இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் 8 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் யோககர்த்தா (Yogyakarta) மாகாணத்தில் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத மாணவர்கள், ஆற்று நீரில் அடித்து […]
Tag: World
பாகிஸ்தான் முழுவதும் சுமார் 3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் அழித்து நாசம் செய்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் கூட்டம் வேகமெடுக்கத் தொடங்கியது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவாசயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அந்நாட்டில் விவசாயத்தை அதிகமாக நம்பியிருக்கும் பஞ்சாப் மாகாணம் மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது . வெட்டுக்கிளிகளின் வேட்டையால் கடந்த ஜனவரி மாதத்தில் மாவுகளின் விலைகள் 15 சதவிகிதமும், சர்க்கரை விலை […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே இடத்தில் மொத்தமாக 220 ஜோடி மணமக்கள் முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்டனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரசால் இதுவரையில் 2,345 பேர் மரணடைந்துள்ளனர். மேலும் 76,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகோலோட் என்ற இடத்தில் 220 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று முன்தினம் […]
உலகையே மிரட்டிவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில் மட்டும் 90 பேர் இறந்துள்ளதாக, சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் மட்டும் கொரோனா வைரஸிற்கு புதிதாக 397பேர் பாதிப்படைந்துள்ளதாக […]
அமெரிக்காவில் கொள்ளை கும்பலில் ஒருவன் பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக்கை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக். இவரது இயற்பெயர் பஷர் பராகா ஜாக்சன். 20 வயதான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் மேற்கு ஹாலிவுட் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப் ஸ்மோக் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கொள்ளை கும்பல் ஓன்று […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக திருமணத்தையே நிறுத்தி வைத்த ஊகான் மருத்துவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் நாளுக்குநாள் காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டு மருத்துவர்கள் இரவு பகல் என்றும் பாராமல் சிகிச்சையளித்து வருகின்றனர். அதேநேரத்தில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. சில மருத்துவர்களும் இதற்கு பலியாகியுள்ளனர். அந்த வகையில் ஊகான் ஜியாங்ஜியா First People மருத்துவமனையில் பணியாற்றி வரும் 29 வயதான மருத்துவர் பெங் யின்ஹுவா […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீனாவில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் அடித்து கொல்லப்படுவதாக புகார் எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2000-த்திற்கும் மேற்பட்டோர் இதுவரையில் இறந்துள்ளனர். மேலும் 75000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே அந்நாட்டு மக்கள் வீடுகளில் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளும் தனிமைபடுத்தப்பட வேண்டும் என மருத்துவர் ஒருவர் […]
நியூசிலாந்து நாட்டில் டிண்டர் (Tinder) செயலி மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்தவர் கிரேஸ் மிலன் (GRACE MILLANE). 27 வயது பெண்ணான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கிரேஸ் மிலன், ஆன்லைன் டேட்டிங் செயலியான (app) டிண்டர் மூலம் ஒரு 28 வயதான ஜெஸ்ஸி கெம்ப்சன் என்ற (Jesse Kempson) நபரிடம் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி […]
சீனாவில் சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து, முகாம்களிலும் பரவி விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் உகான் நகரில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்குதலுக்கு இதுவரையில் 2,236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த வைரஸ் பாதிப்பிற்கு மொத்தம் 75,465 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், சீனாவில் 450-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் மற்றும் காவல்துறையினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சீன […]
பள்ளியில் தன்னை கேலி செய்வதால் தற்கொலை செய்து கொள்வதற்கு தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறி அழும் 9 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் அவரது 9 வயது மகன் குவார்டன் (Quaden) கதறி அழுது கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறுகிறார். தனது மகனை சமாதானப்படுத்த தாயும் அழுது கொண்டே […]
ஏமனில் கடந்த 15-ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படை நடத்திய விமானத் தாக்குதலில் 31 பேர் பலியானதை ஐ.நா உறுதி செய்துள்ளது. ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்-ஜாஃப் நகரில் கடந்த 15ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படைகள் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 19 சிறுவர்கள் உட்பட 31 பொதுமக்கள் பலியானதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஐநாவின் யுனிசெப் அமைப்பு இதனை தற்போது உறுதி செய்துள்ளது. முன்னதாக சவுதிக்கு சொந்தமான டொர்னாடோ […]
அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா […]
இந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நில நடுக்கத்தால் பலர் தங்கள் வீடுகளையும், உயிர்களையும் இழந்துள்ளனர். அதன்படி அதிகாலை 3.24 மணியளவில் வடமேற்கு இந்தோனேசியாவின் சுமார் 229 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சயூம்லாகி பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கமானது 157 கி.மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]
இந்தியா – அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்பதாக அதிபர் ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா கிரிக்கெட் மைதானத்தை […]
உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்கத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 118 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக 889 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த […]
ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரத்தில் இருந்து மெல்போர்ன் நோக்கி 160 பயணிகளுடன் சென்ற இரயிலானது, வாலன் பகுதியில் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் முழுமையாக கவிழ்ந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்பெயின் நாட்டில் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டில் மாட்டுத் தொழுவத்திற்கு கீழே 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக ஒரு கும்பல் போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த சுரங்க தொழிற்சாலையில் போலீசார் அதிரடியாக சோதனையிட்டு 20 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த போதை சிகெரெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த சமபவம் குறித்து […]
ஊகான் மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரசால் பலியான நிலையில், அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது அவரது மனைவி வாகனத்தின் பின்னால் கதறி அழுதபடி ஓடிய காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஊகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் ஊகான் நகரில் […]
பலூசிஸ்தான் விடுதலைப் படை நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அடைக்கலம் கொடுத்து வருவதாக பலூசிஸ்தான் விடுதலைப் படை குற்றம் சாட்டி வருகிறது. மேலும் பாக்., ராணுவ முகாம்களிலேயே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் பலூசிஸ்தான் படையினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம், I.S.I .உளவுத்துறை மற்றும் லஷ்கர் இ தொய்பா (Lashkar-e-Taiba) தீவிரவாத முகாம்கள் மீது பலூசிஸ்தான் […]
அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை படைக்க முயற்சி செய்த நபர்தோல்வியடைந்தார். அமெரிக்க நாட்டில் மின்னசொட்டா பகுதியைச் சேர்ந்தவர் கர்ட் ஆண்டர்சன் ( Kurt Anderson) . இவர் ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை செய்ய முயன்றார். இதற்காக அவர் பிரத்யேகமான கார் ஒன்றையும் தயாரித்தார். இதையடுத்து விஸ்கான்சின் (Wisconsin) மாகாணத்தில் பனியால் உறைந்து போயிருக்கும் பியர் ஏரியில் தன்னுடைய சாதனைப் பயணத்தை ஆண்டர்சன் தொடங்கினார். அப்போது பனிப்பாதையில் மணிக்கு 380 கி. மீட்டர் […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் நாட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இதன் பாதிப்பால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 2000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா , இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வைரஸ் தாக்கத்தில் இருந்து […]
ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் மங்களூர் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது வானில் பறந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்தின் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு விமானங்களும் கீழே வயல்வெளியில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த […]
தாய்லாந்து நாட்டில் இருக்கும் வணிக வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தாய்லாந்தின் வடகிழக்கே பாங்காக் நகரிலிருந்து 250 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் நாகோன் ராட்சசிமா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த 8-ஆம் தேதி ராணுவ வீரர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்று விட்டனர். அதை தொடர்ந்து இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வந்த கேரள மாணவி குணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் நாட்டையே அதிர வைத்த கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2009ஆக உயர்ந்துள்ளது. 75,000த்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க சீன அரசு உஹான் நகரில் 3வது மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனையை கட்டியுள்ளது. 4,500 படுக்கைகளுடன் வசதிகொண்ட இந்த மருத்துவமனையை 50,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் […]
இங்கிலாந்து நாட்டில் கடல் கொந்தளிப்பில் சிக்கிய படகுக்கு டால்பின் மீன்கள் வழிகாட்டியாக வந்த வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக ஆபத்தில் சிக்கினால் டால்பின் வந்து காப்பாற்றும் என்று நாம் கேள்விபட்டிருக்கிறோம். அப்படி உண்மையிலேயே காப்பாற்றுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம் அந்நாட்டில் கடந்த சில தினங்களாகவே டென்னிஸ் புயல் கோரத்தாண்டவம் ஆடி கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கார்ன்வெல் […]
சிரியாவில் அரசுப்படையினரால் நடத்தப்படும் வான்வெளி தாக்குதலின் போது தனது 4 வயதுள்ள குழந்தை அச்சப்படக்கூடாது என்பதற்காக, அவளின் கவனத்தை திசை திருப்புவதற்கு தந்தை செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சிரியா நாட்டில் தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்றே சொல்லலாம். குர்திஷ் போராளிகளின் வசமிருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை சிரிய அரசு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர். மேலும், வடக்கு பகுதியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு […]
பாகிஸ்தானில் கன்டெய்னரை திறக்கும் போது விஷ வாயு தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருக்கும் கேமாரி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சரக்குக் கப்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட காய்கறிகள் நிரம்பிய கன்டெய்னரை ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அதை தொடர்ந்து அந்த கன்டெய்னர் அருகில் இருக்கும் ஒரு சந்தைக்கு எடுத்து கொண்டு செல்லப்பட்டது. சந்தைக்கு வந்ததும், அங்கே காய்கறிகளை தனி தனியாக […]
பருவநிலை மாறுபாடு பிரச்சனைகளை சமாளிக்க அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 71,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளார். இது தொடர்பாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், பருவநிலை மாறுபாடு தான் பூமியின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் புவி நிதி என்ற பெயரில், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 71,000 கோடி) நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இயற்கையை உலகை பாதுகாக்கவும், […]
நைஜர் நாட்டில் அகதிகளுக்கு உணவு வழங்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மிதிபட்டு பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியா மற்றும் சாட் நாடுகளின் எல்லையோரத்தில் இருக்கிறது நைஜர் நாட்டின் டிஃபா நகரம். இந்த நகரத்தில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி நடத்தும் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நைஜீரிய அகதிகள், சொந்த நாட்டிலுள்ள வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் உள்ளிட்ட 2, 50,000-த்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்தநிலையில் அங்கே இருக்கின்ற […]
இதுவரை யாரும் பறக்காத உயரத்தை ‘ஜெட் பேக்’ எனப்படும் நவீன இயந்திரம் மூலம் இளைஞர் ஒருவர் எட்டி சாதனை நிகழ்த்தியுள்ளார். அடிக்கடி சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வந்தாலும் தற்போது புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, காற்றை உள்ளிழுத்து பின் அதிவேகமாக வெளித்தள்ளும் ஜெட் பேக் இயந்திரம் மூலம் ஒவ்வொருவரும் அதிக தூரம் சென்று சாதனை நிகழ்த்த வேண்டும் என பயிற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்ஸ் ராபெஃட் என்பவர் ஜெட் பேக் […]
ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் காணாமல் போகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அஸார் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான 2 வழக்குகளில் தலா 5 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மசூத் அஸார் திடீரென காணாமல் போய் விட்டதாக பாகிஸ்தான் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் ஹம்மத் அஸார் (Hammad Azhar) […]
சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை, 1,868 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 72 ஆயிரத்து, 436 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில், வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் அந்நாட்டின், 34 மாகாணங்களில் 31 மாகாணங்களை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக ஹூபய் மாகாணத்தில் இருக்கும் 18 முக்கிய நகரங்களில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது. சீன நாட்டின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனா மட்டுமில்லாமல் உலக நாடுகளையே கடுமையாக மிரட்டி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பணியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு , பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இதனால் அங்குள்ள மருத்துவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். தற்போதைய நிலவரம் படி கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
வடக்கு புர்கினா பாசோ நாட்டில் உள்ள தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு மட்டுமில்லாமல் 18 பேர் காயமடைந்துள்ளனர். வடக்கு புர்கினா பாசோ நாட்டில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வாராந்திர ஆராதனையின் போது, பன்சி கிராமவாசிகள் மீது ஆயுதங்களோடு வந்த பயங்கரவாதிகள் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பிராந்திய ஆளுநர் கர்னல் சல்போ கபோரே […]
ஸ்வீடன் நாட்டில் புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது அங்குள்ள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்வீடன் நாட்டில் மிதக்கும் மாளிகை (ஹோட்டல்) லூலே நதியில் வட்ட வடிவத்திலான அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு மரத்தினால் தயார் செய்யப்பட்ட நடைபாதை வழியாக நாம் சென்றடைய முடியும். மேலும் ‘ஆர்க்டிக் பாத் (‘The Arctic Bath) எனும் இந்த மிதக்கும் ஹோட்டலின் நடுவில் மிகப்பெரிய ஐஸ் பாத் செய்யுமிடமும் உள்ளது.இந்த ஹோட்டல் கட்டடக் கலைஞர்களான பெர்டில் ஹார்ஸ்ட்ரோம் மற்றும் […]
அமெரிக்காவில் நள்ளிரவில் வீட்டில் பற்றிய தீயிலிருந்து தனது குடும்பத்தை 5 வயது சிறுவன் காப்பாற்றி சம்பவம் அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆம், நள்ளிரவில் ஒரு குடும்பம் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அனைவருமே கண்மூடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாலும், அதில் 5 வயது சிறுவன் நோவா மட்டும் திடீரென விழித்து தீ பற்றி எரிவதை பார்த்துவிட்டான். […]
நைஜீரியாவில் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 30பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 30பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தாக்குதல் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் […]
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி (உபரி) வர்த்தகம் 2019ஆம் ஆண்டில் மேலும் அதிகரிப்பை எட்டிள்ளது. இதன்படி, 2019இல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன் யூரோ அளவுக்கு இறக்குமதியும் அதைவிட அதிகமாக 384.4 பில்லியன் யூரோ அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. 2018ஆம் ஆண்டை விடவும் இது 11 சதவீத அதிகரிப்பாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள […]
அமெரிக்காவிலுள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான கனெக்டிகட் தலைநகர் ஹார்ட்ஃபோர்ட் நகரிலுள்ள நைட் கிளப் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை திடீரென்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதுகுறித்து காவல் துறையினர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அதிகாலை 3 மணியளவில் ஹார்ட்ஃபோர்டின் தெற்கு பகுதியிலுள்ள ஃபிராங்க்ளின் அவென்யூவில் உள்ள இரவு விடுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 […]
ராணுவ வீரர் ஒருவர் பீரங்கிகளை இதய வடிவில் நிறுத்தி, தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘காதல்’ என்பது வெறும் வார்த்தை அல்ல அது மனிதர்களின் மனதில் இருக்கும் ஒரு இணை பிரியா அங்கம். இளமைப் பருவத்தில் தொடங்கும் காதலானது முதுமை வரை நம்மை பின் தொடர்ந்துவருகிறது. இவ்வாறான காதலை வெளிப்படுத்த தயங்கும் மனிதர்களின் மத்தியில், ஒரு சிலர் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தி அசத்துவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஒருவர் தனது காதலியிடம் […]
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்து விட்டனர் என ஈரான் அறிவித்தது. ஆனால் அப்படி யாரும் […]
ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் தலைவன் மசூத் அசாரை காணவில்லை என பாகிஸ்தான் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவ்வளவு எளிதில் நாம் மறக்க முடியாத புல்வாமா தாக்குதல் சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கோர தாக்குதலில், 40 இந்திய சி.ஆர்.பி.எப் (CRPF) வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து […]
ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிபடையினருக்கு ஆதரவாக ஈரான் நாடு செயல்படுகிறது. அதே சமயம் அரசு படையினருக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு பிரிவினருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அல் ஜாவ்ப் மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த சவூதி அரேபியா […]
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா, அபுதாபியில் இருக்கும் லூவர் அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா அபுதாபியில் நடைபெற்ற பெண்களுக்கான தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் லூவர் அருங்கட்சியகத்திற்கு சென்ற இவான்கா, அங்கே இருந்த கலை வடிவங்களை பார்த்து ரசித்தார். மேலும், சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் தொடர்பான வரலாற்றையும் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். அதைதொடர்ந்து இவான்கா, அங்கிருந்து அதிகாரிகளுடன் துபாயில் உள்ள கிராண்ட் மசூதிக்கு சென்று, இஸ்லாமிய முறைப்படி […]
பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை?
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்குகளில் ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ஜெயஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் விரைவில் விடுதலை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. மும்பை, புல்வாமா தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த குற்றத்திற்காக கடந்தாண்டு கைது செய்யப்பட்டு, லாகூரில் உள்ள கோர்ட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து நடைபெற்று இந்த இரண்டு வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கிய லாகூர் உயர்நீதிமன்றம், ஹபீஸ் சயீத், […]
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தேசியவாதம் அதிகம் முன்வைக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜெய்சங்கர், “அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் முன்பை விட தற்போது தேசியவாதத்தை அதிகம் முன்வைத்துவருகின்றன. இதனால் உலக நாடுகளின் பலதரப்பு பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. இதற்கு காரணம் என்ன? கடந்த 20 […]
ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள், குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா, தலிபான் இயக்கத்திற்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இதனிடையே, ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்படை தாக்குதலில் சிக்கி அப்பாவி மக்கள், குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வான்படை தாக்குதலானது ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியமான நங்கர்ஹரில் நிகழ்ந்தது. இதுகுறித்து பிராந்திய ஆளுநரின் செய்தி தொடர்பாளர் அதவ்லா கோக்யனை கூறுகையில், “சுற்றுலாவுக்குச் சென்று திரும்பும்போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. […]
அமெரிக்காவில் திருடன் ஒருவனை சாலையில் சென்ற இளைஞர் டிராலி தள்ளுவண்டியை மோதச் செய்து போலீஸாரிடம் பிடித்து கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் பீச்ட்ரீ (Peachtree )நகரில் உள்ள ஒரு கடையில் முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவர் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் விரட்டி கொண்டு வந்தனர். அப்போது சாலையில் ஒரு இளைஞன் டிராலி வண்டியை பொருள்களுடன் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.போலீசார் பிடிக்க துரத்தி வருவதை பார்த்த அந்த இளைஞன் திடீரென […]
ஹைட்டி நாட்டில் காப்பகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 15 ஆதரவற்ற குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்டி நாட்டின் போர்ட் ஓ பிரின்ஸ் பகுதியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்டு கிறிஸ்தவ தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்திற்கு சொந்தமான காப்பகம் ஓன்றில் பல குழந்தைகள் தங்கியிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உடல் […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நாட்டின் டேஹுடி மாகாணத்தில் இருக்கும் நிலி, மிரமூர், அஸ்டர்லே உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவினால், அப்பகுதிகளில் இருந்த பல வீடுகள் பனியால் மூடப்பட்டன. மேலும், சில பகுதிகளில் மக்களும் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதில் 7 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. இது குறித்து தகவலறிந்தமீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பனிச்சரிவில் சிக்கித்தவித்த […]