவந்துள்ளது. இதனைப் பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலறிந்து வனத் துறை அலுவலர் பால் பெடார்ட் (Paul Bedard) உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார். ஆனால் […]
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாகாணம் நங்கர்ஹார். இப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று மதியம் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட அதிகமானவர்கள் மசூதியில் பிரார்த்தனை செய்யக் கூடியிருந்தனர். இந்த குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் மசூதியின் கூரையும் இடிந்து விழுந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தக் குண்டுவெடிப்புக்கு […]
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் குலாம் போடிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்து பின், தன் இளம் வயதில் தென் ஆப்பிரிக்காவில் குடியேறிவர் குலாம் போடி. அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த குலாம் போடி பின்னர் 2007ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்காக மூன்று சர்வதேச […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 18 கிரிகோரியன் ஆண்டு : 291_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 292_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 74 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 202 – சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர். 1216 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான். 1453 – பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1469 – அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் […]
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதை 2020 பிப்ரவரி மாதத்துக்குள் தடுக்காவிட்டால், கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும் என, சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) எச்சரித்துள்ளது. சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு எனப்படும் எஃப்ஏடிஎஃப் (FATF) அமைப்பின் வருடாந்திர கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எஃப்ஏடிஎஃப் அமைப்பு நிர்வாகிகள் காலக்கெடு கொடுத்து எச்சரித்தனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும் என […]
ஜி7 மாநாடு புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் சுற்றுலா மையத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி7 மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாடு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ரிசார்ட்டில் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரம்புக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் கோல்ப் கிளப் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்த மாநாடு அங்கு நடைபெறவுள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் ஜி7 […]
இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன் ஆகியோரின் பாகிஸ்தான் பயணத்தின் நான்காவது நாளில் லாகூரில் உள்ள பாட்ஷாஹி மசூதியை பார்த்து ரசித்தனர். பிரிட்டன் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் முதல் முறையாக, 5 நாள் சுற்றுப்பயணமாகப் பாகிஸ்தானுக்குச் சென்றனர். இதனால், பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டி நூர்கான் விமான நிலையத்துக்கு வந்தவர்களை வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷி […]
சிரியாவின் எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதோடு, குர்து இனத்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி, அமெரிக்க படைக்கு ஆதரவாக நின்ற குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 637 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரை நிறுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்துவந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் […]