சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் காலகட்டத்தில் மட்டும் 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழலில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியிருப்பதாக யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த போர் நடந்த சூழலின் போது சிரியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் சுமார் 48 லட்சம் குழந்தைகள் பிறந்ததாகவும், 28 லட்சம் குழந்தைகள் கல்வி […]
Tag: World
கொரோனா வைரஸ் உலகளவில் 157 நாடுகளில் பராவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவுக்கு பிறகு இத்தாலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் 368 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அந்த நாளில் கொரோனா பலியானோர் எண்ணிக்கை 2000த்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு 2335 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம் புதிதாக 2,900 பேருக்கு கொரோனா உறுதியாக இருக்கிறது. இதுவரை 20 ஆயிரத்து 600 […]
சார்க் நாட்டு தலைவர்கள் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்கள். சார்க் நாட்டு தலைவர்கள் வீடியோ மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பிரதமர் மோடி, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, இலங்கை அதிபர் கோத்தபய, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட பாகிஸ்தான் , பூடான் , நேபாளம் , மாலத்தீவு , பாகிஸ்தான் நாட்டின் தலைவர் பங்கேற்றனர். இதில் பேசிய மோடி , கொரோனா வைரஸ் ( கோவிட் -19 ) நோயை கொள்ளை நோயாக உலக […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஈரானில் ஒரே 113 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரான் நாளுக்கு நாள் வேகமாக உலகம் முழுவதும் பரவியது. 141 நாடுகள் வரை பரவியுள்ள இந்த தொற்றால் 152,428க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,720க்கும் […]
கொரோனா வைரஸை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரான் நாளுக்கு நாள் வேகமாக உலகம் முழுவதும் பரவியது. 141 நாடுகள் வரை பரவியுள்ள இந்த தொற்றால் 152,428க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,720க்கும் அதிகமோர் உயிரை […]
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்படும் என ஈரான்அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் […]
டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டன்ஸ் நிறுவனத்தில் 1,00,000 ஊழியர்களுக்கு வேலை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனைவரையும் அடிமையாக்கி மூழ்கி அடித்து உள்ள ஒரு செயலி என்றால் அது டிக்டாக் தான். இதனுடைய மோகம் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் அதிபயங்கரமாக பரவி இருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை டிக்டாக் செயலிகுள்ளேயே மூழ்கிக் கிடப்பதை முழு வேலையாக பலர் செய்து வருகின்றனர். தற்போது இதன் தாய் […]
கொரோனாவுக்காக கண்டுபிடித்த மருந்தை பரிசோதிக்க போதிய அளவில் ஏசிஇ-2 வகை எலிகள் இல்லாததால் அதனை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தாக்கத்தின் காரணமாக பெங்களூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சினிமா தியேட்டர், கிரிக்கெட் மைதானம் ஊர் திருவிழா என மக்கள் கூடும் பொது இடங்களில் தடை விதிக்கப்பட்டு அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. […]
கொரோனா வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில் எத்தனை நாட்கள் வாழும் என்பது பற்றி மருத்துவ நிபுணர் கூறியுள்ளார். சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இந்த கொடிய கொரோனா […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் (Everest) மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நேபாள அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகத்தயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. 127 நாடுகளில் குடியிருந்து வரும் கொரோனா வைரசால் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு முதியவர் மரணடைந்துள்ளார். இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் […]
இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை தனி விமானம் செல்கின்றது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 5000த்திற்கும் மேல் உயிரிழந்துள்ளனர். சீனாவை தொடர்ந்து அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்திருக்கும் நாடு இத்தாலி . இந்நிலையில் இங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நாளை செல்கிறது என்று மத்திய விமான போக்குவரத்து துறை இணைச் செயலாளர் ரூபினா அலி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இத்தாலியில் சிக்குள்ள இந்தியர்களை […]
அமெரிக்காவில் 7 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும் நிலை இருப்பதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது கொரோனா. அதில் வல்லரசு நாடான அமெரிக்காவும் அடக்கம். அமெரிக்காவில் இதுவரை 46 பேர் கொரோனாவின் பிடியில் […]
தனது மனைவி சோபியா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் அலுவல் பணிகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டிலிருந்து மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியா கிரிகோரி (Sophie Grégoire) சமீபத்தில் பிரிட்டனுக்கு சென்று திரும்பினார். இதையடுத்து அவருக்கு காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது நலம் பெற்று வருவதாகவும், […]
கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனாவில் கொரோனாவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன் தாக்கம் தற்போது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 80 ஆயிரம் பேரில் 63 […]
புளோரிடாவில் நடந்த கார் பந்தயத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஓன்று சீறிக்கொண்டு சென்று விபத்திற்குள்ளானது. அமெரிக்காவின் புளோரிடாவில் கார் பந்தயம் நடைபெற்றது. 12 கார்கள் பங்கேற்ற இந்த பந்தயத்தின் போது போட்டியில் வளைவு பாதையில் வேகமாக சுற்றி வந்த கார்களுள் முதலில் சென்று கொண்டிருந்த சிவப்பு நிற கார் ஓன்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு காரில் மோத அடுத்தடுத்து 3 கார் மோதிக்கொண்டது. இதில் இடித்து கொண்ட சிவப்பு நிற கார் மட்டும் திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி […]
ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய உருளைக்கிழங்கு மூட்டைக்குள் பாம்பு ஓன்று உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வூல்வொர்த்ஸ் எனும் பிரபல சூப்பர் மார்க்கெட் நிறுவனம் (Woolworths Supermarkets) பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இயங்கி வரும் கிளைகளுள் ஒன்றான வூல்வொர்த்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து, மரிசா டேவிட்சன் (Marissa Davidson) என்ற இளம்பெண் ஒருவர் 4 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டையை வாங்கினார். […]
உலகின் மிகவும் அதிகமான தாவரங்கள் மற்றும் விலங்குகளை கொண்டுள்ள இடங்களில் ஒன்றான அமேசான் காடு புவி வெப்பமடைதலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 50 ஆண்டுகளில் அமேசான் காடுகள் அழிந்து விடலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகின் அதிக விலங்குகளையும், செடி வகைகளையும் கொண்டுள்ள மற்றுமொரு இடமான கரீபியன் பவளப்பாறைகளும் 15 ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக அழிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பநிலை மேலும் 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் பவளப்பாறைகளில் பெரும்பாலானவை அழிந்து போய் விடும் […]
கொரோனா வைரசால் கனடாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 71 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 655 பேர் […]
கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரீஸ் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரிட்டன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக […]
உலகில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது நபர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது நபர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பெயர் ஆதம் கேஸ்டில்ஜோ (Adam Castillejo). 40 வயதான இவர் கடந்த 30 மாதங்களாக எந்தவித மருந்துகளும் இல்லாமல் நலமுடன் வாழ்ந்து வருவதாக மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) தெரிவித்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த நபருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. […]
ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். சிறையில் இருந்து விடுதலையாகும்போது தலிபான் கைதிகளை அழைத்துச் செல்லத் தயாராக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல பதிலுக்கு சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் ராணுவ வீரர்களை விடுவிக்க தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய அம்சமாகும். ஆப்கானிஸ்தானில் சிறைகளில் உள்ள 5,000 தலிபான்களில் […]
கோஸ்ட்டா ரிகா நாட்டில் 3 டன் கொகைன் போதை பொருட்களை அந்நாட்டு கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்ட்டா ரிகாவில் (Costa Rica) 3 டன் கொகைன் (Cocaine) போதை பொருளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருள் கொலம்பியாவிலிருந்து படகு மூலம் கரீபியன் கடல் பகுதி வழியாக கடத்தி வரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 3 பேரும், நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
பயன்படுத்திய முகமூடிகளை புதியது போன்று மறுவிற்பனை செய்தால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஜப்பான் அரசாங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பயமுறுத்தி வருகிறது. இதுவரையில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வராமல் வீட்டில் இருந்தே பார்க்கும் படி பல நிறுவனங்கள் அறிவுத்துத்தியுள்ளது. ட்விட்டர் அமெரிக்காவில் இருக்கும் தனது சியாட்டில் அலுவலகத்தை தூய்மை படுத்துவதற்காக மூடியிருக்கிறார்கள்.கொரோனா பாதிப்பு காரணமாக ஐடி நிறுவனங்கள், அவங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் படி சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் கொரோனா பாதிப்பு காரணமாக சியாட்டலில் இருக்கக்கூடிய ட்வீட்டர் அலுவலகத்தையும் ட்வீட்டர் மூடி சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் எல்லாரையும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தி […]
உலகை மிரட்டி வரும் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதுவரையில் மொத்தம் 4,025 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,088 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவில் கொடிய கொரோனாவால் 26 பேர் […]
கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், தென் கொரியா கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]
தலிபான்களுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெறத்தொடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கர்னர் சன்னி லெகெட் (Sonny Leggett) செய்தியாளர்களிடம் பேசிய போது, அடுத்த 135 நாட்களுக்குள் வீரர்களின் எண்ணிக்கையை 12 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஐ.எஸ், அல்கொய்தா உள்ளிட்ட அமைப்பினருடன் எதிர்த்துப் போராடுவதற்காக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருடன் தாங்கள் சேர்ந்துள்ளதாகவும் அவர் […]
ஈரான் நாட்டில் மது குடித்தால் கொரோனா தாக்காது என்று நம்பி போய் மதுக்குடித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் இந்த வைரசால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஈரான் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. ஈரானில் இதுவரை 230க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், […]
கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இத்தாலியில், கொரோனா வைரஸால் 463 பேர் இறந்துள்ளனர். இதன் காரணமாக 60 மில்லியன் மக்கள் வெளியே செல்ல தடை விதித்துள்ளது இத்தாலி அரசு. நாடு முழுவதும் இருக்கின்ற அனைவரும் வேலை மற்றும் அவசரநிலைகளைத் தவிர வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தாலிய அரசாங்கம் அனைத்து பொதுக் […]
சீனாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரக்ளுக்கு சிகிச்சை அளிக்க செவிலியர்கள் செய்யும் தியாகம் உலக மக்களை வியக்க செய்கிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ்க்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசின் மருத்துவர்களையும் குறிப்பாக செவிலியர்கள் அதிதீவிரமாக உழைத்து வருகின்றனர். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் சேவை வழங்க வேண்டும் என்பதால் மிகப்பெரிய தியாகத்தை […]
கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்வதற்கு 2 ரோபாக்களை சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு […]
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் […]
கொலம்பியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆமை குஞ்சுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அமேசானாஸ் (Amazonas) விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அட்டைப் பெட்டிக்குள் மறைத்து வைத்து ஆமைகளை கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.உடனே அட்டைப் பெட்டியை அவர்கள் திறந்த பார்த்த போது, உயிருள்ள நிலையிலும், இறந்த நிலையிலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் இருந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சட்ட விரோதமாக […]
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பற்றமான சூழல் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கும் , அந்நாட்டு நாட்டு அரசுக்கும் எதிராக கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பல பிரதிநிதிகள் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தாலிபானின் எச்சரிக்கையை மீறி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நடக்கக்கூடாது, தேர்தலில் மக்கள் யாரும் வாக்களிக்க கூடாது, […]
தனக்கு பாதபூஜை செய்ய வாருங்கள் என்று மின்னஞ்சல் ஒன்றை நித்தி வழங்கியுள்ளார். கைலாசத்தின் அதிபர் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நித்தியானந்தா எதாவது ஒரு நாட்டில் இருந்து கொண்டோ அல்லது யாருக்கும் தெரியாதவாறு ஏதேனும் ஒரு மூலையில் இருந்து கொண்டு அவருக்கு தோன்றியதெல்லாம் பேசி சர்சைக்கு பெயர்போனவர். அண்மையில் புதுக்கதையை அளந்து விட்டுள்ள நித்தி , அமெரிக்காவில் இருப்பதாக சொல்லிய ஒரு தீவை கைலாசநாடு என்று அறிவித்தார். கைலாசாவிற்கு அனைத்து நாடுகளிலும் தூதரகம் அமைக்கும் பணி ஈடுபட்டு வருவதாக தெரிவித்த […]
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர் சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இதனிடையே […]
கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் தங்கள் இராணுவத்தினர் இத்தாலி மற்றும் தென் கொரியாவுக்கு செல்லவேண்டாம் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் […]
இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஜப்பான், தாய்லாந்து, இந்தியா என படிப்படியாக உலகம் முழுவதும் அதிவிரைவில் பரவி வருகிறது. இந்நிலையில் தென்கொரியா, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இத்தாலியில் எதிர்பாராதவிதமாக இதனுடைய எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதால் அந்நாட்டு அரசு அவர்களது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு […]
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 3,827 ஆக உள்ள நிலையில் சீனாவில் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் உலகளவில் மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 3, 827 ஆக உயர்ந்துள்ளது. 97 நாடுகளில் 1,09,976 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான இறப்பு ஏற்பட்டு வந்த […]
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 1, 609 கி.மீ தூர நாய்கள் வண்டி பந்தயம் கோலாகலமாக தொடங்கியது. அமெரிக்க நாட்டின் அலாஸ்கா மாகாணம் ஏங்கரேஜ் (Anchorage) நகரத்தில் இருந்து தங்கள் நாய்களுடன் போட்டியாளர்கள் புறப்பட்டு விட்டார்கள். அநேகமாக 9 நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் இறுதி இடமான நோம் நகரை (Nome) அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவை […]
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இத்தாலியில் 233 பேர் இறந்துள்ளனர் என்றும் 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட உயிரிழப்புகளை கட்டுப்படுத்தி […]
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா குடியேறிருக்கிறது. இதுவரை கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் பிடியில் வல்லரசு நாடான அமெரிக்காவும் சிக்கியுள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு சென்று புளோரிடா திரும்பிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது […]
பாலைவன வெட்டுக்கிளிகளை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியிருக்கிறது பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்து வருகின்றது. இதனால் பாகிஸ்தான் அதிரடியாக தேசிய நெருக்கடி நிலையை (அவசர நிலை) அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பொதுவாக வெட்டுக்கிளிகள் குளிர் காலங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் இந்த முறை, அங்கு நிலவும் குறைந்த வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாக வெட்டுக்கிளிகள் அங்கேயே டேரா போட்டு தங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் என்னசெய்வதென்று […]
பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி கட்டிடம் ஓன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதோடு 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உயரமான கட்டிடம் ஒன்றில் 8 ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே ஒருவர் தீயில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேரை […]
அமெரிக்காவில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறைவே என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனாவின் கோர பிடியில் சிக்கி 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட தற்போது கொரோனாவை கட்டுக்குள் […]
உலகையே மிரட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,000ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட உயிரிழப்புகளை […]
சவுதி நாட்டில் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக 3இளவரசர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டத்து இளவரசர் சல்மானின் சகோதரர் அகமது பின் அப்துல் அஜீஸ், முகமது பின் நயிப் ஆகியோர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) பகுதியில் சூறாவளி தாக்கியதில் கடுமையான சேதமடைந்த இடங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் கடந்த 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அடுத்தடுத்து வேகமாக சூறாவளி தாக்கியது. மிக வேகமாக சுழன்று அடித்த சூறாவளியால் டென்னிசி பகுதி நிலைகுலைந்து சின்னாபின்னாமாக தற்போது காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். அங்கு இருந்த ஏராளமான வீடுகளின் கூரைகள் சூறாவளியின் தாக்கத்தால் பிய்த்து எறியப்பட்டு கிடக்கின்றன. இதனால் மக்கள் […]
பாகிஸ்தான் நாட்டில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் காரணமாக தேசிய அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து புறப்பட்டு சென்ற வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் உணவுப் பொருட்களை தின்று அழித்து விட்டன.மேலும் அந்த வெட்டுக்கிளிகள் வயல்வெளிகளையும் தின்று அழித்ததால் கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் வெட்டுக்கிளிகள் எண்ணிக்கை அதிகமானது. காரணம், குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து காலநிலை மாற்றம் ஏற்பட்டதால் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் பன்மடங்காகப் பெருகிவிட்டது.இதனால் என்ன செய்வதென்று திக்குக்குமுக்காடி போய் விட்டனர் […]