பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 30 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் கராச்சியில் இருந்து பஞ்சாப் நோக்கி பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற அந்த இரயில் ரோஹ்ரி நகர் அருகே காந்த்ரா என்ற இடத்தில் வந்தபோது, அதேசமயம் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை ஒரு பேருந்து கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த ரயில் பேருந்தின் […]
Tag: World
சிரியா அரசு படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்ததையடுத்து, துருக்கி- ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வருகின்றது. சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் […]
அமெரிக்கா – தலிபான்கள் இடையே கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகின்ற போர் முடிவுக்கு வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டுமுதல் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அதாவது, ஆப்கான் அரசு படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க வீரர்களை ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பியது […]
கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 2800-ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000-ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தவிர்த்து அடுத்தப் படியாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,022ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக […]
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் குவித்து வைத்துள்ளது. அடிக்கடி இரு பிரிவினருக்கு இடையே தாக்குதல் […]
பாகிஸ்தானில் இருக்கும் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க சீனாவில் இருந்து 1 லட்சம் வாத்துக்கள் அனுப்பப்படுள்ளது. பாகிஸ்தானின் தெற்கு மாகாணம் சிந்துவில் இருந்து வடகிழக்கு மாகாணம் கைபர் பக்துவா வரை இருக்கும் விவசாயிகள் கோதுமை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு அதிகளவில் விவசாயம் செய்கின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன என்றும் , கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வெட்டுக்கிளிகள் பாதிப்பால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடும் […]
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கிடைத்துள்ள 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்குவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அண்மையில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் காருக்குள் உட்கார்ந்து கொண்டு அவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ் (Quaden) கதறி அழுது கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறுகிறார். தனது மகனை […]
புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகையே ‘கோவிட்-19’ எனப்படும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாக பரவி வருவதன் காரணமாக, யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி ‘உம்ரா’ (Umrah) வுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி […]
சூரிய மண்டலத்திற்கு வெளியே மழை மேகங்களுடன் புதிய கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய மண்டலத்திற்கு வெளியே சுமார் 128 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் K18-19P என்ற புதிய கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். சில வருடங்களாக அதைஆராய்ச்சி செய்ததில், அதில் பூமியைப் போலவே மழைமேகங்கள் காணப்படுவதாக தெரிவித்தனர். இயற்கை சுழற்சி அங்கேயும் நடைபெறுகிறது எனில் அங்கும் உயிர்வாழ சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று கூறிய விஞ்ஞானிகள், அதற்கான ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டு உள்ளனர். இது தற்போது […]
கடந்த சில வாரங்களில் பயணிகளிடமிருந்து 3,000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் (சி.டி.ஏ) தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 15-ஆம் முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 8 வார காலப்பகுதியில் மொத்தம் 3,037 புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி மத்திய அரசு (கனடா) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி, விமானம் தாமதமாவது மற்றும் விமானத்தின் கட்டுப்பாட்டிற்குள் ரத்து செய்யப்பட்டதற்கு விமான நிறுவனங்கள் […]
வடகிழக்கு பிரான்சில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள (Strasbourg) ஒரு கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியானதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் […]
குவைத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் ஒட்டு மொத்தமாக 2,800 பேர் […]
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்க ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 37 நாடுகளில் கொரோனா பரவி உயிர் பலி வாங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றது. ஆனாலும் கட்டுப்படுத்துவதற்கு திணறி வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்ஸாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வருகின்ற தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் […]
தாய்லாந்து நாட்டில் சாலையை மறித்து வயதான யானை தனது மகனுக்கு வாகனத்தில் இருந்த உணவுப் பொருட்களை எப்படி சாப்பிட வேண்டும் என பறித்துச் சாப்பிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் சச்சோயங்சாவோ (Chachoengsao) என்ற இடத்தில் இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தினர். அப்போது ஒரு சிறிய டிரக் வண்டியில் உணவுப் பொருள் இருப்பதை ஒரு யானை பார்த்து விட்டது. உடனே வண்டியில் […]
அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் உள்ள மதுபான ஆலையில் புகுந்து ஒருவன் சரமாரியாக சுட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் அடிக்கடி நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. அங்கு அவ்வப்போது துப்பாக்கியால் உயிர்பலி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அந்நாட்டின் மில்வாக்கி நகரில் இருக்கும் மதுபான ஆலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர்உயிரிழந்தனர். […]
உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் அண்டார்க்டிகாவைத் தவிர்த்து பூமியின் 6 கண்டங்களிலும் பரவியிருக்கிறது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மற்ற நாடுகளில் அதன் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரசின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனாவின் அண்டை நாடான தென்கொரியாவில் […]
சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப் படைகள் நடத்திய கோர தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிரிய நாட்டில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இட்லிப் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளதாகவும் பிரிட்டனை மையமாகக் கொண்டு செயல்படும் சிரியாவின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. […]
உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகிலேயே பணக்கார நாடுகளான 10 நாடுகளின் பெயர்கள் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை கிரிடிட் சூசெஸ் (Credit Suisse’s) எனும் முன்னணி நிதி சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், 1. அமெரிக்கா – 360 ட்ரில்லியன் டாலரில் 30 சதவீதம் செல்வம் வைத்து கொண்டு முதலிடம் வகிக்கிறது. 2. சீனா – 63. 8 ட்ரில்லியன் டாலர் வைத்து கொண்டு இரண்டாவது இடம் வகிக்கிறது. 3. ஜப்பான் – 25 […]
கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், இந்தியர்கள் இந்த 3 நாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இதில் சீனாவுக்கு அடுத்த படியாக தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் […]
கொரோனா வைரஸ் தொற்றினால் தென்கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அதில் தென்கொரியாவும் அடங்கும். கொரோனா வைரஸ் தொற்றினால் தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் குவைத்தில் […]
கொரோனா வைரஸினால் பலியானவர்களின் உண்மையான விபரங்களை ஈரான் மறைப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஈரானில் 95 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, ஈரான் நாட்டில் பாதிக்கப்பட்டோர் என அந்நாட்டு அரசாங்கத்தினால் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, உண்மையாக அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று பிரபல செய்தி தொலைக்காட்சியான பி.பி.சி. தெரிவித்துள்ளது. ஈரானின் துணை சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி (Iraj […]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய ‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே போவதன் காரணமாக, உலக அளவில் சீனா தனிமைப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது 37 நாடுகளில், கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். ஆம், சீனாவின் எல்லைகளை தாண்டி, தென்கொரியா, […]
நைஜீரிய நாட்டில் கடல் பசுவை கயிறு கட்டி தர தரவென இழுத்துச் சென்று துன்புறுத்திய வீடியோ வெளியானதையடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரிய நாட்டின் கடல் பகுதியில் கடல் பசுக்கள் எனப்படும் உயிரினம் அரிதாகக் காணப்படுகிறது. இந்த அரிதான கடல் பசு உயிரினத்தை பிடிக்கவும் கூடாது, வேட்டையாடவும் கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி தடையை மீறினால் சட்டப்படி தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சில இளைஞர்கள் இது போன்ற கொடூரமான செயலை செய்து மாட்டி […]
உலகிலேயே அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்தவர் 112 வயதில் காலமானார். உலகில் தற்போது வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதுடைய நபராக வாழ்ந்து வந்தவர் தான் ஜப்பானைச் சேர்ந்த சிட்டெட்ஸூ வடனாபே (Chitetsu Watanabe). இவர் கடந்த 1907 ஆம் ஆண்டு நீயிகதா நகரில் பிறந்தார். உலகின் அதிக வயதான நபர் என்ற அவரது சாதனைக்காக, அந்த நகரில் இருக்கும் பராமரிப்பு மையத்தில் அவருக்கு கின்னஸ் சார்பாக கடந்த 12-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. […]
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் அல் ஷபாப் அமைப்பின் முக்கியத் தீவிரவாதி கொல்லப்பட்டான். அல் ஷபாப் (Al-Shabaab) என்ற தீவிரவாத இயக்கம் சோமாலியாவைத் தலைமயிடமாக கொண்டு இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு மிகவும் பயங்கரமான தாக்குதலை நடத்தும். ஆம், கொடூரத் தாக்குதல் மற்றும் கோரமான கொலைகளுக்கும் பெயர்போனது தான் இந்த அமைப்பு. இது அல் கொய்தா (Al-Qaeda) அமைப்பின் கிளை அமைப்பாகச் செயல்பட்டு வருகின்றது. சோமாலிய ராணுவத்துக்கும், அல் ஷபாப் அமைப்புக்கும் இடையே […]
மெக்ஸிகோவில் அழிந்து வரும் தேன்சிட்டுக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது. மனிதர்களாகிய நாம் கண்களை இமைப்பதை விடவும் இறக்கையை வேகமாக அடித்துக் கொள்ளும் பறவை தேன்சிட்டுக்கள். இந்த தேன் சிட்டுக்கள் தற்போது மெக்ஸிகோ நகரத்தில் அரிதினும் அரிதாகிப் போய்விட்டது. ஆம் இந்த பறவை அழியப்போகும் நிலையில் இருக்கின்றது. இதையடுத்து அந்தப் பறவைகளை மீட்டெடுப்பதற்கு, உயிரியலாளரான கிளவ்டியா என்ற பெண் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதாவது மகரந்தச் சேர்க்கைக்கு பெரும் பங்குவகிக்கும் தேன்சிட்டுக்களை […]
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2,698 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் சீன பெருஞ்சுவரை தாண்டி 28 நாடுகளில் பரவி இருக்கின்றது. தற்போது கொரோனா வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ஆம், […]
அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் மூன்று அழகிய சிறுத்தைக்குட்டிகள் பிறந்துள்ளன. உலகில் குழந்தை பாக்கியம் இல்லாமல் எத்தனையோ தம்பதியினர் இருக்கின்றனர். ஆனால் அந்த தம்பதிகள் சோதனைகுழாய் மற்றும் வாடகை தாய் மூலமும் குழந்தை கிடைக்க பெறுகின்றனர். அந்த அளவிற்கு இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருந்து வருகின்றது. அந்தவகையில் அமெரிக்காவில் இது போன்று ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஆம் வாடகை தாய் மூலம் 3 சிறுத்தை குட்டிகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் […]
கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்கொரிய நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் ஊழியர்களால் மருந்து தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2698 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கின்றது. அதன் ஒருபகுதியாக சீனாவிலிருந்து அதன் அண்டை நாடான தென்கொரியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அந்தநாட்டிலும் சில […]
இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறி காட்சியளிப்பதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது இந்தோனேசியாவின் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்ட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கு பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகள் அனைத்தும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், மீட்புப்படையினர் பொதுமக்களை பத்திரமாக ரப்பர் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர். மேலும் வெளுத்து வாங்கும் வெள்ளத்தால் ஜாவா, பாலி, நுசா […]
கலிபோர்னியா வளைகுடாவில் சட்டவிரோத மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை திமிங்கலத்தை விலங்கு நல ஆர்வலர்கள் பாத்திரமாக மீட்டனர். மெக்சிகோ அருகே கலிபோர்னியா வளைகுடாவில் விலங்கு நல ஆர்வலர்கள் கடலில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஹம்ப்பேக் (Humpback) வகை திமிங்கலம் ஓன்று சட்ட விரோதமாக விரிக்கப்பட்ட வலையில் சிக்கி தவித்து வருவதை பார்த்த ஆர்வலர்கள் அதனை காப்பாற்றுவதற்கு போராடினர். அவர்கள் நீண்ட முயற்சிக்கு பின் அதை பத்திரமாக விடுவித்தனர். தற்போது அழியும் நிலையில் இருக்கும் ‘டோட்டோபா’ […]
பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வே கைது செய்யப்பட்டு ரைக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீன் என்பவரை மன்ஹாட்டன் நீதிமன்றம் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரும் வரையிலும் அவர் நீதிமன்றம் அருகில் இருக்கும் பிரபலமான போர் சீசன்ஸ் (Four seasons) ஹோட்டலில் வழக்கறிஞர்களுடன் சேர்ந்து விலையுயர்ந்த காபி உள்ளிட்டவற்றை அருந்திக் கொண்டிருந்தார். பின்னர் தீர்ப்பு […]
போலந்தில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை மூதாட்டி ஒருவர் தைரியமாக துடைப்பத்தால் அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. போலந்து நாட்டில் பிங்க்ஸின் என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி வைத்திருக்கிறார். இந்த அங்காடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் முகமூடி அணிந்து கொண்டு வந்த கொள்ளையன் ஒருவன் கடையில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளான். அப்போது அந்த மூதாட்டி அவனை பார்த்ததும் துப்பாக்கியை நீட்டி மிரட்டியுள்ளான். ஆனால் அந்த மூதாட்டி […]
சிரியாவின் இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளும் முனைப்பு காட்டுவதால் போர் பதற்றம் நிலவுகிறது. சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயற்பட்டுவரும் குர்திஷ் போராளிகள் குழுக்கள் மீது ரஷ்யா உதவியுடன் சிரியா இராணுவம் தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. இதனிடையே இட்லிப் மாகாணத்தில் இருக்கும் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகள் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வரும் துருக்கி, அத்துமீறி சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் […]
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,698-ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. சீனாவை தவிர்த்து தென் கொரியாவில் 890-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல குவைத், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று […]
நீண்ட இழுபறிக்கு பின் சீனா முடிவை மாற்றியதால் வூஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இராணுவ விமானம் நாளை அங்கு செல்கிறது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2,663 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வைரஸ் தாக்கம் […]
மெக்சிகோவில் கடற்கரையில் வினோத உயிரினம் ஓன்று இறந்து கரை ஒதுங்கியிருப்பதை பார்த்து அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மெக்சிகோ நாட்டில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரம் புவேர்ட்டோ வல்லார்டா. இந்த நகரத்தின் எழில் மற்றும் இயற்கை அழகை ரசிக்கவும், கடலில் அலைச்சறுக்கு சாகசங்கள் செய்யவும் பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்வார்கள். இந்நிலையில், இப்பகுதியில் இருக்கும் டெஸ்டிலாடெரஸ் என்ற கடற்கரையில் கண்கள் இல்லாத பார்ப்பதற்கே விசித்திரமான வினோத உயிரினம் ஒன்று கரை ஒதுங்கி பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த பலரும் […]
தென்கொரியாவில் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகமூடிகளை வாங்க பல மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 2,592 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 77,150 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரம் கொரோனா வைரஸ் […]
ஈரானிய கப்பல்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு குவைத் தற்காலிக தடை விதித்துள்ளது. உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் சீனாவில் 2,592 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 77, 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல ஈரானில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்து, 43 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தங்கள் நாட்டுக்கும் (குவைத்) கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் […]
அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ஜனநாயகக் கட்சியினரிடையே நவாடா மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, தென்மேற்கில் அமைந்திருக்கும் நவாடா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவரும், வெர்மான்ட் மாகாண […]
இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் மட்டும் 2, 592 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் தான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் கொரோனா தனது வேகத்தை காட்டத் தொடங்கியது. அந்நாட்டின் பீஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வூஹான் மாகாணத்தில் அதிவேகமாக பரவி அடுத்தடுத்து மக்களை கொன்று குவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சீன பெருஞ்சுவரையும் தாண்டி உலக […]
இத்தாலி நாட்டில் இருந்து ஆஸ்திரியா செல்வதாக இருந்த இரயில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரு நாட்டு எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது . கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமில்லாமல் மற்ற பிற நாடுகளுக்கும் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதாவது, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஈரான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலர் உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடான […]
மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மகாதீர் பின் முகமதுக்கு வயது 95. ஆளும் கூட்டணியில் இருந்தும் மகாதீர் முகமதுவின் கட்சி விலகியது. மலேசிய மன்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மகாதீர். மேலும் அன்வர் இப்ராகிம் பிரதமர் பதவிக்கு வராமல் தடுக்க மகாதீர் கூட்டணிக் கட்சியினர் முயற்சி செய்கின்றனர். பிரதமர் பதவியை மகாதீர் ராஜினாமா செய்ததால் மலேசிய அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளில் இராணுவ பலம் அதிகமுள்ள முதல் 5 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளுக்கிடையே போர் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். உலகில் போர்க் களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உலகத்தில் இருக்கும் முன்னணி நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலரை தங்கள் இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்கின்றன. அதில் இந்தியாவும் ஓன்று. அதன்படி ஆயுதப் படைகளுக்கு மிக உயர்வான பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் ஆயுத பலத்தை அதிகரிப்பதற்காக பெருமளவில் நிதி […]
பேராசை கொண்ட அணில் திருடுவதைத் தடுக்க ஒரு தந்திரமான பறவை காதலர் செய்த புத்திசாலித்தனமான திட்டம் இது. நாம் அனைவரும் வீட்டில் கிளி , புறா , கோழி , ஆடு , மாடு என இவற்றில் ஒன்றையோ அல்ல அனைத்தையுமோ வளர்த்திருப்போம். இவற்றுக்கு என்ன தேவையோ புல் , அரிசி என உண்ணுவதற்கு வைத்து கண்ணும் கருத்துமாய் பாதுகாப்போம். நாம் வைக்கும் புல்லாக இருந்தாலும் , அரிசியாக இருந்தாலும் அது மற்ற விலங்கு , பறவைகளுக்கு […]
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து தங்களை பாதுகாத்துக் கொண்ட தம்பதிகள் தங்களை காத்துக் கொண்ட போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. உலகமே பயந்து கொண்டு இருக்கும் வார்த்தை கொரோனா. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க வைத்துள்ளது. இதன் பாதிப்பால் நேற்று முன்தினம் வரை சீனாவில் 2,345 உயிரிழந்துள்ளனர். 76,288 பேர் கொரோனா பாதிப்புக்குட்பட்டு 11,477 பேர் கவலை கிடமாக இருப்பதாக சீன மருத்துவ வட்டாரம் தகவல் […]
மெக்ஸிகோவில் 7 வயது பள்ளி சிறுமியை காதல் ஜோடி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ள ஒரு பள்ளியில் பாத்திமா என்ற 7 வயது சிறுமி படித்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல பள்ளி முடிந்ததும் தனது அம்மாவிற்காக காத்திருந்தார். ஆனால் மற்றொரு பெண் சிறுமி பாத்திமாவை தன் கையால் அழைத்துச் சென்றார். இதையடுத்து சிறுமியின் அம்மா வந்து பார்த்தபோது அவள் அங்கு இல்லை. பின்னர் போலீசாரிடம் சிறுமியின் அம்மா புகாரளித்தார். இந்த […]
கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் ‘கோவிட்-19’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க முடியாமல் சீனா, அமெரிக்கா உட்பட உலகநாடுகள் திணறி வருகின்றன. இதுவரையில் கொரோனா வைரசுக்கு 2,300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 76,000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]
அமெரிக்க நாட்டின் அலாஸ்கா (Alaska) வனத்தில் வாழும் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகளை (Grizzly Bear) வேட்டையாடுவதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் 1000 டாலர் கட்டணம் கட்டி அனுமதி வாங்கியுள்ளார். ஆம், இனி அவர் காட்டுக்குள் புகுந்து விலங்குகளை வேட்டையாடலாம். அமெரிக்காவில் மான்கள், கரடிகள் மற்றும் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்குகிறது. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு தான் இது பொருந்தும். அந்த வகையில் வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட் (Seward) […]
சைபிரியாவில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பறவையின் உடல், 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த ஹார்ன்ட் லார்க் என்ற பறவையினுடையது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் சைபிரியா பிரதேசத்தில் வடகிழக்கே இருக்கும் பெலாய கோரா (Belaya Gora) என்ற பகுதியில் ஹார்ன்ட் லார்க் (horned lark) என்ற பறவையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த பறவை 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது. இந்த தகவலை சுவீடன் ஆய்வாளர்கள் நிகோலஸ் டஸக்ஸ், லவ் டேலன் ஆகியோர் ஆய்வு செய்து […]