Categories
உலக செய்திகள்

வினோத நிகழ்வு…. “சுவரில் இருந்து கீழே விழுந்த பல்லி”… பார்த்த உடனே காப்பாற்றிய மற்றொரு பல்லி.. வைரல் வீடியோ..!!

வியட்நாமில் சுவற்றில் ஒரு பல்லி பிடிதவறி கீழே விழும்போது மற்றொரு பல்லி அதனை தாங்கிப் பிடித்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இவ்வுலகில் தினமும் ஏதாவது ஒரு நாட்டில் எங்கேயாவது ஒரு வினோத நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை காணும் போது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில்  வியட்நாமில் டே நின்ஹ் (Tay Ninh) என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜேக்கோ (Gecko) வகைப் பல்லிகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு பல்லி திடீரென தன் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 12…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 12 கிரிகோரியன் ஆண்டு : 255_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 256_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 110 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 490 – மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில்  பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது. 1185 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார். 1609 – என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார். 1634 – மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் 113…. பால் 140 ”தனக்குத்தானே சூனியம் வைத்த பாக்” பரிதவிக்கும் மக்கள்…!!

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்ட அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் பெட்ரோல் டீசலை விட அதிக விலையில் பால் விற்பனை ஆகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான் கோபத்தில் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டது.  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏறக்குறைய 100 தயாரிப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாகி உள்ளது. மொஹரம் நாட்களில் பாகிஸ்தானில் பாலின் தேவை அதிகமாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 11…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 11 கிரிகோரியன் ஆண்டு : 254_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 255_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 111 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1226 – முதலாவது கத்தோலிக்க நற்கருணை ஆராதனை பிரான்சு, அவினோன் என்ற இடத்தில் இடம்பெற்றது. 1297 – இசுட்டெர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வில்லியம் வேலசு  தலைமையில் இசுக்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர். 1541 – சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது. 1565 – உதுமானியப் படைகள் மால்ட்டாவில் இருந்து வெளியேறியதை அடுத்து, மால்ட்டா முற்றுகை முடிவுக்கு வந்தது. 1609 – என்றி அட்சன் மன்காட்டனை அடைந்து அங்கு பழங்குடியினர் வாழ்வதைக் கண்டார். […]

Categories
உலக செய்திகள்

மனைவிக்காக… “6 மணிநேரம் நின்ற கணவன்”… வைரலாகும் புகைப்படம்…!!

மனைவி நன்கு தூங்குவதற்காக கணவன் 6 மணி நேரமாக நின்று கொண்டு பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு நபர் விமானத்தில் படுத்து நின்று கொண்டிருக்கிறார். அருகே இருக்கையில் ஒரு பெண் நன்கு தூங்கிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்டதுடன் மேலே ஒரு தலைப்பு கொடுத்து இருந்தார். அதில் இந்த நபர் 6 மணி நேரமாக நின்று […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 10…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 10 கிரிகோரியன் ஆண்டு : 253_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 254_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 112 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1419 – பர்கண்டி கோமகன் ஜான் பின்னாளில் பிரான்சின் மன்னராகப் பதவியேற்ற ஏழாம் சார்லசினால் கொல்லப்பட்டார். 1509 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர். 1515 – தாமஸ் வோல்சி கருதினாலாக நியமிக்கப்பட்டார். 1570 – எசுப்பானிய இயேசு சபை மதகுருக்கள் அமெரிக்காவின் இன்றைய வர்ஜீனியாவில் தரையிறங்கினர். 1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் […]

Categories
உலக செய்திகள்

ரூ85,00,000…. அதிஷ்டமாக வந்த CASH…. செலவுக்கு பின் திருட்டு CASE..!!

அமெரிக்காவில் வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்சம் ரூபாயை செலவு செய்த தம்பதிகள் வழக்கை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவின் பெனிசிலியா மாகாணத்திலுள்ள மாண்டீஸ்ட்டர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் ரிப்பனில் வில்லியம்ஸ். இவர்களது  வங்கி கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. சட்டப்படி இதனை வங்கிக்கு தெரிவிக்காத அந்த தம்பதி கேம்பர், ஷோபி ரேஸ் கார்கள் வாங்கியது, நண்பர்களுக்கு உதவியது என்று பணத்தை தாறுமாறாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 09…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 09 கிரிகோரியன் ஆண்டு : 252_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 253_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 113 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 337 – முதலாம் கான்ஸ்டன்டைனுக்குப் பின்னர் அவரது மூன்று மகன்கள் இணைப் பேரரசர்களாக நியமிக்கப்பட்டார்கள். உரோமைப் பேரரசு மூன்றாகப் பிரிந்தது. 533 – 15,000 பைசாந்தியப் படை வீரர்கள் செப்பாவில் (இன்றைய தூனிசியா) தரையிறங்கி  கார்த்திஜ்  நோக்கிச் சென்றனர். 1087 – வில்லியம் ரூபுசு இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார். 1493 – உதுமானியரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரோவாசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. 1513 – ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இசுக்கொட்லாந்தின் நான்காம் […]

Categories
உலக செய்திகள்

சிக்கலில் இந்தியா ”ஜம்முவில் தேர்தல் நடத்துங்க” அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா….!!

இந்தியா ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் காஷ்மீர் பகுதி அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் இருப்பதும், அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் இணைய சேவை துண்டிப்பு தற்போது வரை இருப்பதை கேள்விப்பட்டு  நாங்கள் கவலை அடைகின்றோம்.மனித உரிமைகளை மதித்து , அங்கு துண்டிக்கப்பட்ட இணையம் மற்றும் மொபைல் சேவைகளை முழுமையாக வழங்க இந்திய […]

Categories
உலக செய்திகள்

ரூ 1_க்கு துணி….5 நிமிடத்தில் காலியான கடை…. மீண்டும் அதே ஆப்பர் அறிவிப்பு…!!

ரஷியாவில் 1 ரூபாய்க்கு துணிகள் விற்பனை என்ற அறிவிக்கப்பட்டதை அடுத்து 5 நிமிடத்தில் பெண்கள் கடையையே காலி செய்துள்ளனர். ரஷியா நாட்டின் உள்ள விளாடிகவ்கஸ் என்ற நகரில் அமைந்துள்ள ஷாப்பிங் சென்டரில் ஸ்டோலிஸ்டா என்ற துணிக்கடை இயங்கி வருகின்றது. இந்த கடை ஏராளமான வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக அதிரடி சலுகை ஒன்றை அறிவித்தது.  அதில் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்ற விலையில் கடையில் துணிகள் விற்கப்படும் என்று கடைக்கு வெளியே விளம்பரம் செய்தது. இந்த அறிவிப்பைக் கண்டதும் […]

Categories
உலக செய்திகள்

அமேசானுக்காக கைகோர்த்த 7 நாடுகள் …!!

அமேசான் மழை காட்டு தீயை அணைக்க 7 நாடுகள் முன்வந்து ஒப்பந்தம் செய்துள்ளது. உலகத்தின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் மழை காட்டு தீ சமூக ஆர்வலர்களை வேதனை கொள்ள வைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக பற்றி எரிந்து வரும் காட்டு தீயால்  அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் மரணித்துள்ளது. பல்வேறு உலக நாடுகள் அமேசானை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் உலகம் முழுவதும் எழுந்து வருகின்றது. இந்நிலையில் தென்னமெரிக்காவில் அமேசான் காடுகளில் பரவியுள்ள  பிரேசில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானை விட்டு வெளியேறும் அமெரிக்கா படைகள்…!!

ஆப்கானில் இருக்கும் அமெரிக்க படைகளை விலகிக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் அங்குள்ள அரசுக்கு எதிராக தலிபான்கள் உள்நாட்டு போரை நடத்தி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த அமெரிக்காவும் தனது படைகளை அனுப்பி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்த சூழலில் தற்போது அமெரிக்கா படைகளை விலகிக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நிலைகொண்டுள்ள தமது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக தலிபான்களுடன் மேற்கொண்டுள்ள அரசியல் தீர்வுகாண பேச்சுவார்த்தையில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 08…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 08 கிரிகோரியன் ஆண்டு : 251_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 252_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 114 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 617 – லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது. 1198 – பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். 1276 – இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1331 – இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1380 – குலிக்கோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன. 1504 – மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது. 1514 – நூற்றாண்டின் மிகப்பெரும் […]

Categories
கட்டுரைகள் பல்சுவை

சர்வதேச எழுத்தறிவு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது…?

செப்டம்பர் 8-ஆம் தேதி ஏன் சர்வதேச எழுத்தறிவு தினத்தை நாம் கொண்டாடுகின்றோம். கல்வியறிவு குறித்த மனித கவனத்தை ஊக்குவிப்பதற்கும் சமூக மற்றும் மனித வளர்ச்சிக்கான  உரிமைகளை அறிந்து கொள்வதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒருவர் உணவு , உடை , இருப்பிடம் அனைத்தையும் முழுமையாக பெற்று நிம்மதியான வாழ்வுக்கு கல்வியறிவு முக்கியம். வறுமையை ஒழிப்பதற்கும், குழந்தை இறப்பைக் குறைப்பதற்கும், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கும், பாலின சமத்துவத்தை அடைவதற்கும் இது ஒரு அவசியமான கருவியாகும். கல்வியறிவு ஒரு குடும்ப நிலையை […]

Categories
கட்டுரைகள் பல்சுவை

”2030_க்குள் அனைவரும் கல்வியறிவு” யுனெஸ்கோ உறுதி …!!

சர்வதேச எழுத்தறிவு தினத்தை அனுசரித்து வரும்  யுனெஸ்கோ 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவரும் கல்வி அறிவு பெறுவார்கள் என்று உறுதியளித்துள்ளது. சர்வதேச எழுத்தறிவு தினம் கல்வியறிவின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், உலகளவில் கல்வியறிவுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொள்ளவும் உதவுகிறது. எழுத்தறிவு என்பது ஒரு நபரின் வாசிப்பு அல்லது எழுதும் திறன், மக்களை இணைக்கும் மற்றும் மேம்படுத்தும் திறன், உலகத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் திறன் மற்றும் இது  ஒரு அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் […]

Categories
கட்டுரைகள் பல்சுவை

சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டங்கள்…. அசத்தும் யுனெஸ்கோ….!!

சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டத்தில் யுனெஸ்கோ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டங்களின் அனைத்து நாடுகளின் குறிக்கோள்களும் கல்வி மற்றும் எழுத்தறிவு திட்டங்களுக்கு ஏற்ப பல்வேறு திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டன.  2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான சர்வதேச கல்வியறிவு தின கொண்டாட்டத்தின் கருப்பொருள் “கல்வியறிவு மற்றும் ஆரோக்கியம்”, சுகாதாரக் கல்வியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இது ஐக்கிய நாடுகளின் எழுத்தறிவு சகாப்தத்தில் 2007-2008  ஆண்டுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. குறிப்பாக 2008-ஆம் ஆண்டுக்கான சர்வதேச […]

Categories
கட்டுரைகள் பல்சுவை

77,50,00,000 பேர் படிப்பறிவு அற்றவர்கள்… யுனெஸ்கோ அறிக்கையில் தகவல்..!!

உலகளவில் சுமார் 775 மில்லியன் மக்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்று யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 775 மில்லியன் அளவுக்கு மக்கள்  குறைந்தபட்ச கல்வியறிவு திறன் கூட இல்லாமல் இருக்கின்றனர்.  குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் 5 நபர்களில் ஒருவர் இன்னும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். இதில் மூன்றில் இரண்டு விழுக்காடு பெண்கள் தான் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கின்றனர். 60.7 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் கல்வியறிவு அற்றவர்கள் எண்ணிக்கை மீது அதிக […]

Categories
கட்டுரைகள் பல்சுவை

செப்.8 சர்வதேச கல்வியறிவு நாள் …!!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8_ஆம் தேதி சர்வதேச கல்வியறிவு நாள் கடைபிடிக்கப்படுகின்றது. யுனெஸ்கோ என்று பொதுவாக அழைக்கப்படும் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார நிறுவனம்  எழுத்தறிவின்மையை அகற்றும் பொருட்டு 1965 ம் ஆண்டு செப்டம்பர் 8 -ம் நாள் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின்மாநாடு ஒன்றை நடத்தியது. இம்மாநாட்டில் எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது. எழுத்தறிவின்மையை உலகிலிருந்து அறவே அழிப்பதற்காக ஆற்ற வேண்டிய பணிகள் நடைமுறைகள் ஆகியவைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கையையும் அளித்தது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 07…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 07 கிரிகோரியன் ஆண்டு : 250_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 251_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 115 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்:   70 – உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது. 878 – திக்குவாயர் லூயி மேற்கு பிரான்சியாவின் மன்னராக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூடப்பட்டார். 1159 – மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் 1191 – மூன்றாம் சிலுவைப் போர்: இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அர்சுப் நகரில் நடந்த சண்டையில் சலாகுத்தீனைத் தோற்கடித்தார். 1228 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.[1] […]

Categories
உலக செய்திகள்

 ஆத்தாடி ஒரு பீர் ”ரூ 49,01,567” அரண்டு போய் பில் கட்டிய எழுத்தாளர்….!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர்  பீர் குடித்ததற்கு 1 லட்சம் டாலர் செலுத்தியது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக பெரிய பெரிய ஆளுமைகள் மது அருந்துவதற்காக பெரிய பெரிய நட்சத்திர விடுதியை நாடுவது உண்டு. அந்த வகையில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள விடுதிக்கு சென்ற  ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் பீர் ஆர்டர் செய்து அருந்தியுள்ளார். அப்போது அவருக்கு லட்சக்கணக்கில் பில் போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீட்டர் லாலா என்பவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டு இருக்கும் ஆஷஸ் தொடரில் இருந்து வருகின்றார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 06…!!!

  இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 06   கிரிகோரியன் ஆண்டு : 249_ஆம் நாளாகும்.   நெட்டாண்டு : 250_ஆம் நாள்.   ஆண்டு முடிவிற்கு  : 116 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1522 – பேர்டினண்ட் மகனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது. 1620 – வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

”ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்து”…. ஓட்டுநர் பரிதாப பலி… 34-க்கும் மேற்பட்டோர் காயம்.!!

ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.  ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் உள்ள யோகோஹாமா நகரம் அருகே, ரயில்வே கடவு பாதை அமைந்துள்ளது. இந்த பாதை வழியாக இன்று காலை 11:40 மணியளவில் பயணிகள் ரயில் ஓன்று டோக்கியோ நோக்கி செல்ல முயன்றபோது, திடீரென கடவுப்பாதை வழியாக பழங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வேகமாக ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சின்னாபின்னமானதோடு மட்டுமில்லாமல் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கரும்புகை […]

Categories
உலக செய்திகள்

“இன்ப அதிர்ச்சியால் விபரீதம்” மகளை துப்பாக்கியால் சுட்ட தாய்… அமெரிக்காவில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் சொல்லாமல் வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சி தர முயன்ற இளம்பெண் தாயாலே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மகள் தாய்க்கு  இன்ப அதிர்ச்சி கொடுக்க மெதுவாக வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் திருடன் ஒருவன் வீட்டிற்குள் வருவதாக கருதிய பெண் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு தனது படுக்கை அறையின் கதவை திறந்து வைத்து காத்திருந்தார். அப்பொழுது உள்ளே ஒருவர் நுழைந்ததும் தாய் ஸ்பெஷல் ரிவால்வர் துப்பாக்கியால் சுட்டார். பின் சுடப்பட்டது தான் பெற்ற […]

Categories
உலக செய்திகள்

ஒருவழியாக முடிவை மாற்றிய ஹாங்காங்…. கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ்.!!

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கைதிகளை நாடு கடத்தும் திட்ட மசோதா வாபஸ் பெறப்படும் என ஹாங்காங்  அறிவித்தது.     கடந்த 3 மாதங்களாக  சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்லும் திட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான். ஆகவே அரசின் முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. மேலும்  ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலககோரியும் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் […]

Categories
உலக செய்திகள்

”கலிபோர்னியாவில் 34 பேர் உயிரிழந்த படகு தீ விபத்து ”…. 2 இந்தியர்களும் பலி.!!

கலிபோர்னியாவில் சுற்றுலா பயணிகளின் படகு தீ பிடித்து  34 பேர் பலியானதில் 2 இந்தியர்களும் உயிரிழந்திருப்பது  தற்போது தெரியவந்துள்ளது.   அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டாகுரூஸ் தீவில் கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறை  மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பார்த்து மகிழ்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அங்கே ஸ்கூபா டைவிங் கிலும் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி 38 பேர் கொண்ட குழு ஒன்று […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் இந்து பெண் முதல்முறையாக காவல் அதிகாரியாக தேர்வு..!!

பாகிஸ்தானை சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல்முறையாக காவல் துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள் சுமார் 70,00,000 பேர் வசித்து வருகின்றனர். அங்கு குறிப்பாக சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாகாணத்தை சேர்ந்த இந்து பெண்ணான புஷ்பா கோலி என்ற இந்து பெண் மாகாண அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் எழுதி வெற்றி பெற்று காவல் துணைஉதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மனித உரிமைகள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 05…!!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 05   கிரிகோரியன் ஆண்டு : 248_ஆம் நாளாகும்.   நெட்டாண்டு : 249_ஆம் நாள்.   ஆண்டு முடிவிற்கு  : 117 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1666 – லண்டனின் பெரும் தீ அணைந்தது. 13,200 வீடுகளும் 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 16 பேர் கொல்லப்பட்டனர். 1698 – ரஷ்ய பேரரசன் முதலாம் பீட்டர் தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி பெற  உத்தரவிட்டான். 1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டாம்…. பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்… பாக்., இளைஞரின் பேச்சு வைரல்.!!

பாக்.பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு  வாலிபர் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து பாகிஸ்தான் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலளித்த இந்தியா காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவதாரம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரைக்கும் எடுத்து சென்றது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயற்சி தோல்வி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி…. குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்.!!

அமெரிக்காவில் 14 வயது சிறுவன் தனது குடும்பத்தினர் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் அலபாமா அருகே இருக்கும் எலெக்ட்ரான் என்ற இடத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டில் இருந்த குடும்பத்தினர் 5 பேரை திடீரென சுட்டு கொன்றுவிட்டான். சுடப்பட்ட ஐந்து பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த செயலை செய்து முடித்தபின் சிறுவன் தானாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 04…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 04   கிரிகோரியன் ஆண்டு : 247_ஆம் நாளாகும்.   நெட்டாண்டு : 248_ஆம் நாள்.   ஆண்டு முடிவிற்கு  : 118 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 476 – கடைசி ரோமப் பேரரசன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் முடிதுறந்தான். 1666 – லண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன. 1781 – லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 03…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 03   கிரிகோரியன் ஆண்டு : 246_ஆம் நாளாகும்.   நெட்டாண்டு : 247_ஆம் நாள்.   ஆண்டு முடிவிற்கு  : 119 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 301 – உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிக பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது.   1189 – முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.   1260 – பாலஸ்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 02…!!

  இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 02   கிரிகோரியன் ஆண்டு : 245_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 246_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 120 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1642 – இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது. 1666 – லண்டன் பெரும் தீ: லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன. 1752 – கிரெகொரியின் நாட்காட்டி மேற்கு […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் “115 அடி உயரம்”… பிரம்மாண்ட கண்ணாடி நீச்சல் குளம்… எதிர்பார்ப்பில் மக்கள்.!!

இங்கிலாந்தில் தலைநகர் லண்டனில்  115 அடி உயரத்தில் பிரம்மாண்ட   நீச்சல் குளம் ஓன்று அமைக்கப்பட்டு வருகிறது.  இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் அமெரிக்க  தூதரகத்தின் அருகில் இருக்கும் இரண்டு கட்டடங்களின் உச்சத்தில் நடுவே  சுமார் 115 அடி உயரத்தில்  நீச்சல் குளம் ஓன்று அமைக்கப்பட உள்ளது. இந்த நீச்சல் குளத்தினை கடின அழுத்தம் மற்றும் பாரம் தாங்கும் அதிக தடிமனான கண்ணாடியின்  மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது நீச்சல் குளம்  கட்டப்பட்டு வருவதால் அடுத்த ஆண்டு கோடை காலத்தின் போது திறக்கப்படும் என […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

“பார்முலா 2 கார் பந்தயம்”… விபத்தில் சிக்கி இளம் வீரர் உயிரிழப்பு… வீரர்களிடையே சோகம்..!!

பெல்ஜியத்தில் நடந்த பார்முலா 2 கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கி இளம் வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா – ஸ்டாவோல்டில் பிரபல பார்முலா 2 கார் பந்தயம் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதில் பிரான்ஸை சேர்ந்த அந்தோன் ஹூபர்ட்  (anthonie hubert) என்ற 22 வயதான இளம் வீரரும் கலந்து கொண்டார். இவர் பல்வேறு கார் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு வென்றுள்ளார். இந்நிலையில் போட்டியின் போது எதிர்பாராத […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 5 பேர் பலி… 21 பேர் படுகாயம்…!!

அமெரிக்காவின் டெக்சாஸில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.  அமெரிக்காவில் உள்ள மேற்கு டெக்சாஸில் இருக்கும் மிட்லேண்ட் பகுதியில் ஒரு மர்ம நபர் தனது வாகனத்திலிருந்து கொண்டு அங்கிருந்த மக்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதன்பின் அந்த  அந்த நபர் அங்கிருந்த தபால் கொண்டு செல்லும் லாரியை கடத்திச் சென்றார்.  இதையடுத்து விரைந்த போலீசார் அவரை வழியில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 01…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 01 கிரிகோரியன் ஆண்டு : 244_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 245_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 121 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1420 – சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலைதாக்கியது. 1449 – மங்கோலியர்கள் சீனப் பேரரசரைக் கைப்பற்றினர். 1529 – அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது. 1532 – ஆன் பொலின் பெம்புரோக்கின் கோமாட்டியாக அவரது கணவராக  நிச்சயிக்கப்பட்ட  இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் அறிவிக்கப்பட்டார். 1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது. 1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 31…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 31 கிரிகோரியன் ஆண்டு : 243_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 244_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 122 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது. 1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார். 1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை  பேர்கனில்  இருந்து  ஒசுலோவுக்கு  மாற்றினார். 1422 – இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல்  நோயினால் இறந்தார். அவரது மகன் […]

Categories
உலக செய்திகள்

ஆற்றங்கரையோரம் மீனை துரத்திய முதலை… பயந்து ஓடிய ஜோடி..!!

ஆஸ்திரேலியாவில் மீன் பிடிக்க வந்த தம்பதியினர் இருவரையும் பசியோடிருந்த முதலை ஒன்று  அச்சுறுத்தி மீனை விழுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கஹில்ஸ் கிராசிங் என்ற இடத்தில் உள்ள கக்காடு  (Kakadu) தேசியப் பூங்காவில் கணவன் மனைவி இருவரும்  ஆற்றங்கரையில் மீன் பிடிக்கச் சென்றனர். இருவரும்  நீண்ட நேரமாக தூண்டிலை போட்டு மீனுக்கு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் மீன் மாட்டவே இல்லை. இறுதியாக ஒரு வழியாக அவர்களில் மனைவிக்கு மீன் ஒன்று தூண்டிலில்  சிக்கியது. இதனை மெதுவாக அவர் வெளியே இழுத்தார். […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பரவி வரும் ‘எய்ட்ஸ்’…. ஒரே ஆண்டில் 140 பேர் பாதிப்பு..!!

பாகிஸ்தானின் ஷாகாட்  நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக  பரவி வருகிறது.  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசிடம் சட்ட அமலாக்க நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் ஷாகாட் (Shahkot) நகரில் 140 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 85 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு வசதிகள் மாவட்ட நிர்வாகங்களிடம் இல்லாததே எச்.ஐ.வி நோய் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

திடீரென “நெருப்பு பிளம்பை தெறிக்க விடும் ஸ்ட்ராம்போலி எரிமலை”…. பீதியில் உறைந்த மக்கள்..!!

இத்தாலியில் புகையை மட்டும் வெளியேற்றி வந்த ஸ்ட்ராம்போலி எரிமலை திடீரென நெருப்பு பிளம்பை தெறிக்க விடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமாகும். இங்கு சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இந்த  கடலை ஒட்டி அமைந்திருக்கும் ஸ்ட்ரோம்போலி என்ற  எரிமலையானது உலகிலேயே அதிக செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகளில் ஒன்று என  ஜியாலஜி டாட் காம் (geology.com) என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்ட்ரோம்போலி எரிமலை  1932-ம் ஆண்டு முதலே அடிக்கடி சீறி வருகின்றது.  கடந்த 2 நாட்களாக இது புகையையும் […]

Categories
உலக செய்திகள்

”ரூ 41,00,000 மின்கட்டணம்” கட்ட முடியாமல் திணறும் பிரதமர் அலுவலகம்…!!

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படுமென்று அந்நாட்டு மின்சாரவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகத்தின் மின்சார பாக்கி பணத்தை செலுத்தாமல் இருந்ததாக சர்சை எழுந்தது. மேலும் மின்சார பாக்கி வைத்துள்ளது தொடர்பாக இஸ்லாமாபாத் மின்விநியோக வாரியம் பிரதமர் அலுவலகத்துக்கு நோட்டீஸ்ஸை அனுப்பியுள்ளது. அதில் பிரதமர் அலுவலகம் மின்கட்டண பாக்கியாக ரூ.41 லட்சம் வைத்துள்ளது. கடந்த மாதமே கட்ட வேண்டிய மின்சாரக் கட்டணம் ரூ.35 லட்சம் கட்டவில்லை. இது தொடர்பாக மின்சார வாரியம் சார்பில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 30…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 30 கிரிகோரியன் ஆண்டு : 242_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 243_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 123 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்:   70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார். 1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது. 1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார். 1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் […]

Categories
உலக செய்திகள்

“கையில் குழந்தையுடன் மனைவி”…. ஈவு இரக்கமின்றி அடித்து துன்புறுத்தும் கணவன்… வைரலாகும் காட்சிகள்..!!

வியட்நாமில்  கையில் குழந்தையுடன் இருக்கும் மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது.   வியட்நாமில் வூ தி தூ லி (Vu Thi Thu Ly) எனும் 27 வயது பெண், பிரபல வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வூஷு ங்குயென் ஸ்வான் (Nguyen Xuan Vinh)  என்ற கணவரும் ஒரு மகளும் இருக்கின்றனர். தற்காப்புக் கலை பயிற்றுனராக இருக்கும் கணவர் மனைவி வூ தி தூ லியை தொடர்ந்து  அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் விவகாரத்து பெற்றார். […]

Categories
உலக செய்திகள்

6,00,000 மக்கள் காலி…. ஜப்பானை புரட்டி போட்ட கனமழை…!!

ஜப்பானியில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள 6 லட்சம் மக்களை காலி செய்து மாற்று இடத்துக்கு செல்லுங்கள் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள  தென்மேற்கு பகுதியில் அமைந்து இருக்கும் தீவு மாகாணத்தின் குயூஷுவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள தாழ்வான மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. சகா, நாகசாகி உள்பட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளநீர் தேங்கி கிடைப்பதால் முற்றிலும் மக்களின் […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோ பெட்ரோல் குண்டு தீ விபத்து” பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு..!!

மெக்சிகோவில் இரவு விடுதிக்குள் நடந்த பெட்ரோல் குண்டு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.  மெக்ஸிகோவின் வெராக்ரூஸ் மாகாணத்தில் உள்ள  வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஸாகோல்கோஸில் (Coatzacoalcos) ஒரு இரவு விடுதியில் அந்நாட்டு நேரப்படி கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை  அன்று இரவு திடீரென ஒரு கும்பல் விடுதிக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த  தீ விபத்தில்  23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீக்காயங்களுடன்  13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

”ஜப்பானில் நிலநடுக்கம்” ரிக்டர் அளவில் 6.1_ஆக பதிவு…!!

ஜப்பானில் ஏற்பட்ட  நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் நாட்டின் ஹோகைடோ பகுதியில் அந்நாட்டின் நேரத்திற்கு அதிகாலை 5.16 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. எவ்வித சேதாரமும்  தெரிவிக்கப்படாத நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது.

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 29…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 29 கிரிகோரியன் ஆண்டு : 241_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 242_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 124 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 708 – செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது. 1009 – செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. 1261 – நான்காம் உர்பானுக்குப் பின்னர் நான்காம் அலெக்சாந்தர் 182-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1350 – வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன. 1484 – எட்டாம் இனசென்ட்டுக்குப் பின்னர் […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோவில் அதிர்ச்சி” இரவு விடுதியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்… 23 பேர் உடல் கருகி பலி..!!

மெக்சிகோவில் இரவு விடுதிக்குள் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மெக்ஸிகோவின் வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஸாகோல்கோஸில் ஒரு இரவு விடுதி வழக்கம் போல செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நாட்டு நேரப்படி கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை  அன்று இரவு திடீரென ஒரு கும்பல் விடுதிக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது.  பெட்ரோல் குண்டு வெடித்து தீ பிடித்ததில் 15 ஆண்கள், 8 பெண்கள்  சேர்த்து மொத்தம் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். […]

Categories
உலக செய்திகள்

கடுமையான கோபம்…. 3 முறை காரை புரட்டிய காண்டாமிருகம்… அதிர்ந்த பராமரிப்பாளர்..!!

ஜெர்மனியில் சஃபாரி பூங்காவில்  விலங்கு பராமரிப்பாளர் வந்த காரின் மீது காண்டாமிருகம் ஓன்று  கோபத்துடன் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது  ஜெர்மனிய மாநிலமான லோயர் சாக்சனியில் (Lower Saxony ) உள்ள நகராட்சியான ஹோடன்ஹேகனில் உள்ள செரெங்கேட்டி (Serengeti ) சஃபாரி பூங்காவில் விலங்கு பராமரிப்பாளர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்  வந்த காரின் மீது கோபத்துடன் 30 வயதான குசினி (kusini) என்ற காண்டாமிருக காளை, தனது கொம்புகளை வைத்து மூன்று முறை புரட்டி போட்டது. மிருகத்தனமான தாக்குதலில் வாகனம் கடுமையாக சேதமடைந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மோதாதே….!! மறக்க முடியாத பதிலடி கொடுப்போம்…..வெங்கையா எச்சரிக்கை…!!

இந்தியா மீது பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசும் போது, இந்தியா எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது கிடையாது.வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்திய போதும் நாம் யாரையும் தாக்கவில்லை. ஆனால், யாராவது  இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றால் அவர்கள் வாழ்நாளில் […]

Categories

Tech |