பாகிஸ்தானிலுள்ள மசூதி அருகே திடீரென்று ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 4 போலீசார் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரான குவெட்டாவில் உள்ள சாட்டிலைட் நகரில் தொழுகைக்காக கூடியிருந்த மசூதி அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த வெடி குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் சுற்றியிருந்த கடைகள், கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் 4 போலீசார் உடல்சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலறிந்து விரைந்த ராணுவத்தினரும், போலீசாரும் சம்பவ […]
Tag: World
தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 300_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 500_க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலை நடத்தியதாக ISIS பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய […]
அலாஸ்காவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 5 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சமீபத்தில் விமானத்தின் மூலம் நிகழும் விபத்துகள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில், ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் சுற்றுலா பயணிகள் 7 நாள் பயணம் மேற்கொண்டனர். இவர்களுள் 10 சுற்றுலா பயணிகள் அலாஸ்கா பகுதியிலுள்ள கெட்சிகன் என்ற இடத்தை மிதக்கும் விமானம் மூலம் சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தனர். அதே நேரத்தில் 4 பேர் கொண்ட மற்றொரு சுற்றுலாக் குழுவினர் வேறொரு மிதக்கும் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது […]
மக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் தவறாக வெளியான சமூக வலைத்தள பதிவால் அங்குள்ள இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதனால் அங்கு ஏற்பட்ட தொடர் பதற்றம் காரணமாக இன்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு , இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கபட்டது. மேலும் புட்டாளம், குருநெங்களா […]
இலங்கையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு என்று காவல்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நச்சத்திர விடுதிகளில் தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர தீவிரவாத […]
மியான்மரில் 89 பேரை ஏற்றிச்சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மியான்மர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான யுபி-103 விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு தரையிறங்க முயன்றது. அப்போது அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்துள்ள நிலையில், உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி சாதுரியமாக […]
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக, இலங்கையின் ஒரு சில இடங்களில் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நச்சத்திர விடுதிகளில் தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதம் மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]
ஆப்கானிஸ்தானில், முன்னாள் பெண் பத்திரிகையாளரான மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் காபூல் தலைநகரில் முன்னாள் பெண் பத்திரிகையாளரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாச்சார ஆலோசகருமான மேனா மங்கல் பட்டப்பகலில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், எந்த காரணத்திற்காக மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர். சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக மேனா மங்கல், எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தாரென்று, புகழ்பெற்ற பெண் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான வஸ்மா […]
ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் பெண்மணி மீனா மங்கள். இவர் பத்திரிகையாளரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் பணிபுரிகிறார். உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்திவாசிப்பாளராகவும் பணிபுரிந்து வரும் இவர் தற்பொழுது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வருடத்தில் நடந்த ஆப்கானிஸ்தானின் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக […]
ஈரானில் கெர்மான்ஷா மாகாணத்தில் இன்று மதியம் சுமார் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் உள்ள கெர்மான்ஷா மாகாணம் மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இங்கு கடந்த 2016_ம் ஆண்டு நவம்பர் மாதம் சுமார் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்த பகுதியில் இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை கண்டு பயத்தில் மக்கள் அலறியடித்து தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
ரஷ்ய அதிபர் புதின் ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்று 4 கோல்கள் அடித்து தனது அணியை வெற்றியடையச் செய்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜூடோ மற்றும் சாகசச் செயல்களில் அதிக ஆர்வமுடையவர். இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். இந்நிலையில் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட புதின், நைட் ஹாக்கி லீக் என்ற அணியில் பங்கேற்று விளையாடினார். அந்த அணியில் புதினுடன் பாதுகாப்புத்துறை அமைச்சரான செர்ஜி சோய்குவும் விளையாடினார். இறுதியில் அதிபர் புதின் சேர்ந்து விளையாடிய அணி […]
ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியூஷ் தீவில் திடிரென்று சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மியாசகி பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் தனது வீடுகளில் இருந்து வெளியேறினார். உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணியளவில் […]
மங்கோலியா அருகே உடல் வலிமைக்காக அணிலை உண்ட தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நம்மில் பலபேர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றோம். நம்முடன் நெருங்கியவர்கள், நண்பர்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க ஏதாவது டிப்ஸ் கொடுத்தால் அதன் படி செய்வோம். அதே போல் மங்கோலியா நாட்டில் வசிக்கும் மக்களில் சிலர் உடல் வலிமையடைய அணிலை சமைக்காமல் பச்சையாக சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கையுடையவர்கள். மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லை பகுதியில் சகானூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் […]
ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்தும் வகையில் இமாச்சலபிரதேசத்தில் நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஒவ்வொரு இந்தியனும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயக கடமையாகும். இதை அனைவருக்கும் உணர்துவதர்கு இமாச்சல பிரதேசம் குலு என்ற இடத்தில் ஒரு உணர்ச்சி பூர்வமான நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5000 பெண்கள் கலந்து கொண்டு பாரம்பரிய உடையில் நடமாடினர்.
சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் மீது மோதிய விண்கல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சந்திர கிரகணத்தின் போது விண்கல் ஒன்று சுமார் 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சந்திரனின் மீது மோதியுள்ளது என்றுஸ்பெயின் நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 45 கிலோ எடை கொண்ட இந்த விண்கல் சந்திரனில் 15 மீட்டர் பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள ஸ்பெயின் நாட்டு அறிஞர்கள் இந்த கல் வால் நட்சத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
புளோரிடாவில் இருந்து 136 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 136 பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும் போது நிலை தடுமாறி விமான நிலையம் அருகே உள்ள ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் விழுந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். […]
துருக்கி நாட்டின், பலிகேசிர் மாகாணம் அருகே 16 குடியேறிகளுடன் வந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது. உள்நாட்டுப் போராலும், வறுமையாலும் சொந்த நாட்டை விட்டு தினந்தோறும் மக்கள் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக நுழைகின்னறனர். இந்த அகதிகள் ரப்பர் படகில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொள்வதாகவும், இவர்கள் செல்லும் சில படகுகள் நடுக்கடலிலேயே கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், இன்று துருக்கி நாட்டில் உள்ள அயவலிக் மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் 16 அகதிகளுடன் வந்த […]
அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் சீனாவையும், இந்தியாவையும் சேர்ந்தவர்கள் என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகவளின் படி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 11.7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 5.8 லட்சம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் சீனாவை கணக்கிடும் போது 49.5 சதவீதம் மாணவர்கலும் பயின்று வருகின்றனர். மேலும் இந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 75 சதவீதம் மாணவர்கள் முதுநிலை […]
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நினைவு சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் நேற்று இரவு சேதமடைந்துள்ளது. ஐதராபாத்தின் அடையாள சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் முகம்மது குலி குதுப் ஷாவால் என்ற மன்னரால் கட்டப்பட்டது. 1591_ம் ஆண்டு கட்டப்பட்டு 428 வயதான இந்த கோபுரம் 160 உயரமுள்ளது. சமீபத்தில் இந்த கோபுரத்தை இந்தியாவிலுள்ள தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஒன்றால் புதுப்பிக்கப்பட்டது. நான்கு கோபுரங்களை கொண்டதால் சார்மினார் என பெயரிடப்பட்ட இந்த கோபுரத்தின் தூண் ஒன்று நேற்று இரவு சேதமடைந்து கீழே விழுந்தது. […]
உலகிலேயே முதன்முதலாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த 44 வயது பெண்மணிக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து அவருக்கு மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் இந்த சிகிச்சை நடந்தது. இதில் அமெரிக்க நிறுவனம் ஒன்று சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நோயாளிகளிடம், உறுப்புகளை விரைவாக கொண்டு […]
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறைப்பிடித்த அந்த நாளை பாகிஸ்தான் ஆண்டு தோறும் கொண்டாட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பினரால் புல்வாமா பகுதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமான படை வீரர்கள் பிப்ரவரி 26-ஆம் தேதி பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் […]
இந்திய ராணுவத்தினர் இமயமலையில் பனிமனிதனின் காலடித்தடங்களை கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இமயமலை பனிபிரதேசங்களில் பனிமனிதன் வாழ்வதாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் வசிக்கும் மக்கள் பனி மனிதனை கடவுளாகவே வழிபடுகின்றனர். இந்நிலையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் இமய மலையில் ஏறும் போது மர்மமான மிகப்பெரிய காலடித் தடங்களைப் பார்த்துள்ளனர். இக்காலடி தடங்களை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை எட்டியின் காலடித் தடங்கள் என்று டுவிட் செய்துள்ளனர். மேலும் மகாலு முகாம் அருகில் எட்டியின் கால்தடம் இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேபாள அதிகாரிகள், ராணுவத்தின் இந்த கூற்றை […]
அமெரிக்காவில் ஒருவர் தான் வளர்த்து வந்த பூனையின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்பி வைத்து பிரமாண்ட இறுதிசடங்கு நடத்தவுள்ளார். உலகில் பலரும் செல்லப்பிராணிகளான நாய், பூனையை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்த்து அதன் மீது அளவு கடந்த அன்பை காட்டி மகிழ்வர். இந்நிலையில் திடீரென செல்லப் பிராணியான ஏதேனும் ஓன்று இறந்து விட்டால் அவர்கள் சோகத்திலும் மனதளவிலும் சோர்ந்து போய் விடுகிறார்கள். சிலர் கண்ணீர் விட்டு அழுது அதனை மரியாதையுடன் மனிதனுக்கு செய்வது போல் மரியாதையுடன் அடக்கம் செய்வார்கள். இப்படி இருக்கும் நிலையில் அமெரிக்காவின் […]
அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாட்டில் துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு என சர்வ சாதாரணமாக துயர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அமெரிக்காவின் சார்லோட்டேவில் உள்ள கரோலினா பல்கலைக்கழகத்தில் நேற்று கடைசிநாள் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது ஒருவன் உள்ளே நுழைந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். இதில் 2 […]
இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என இதுவரை அடுத்தடுத்து 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 250_க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த கொடூர தாக்குதலில் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மீண்டும் தற்கொலை […]
அமெரிக்காவில் புயல் காற்று வேகமாக சுழன்றடித்ததை ஒருவர் “டைம்லாப்ஸ்” முறையில் படம் பிடித்துள்ளார். இயற்கையில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் ஏதாவது விசித்திரமான நிகழ்வு இவ்வுலகில் நடைபெறுகிறது. இதனால் வானில் வித்தியாசமாகவும், பார்ப்பதற்கு சற்று திகைப்பூட்டும் வகையில் ஏதாவது மாறுதல் நிகழ்கிறது. அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் நிலப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சுழற்காற்று ஒன்று உருவானது. மேகங்களை சுற்றி வளைத்த அந்த சுழற்காற்று மெல்ல மெல்ல சுழன்று வந்தது.இது பார்ப்பதற்கு சற்று விசித்திரமாக இருந்ததால் அனைவரும் […]
இலங்கை குண்டு வெடிப்பையடுத்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 21.04.2019)-யில் நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.இந்த குண்டுவெடிப்புகளில் 11 இந்தியர்கள் உள்பட 42 வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர். மேலும் 253 பேர் உயிரிழந்தது உலகையே அதிர வைத்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியதாக […]
பிரேசிலில் ராட்சத அனகோண்டா பாம்பு ஒன்று, சாலையை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. பிரேசில் நாட்டில் போர்டோ வெலோ (Porto Velho) என்னும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் ராட்சச பச்சை நிற அனகோண்டா பாம்பு ஓன்று இரு வழி சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது ஏறி மெதுவாக ஊர்ந்து சென்றது. இதனால் அந்த பகுதியின் வழியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இந்த பாம்பு சுமார் 3 மீட்டர் நீளம் , 30 கிலோ எடை […]
சீனாவில் இருந்து 2 பாண்டா கரடிகள், ரஷ்யாவுக்கு தனி விமானத்தில் ஆராய்ச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சீனாவிலிருந்து அழகிய 2 பாண்டா கரடிகள் ஆராய்ச்சிக்காக ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு 15 ஆண்டுகள் வரை அங்கு தங்கவைக்கப்படவுள்ளன. அதன்படி ரூ இ (Ruyi) என்ற அந்த ஆண் பாண்டாவும், டிங் டிங் (Dingding) என்ற அந்த பெண் பாண்டாவும் பெட்டியில் அடைக்கப்பட்டு வண்டியில் கொண்டு சென்றனர். பின்னர் தனி விமானத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. இந்த அழகிய பண்டாவிற்கு காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளும் அப்போது […]
நேபாள அரசின் சார்பில், உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் , 3,000 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 1953ஆம் ஆண்டில் முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு எட்மெண்ட் ஹிலாரி, டென்சிங் ஆகியோர் சாதனை படைத்தனர். இதனை நினைவுபடுத்துவதற்கு, நேபாள அரசு எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவோர் வழியில் விட்டு சென்ற சமையல் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் அவர்களது உடைமைகள் போன்றவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை நேபாள அரசு […]
ரஷ்ய நாட்டிற்கு உளவு பார்த்து வந்த பெலூகா (beluga) வகை திமிங்கலத்தை மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர். நார்வே நாட்டில் உள்ள ஆழ்கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெலூகா வகை திமிங்கலம் (beluga whale) ஒன்று அந்த இடத்தில் சுற்றித் திரிந்ததை மீனவர்கள் கண்டனர். அந்தத் திமிங்கலம் மீனவர்கள் அருகில் வந்த போது அதன் மேல் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து மீனவர்கள் அந்தக் கேமராவை எடுத்துப் பார்த்தனர். அப்போது இந்த வகை கேமரா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதும், உளவு வேலைகளுக்காக இந்த திமிங்கலம் […]
அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள தேவாலயம் அருகே நேற்று முன்தினம் மாலை திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மக்கள் பலர் உணவை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவனிடம் உள்ள துப்பாக்கியை எடுத்து திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டான். இதனால் அச்சமடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் […]
அடுத்தடுத்து இலங்கையில் தொடர்ந்து குண்டு வெடிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைக்காக யாரும் பர்கா அணிய கூடாது என்று இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தது. 9 தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் 253 பேர் பலியானார்கள். மேலும் 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இத்தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பை […]
இலங்கைக்கு யாரும் செல்லவேண்டாம், கூடுமானவரை தவிருங்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 300_க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலை நடத்தியதாக IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதையடுத்து நேற்று இலங்கையின் கல்முனையில் உள்ள வீட்டில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் […]
உக்ரைன் நாட்டில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இங்கு தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
உலகத்தில் அதிகமான இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள், இதில் அதிகமான இரட்டையர்கள் நைஜிரீயாவில் தான் இருக்கிறார்களாம். உலகத்தில் முந்தைய காலகட்டத்தை விட தற்போது அதிகமான இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் பரம்பரை பரம்பரையாக இரட்டையர்கள் பிறந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் என நகரங்களில் இரட்டையர்களின் எண்ணிக்கை நிரம்பியிருக்கிறது. இதில் ஒரு சில இடங்களில் இரட்டையர்கள் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் அவ்வப்போது குழப்பம் ஏற்படுவதாக பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதில் அதிகமான இரட்டையர்கள் நைஜிரீயாவில் உள்ள இக்போ ஓரா நகரத்தில் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. […]
வடகொரியா மற்றும் ரஷ்யா நாட்டு தலைவர்கள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது வெற்றிப் பெற்றுள்ளது என இருநாட்டு அதிபர்களும் அறிவித்துள்ளனர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. சோவியத் ஒன்றியம் சிதைவிற்கு பிறகு ரஷ்யாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே உள்ள உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. கடந்த […]
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்று எழுந்த சந்தேகத்தையடுத்து 39 நாடுகளுக்கான விசா சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த தேவாலயங்கள், அங்கு இருந்த ஓட்டல்கள் என அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 500_க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இலங்கை […]
அமெரிக்காவில் விளைவிக்கப்பட்ட மிகப் பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி அமைத்தது விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள இடாகோ மாகாணத்தின் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2012_ஆம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்_கிழங்கு ஓன்று பயிரிடப்பட்டது. சுமார் 28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையாக விளைந்த இந்த உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறிவிக்கப்பட்ட்து. மேலும் பொதுமக்களின் பார்வைக்காக இந்த உருளைக்கிழங்கு ராட்சத லாரி மூலம் அமெரிக்கா முழுவதும் […]
இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என இதுவரை அடுத்தடுத்து 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 500_க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இலங்கை நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொடர் […]
ஜாகீர் நாயக்கிற்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச போலீஸ் கையில் எடுத்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாத செயலுக்கு தூண்டியதும், மற்ற மதத்தினர் மீது பகைமையை ஏற்படுத்தியதும் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2016_ஆம் ஆண்டு வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜாகிர் நாயக்கிற்கு முக்கிய தொடர்பு இருக்கின்றது என்று அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி இந்திய அரசிடம் நடவடிக்கை […]
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11_ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக இது வரை […]
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. வரலாற்றில் முதல் முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும், […]
இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகின்றது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த கொடூர தாக்குதலை பல்வேறு நாட்டின் தலைவர்கள் […]
இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த […]
சவுதி அரேபியாவில் பயங்கரவாதிகள் 37 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவில் தண்டனைகள் கடுமையாக இருக்கும். அந்நாட்டில் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சகஜம். பொதுமக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். இந்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உறுதியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதத்திற்கு ஆதரவை பரப்பியோர் மற்றும் பாதுகாப்பு படையினரை தாக்கியோர் என 37 பேரை […]
அமெரிக்காவில் நோயாளிகளை ஏற்றி சென்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம், விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மேற்கு ஹவுஸ்டன் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் 5 நோயாளிகளை ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக Beechcraft BE58 ரக விமானம் கெர்வில்லி முனிசிபல் (Kerrville) விமான நிலையம் நோக்கி சென்றது. இந்த விமானம் கெர்வில்லி விமான நிலையத்தை அடைய சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், டெக்சாஸ் அருகே உள்ள மலைப்பகுதியில் திடீரென […]
கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 310 பேர்வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 500_கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது . மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்தும் […]
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் வரை உயிரிழந்ததாக தெரிகின்றது. மேலும் 500_கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது . மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித […]
பிலிப்பைன்சில் நாட்டின் பொடீகா நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிலிப்பன்ஸ் நாட்டின் பொடீகா நகரில் நேற்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அந்நகரில் உள்ள பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியது. அதனால் அந்த பகுதியில் குடியிருந்த மக்கள் பயத்தில் உறைந்து போனார்கள். இதேபோல் பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி […]