பேஸ்புக்-கில் 275 மில்லியன் போலி கணக்குகள் இருக்கலாம் என்று சோஷியல் நெட்வர்க்கிங் சைட் அதிர்ச்சியான தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்களால் , இணையதள விரும்பிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகம் பேஸ்புக். இதில் சுமார் 2.5 பில்லியன் பேர் கணக்கு வைத்திருக்கின்றனர் . கடந்தாண்டு இருந்த பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையோடு இதனை ஒப்பிடுட்டால் இது 8 சதவீதம் அதிகம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள […]
Tag: World
காஷ்மீர் எந்தளவுக்கு பாகிஸ்தானுக்கு முக்கியமோ, அதே அளவு துருக்கிக்கும் முக்கியமே என அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய துருக்கி அதிபர் ரிசப் தயீப் எர்டோகன், “காஷ்மீர் பிரச்னையை மோதலாலோ, ஒடுக்குமுறையாலோ தீர்க்க முடியாது. நீதி, நியாயத்தால் தான் அது சாத்தியமாகும். பாகிஸ்தான் மக்கள் எந்தளவுக்கு பாகிஸ்தானுக்கு முக்கியமோ, அதே அளவு துருக்கிக்கும் முக்கியம். வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக, துருக்கி மேற்கொண்டு வரும் ‘ஆப்ரேஷன் அமைதி வசந்தத்துக்கு’ ஆதரவாக நிலைப்பாடு எடுத்த பாகிஸ்தானை […]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் இதுவரை 1,761 மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்தாண்டு இறுதியில், சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சீனாவில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு வெளியே கனடா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1,716 மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா தற்போது அறிவித்துள்ளது. […]
சிறிய தவறு செய்தாலும் அந்த இருநாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தளபதி ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது. இதற்கு பதிலடியாக, ஈரான் இராணுவம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. தற்போது போர் பதற்றம் தணிந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதன் […]
சிரியாவின் தாக்குதலுக்கு துருக்கி ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடக்கு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்திஷ் போராளிகளுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்ற நிலையில், சிரிய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் இட்லிப் மாகாணத்தில் சிரிய ராணுவம் இரண்டு முறை தாக்குதல் நடத்தியது. இதில் துருக்கி பாதுகாப்பு படையினர் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் துருக்கி இராணுவம் நடத்திய தாக்குதலில் […]
உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிருள்ள ஜீவன்களுக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும் ‘காதல்’ என்கிற மந்திரச் சொல்லைக் கொண்டாடும் நாளாக ‘பிப்ரவரி 14’ திகழ்கிறது. ‘காதல்’ என்பது வெறும் சொல் என்பதைவிட, அது ஒரு வாழ்வியல் என்பதே மெய். அந்த வாழ்வியலைக் கடக்காத மனிதர்களே இல்லை எனக் கூறலாம். இல்லை, இல்லை… காதலே செய்திடாத சிலரும் இருக்கிறார்கள் என்கிறீர்களா? ஆம், காதல் செய்துவிடக்கூடாது என்பதில் அவர்களுக்குக் காதல். இப்படி மனிதர்களின் வாழ்வோடு ஒன்றாகப் பிணையப்பட்டிருக்கும் காதலுக்கு சாதி, மதம் என […]
ரஷ்யாவில் தனது திறமையால் பிரஞ்ச் புல் வகை நாய் ஸ்கேட்டிங் செய்து அசத்தியது. ரஷ்யாவில் 5 வயது நாய் ஓன்று தனது ஸ்கேட்டிங் திறமையால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. பிரஞ்ச் புல் வகையான சார்ந்த அந்த நாயின் பெயர் சோனியா. இந்த நாய் செல்யபின்ஸ்க் (Chelyabinsk) நகரில் தனது உரிமையாளருக்கு ஈடு கொடுத்து சிறப்பாக ஸ்கேட்டிங் செய்து அசத்தி வருகிறது. இதுபற்றி உரிமையாளர் டிமிட்ரி பேசுகையில், சின்ன குட்டியாக இருக்கும் போதிலிருந்தே இயற்கையாகவே சோனியாவுக்கு ஸ்கேட்டிங் செய்வதற்கு ஆர்வம் […]
மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட ஆழ்கடல் எண்ணெய் கசிவு, நிபுணர்கள் கூறியதை விட பலமடங்கு ஆபத்தான ஒன்றாக இப்போதும் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு மெக்சிகோ வளைகுடாவில் ஆழ்கடல் எண்ணெய் கசிவு (Deepwater Horizon) ஏற்பட்டது. அமெரிக்காவின் எண்ணெய் கிணறு வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு அத்தியாயமாக இந்த கசிவு பார்க்கப்படுகின்றது. ஆம், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்திற்காக டிரான்ஸ்ஓசியன் லிமிட்டட் (Transocean Ltd) ஆழ்கடல் எண்ணெய் கிணறு திட்டத்தை மேற்கொண்ட போது, விபத்து ஏற்பட்டு 11 […]
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானில் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதன் காரணமாக அந்நாட்டு ராணுவத்தினர் தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களின் பிடியில் உள்ள கிராமங்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில், அங்குள்ள பெல்ஹம் மாகாணத்தில் இருக்கும் ஜர்-இ-குஷக் பகுதியில் பாதுகாப்பு படையினர் […]
அமெரிக்காவில் 2 டால்பின்கள் சுட்டுக்கொன்ற குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால், அவர்களுக்கு 14 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நேபிள்ஸ் கடற்கரையிலும் அதே வாரத்தில் எமரால்டு கடற்கரையிலும் 2 டால்பின் இறந்து அதன் உடல்கள் கரை ஒதுங்கின. இறந்து போன 2 டால்பின்களின் உடலிலும் துப்பாக்கியால் சுடப்பட்டும், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்காக தடயங்கள் இருந்தன என்று தேசிய பெருங்கடல் மற்றும் சுற்றுச்சூழல் […]
பெண்ணின் காதல் மனது… என்னவனின் அன்பிற்காக ஏங்கும் உன் உயிரில் கலந்த உன் உயிர் ஜீவன்… அன்பே உன் நினைவுகளை கல்லில் சிலையாய் செதுக்கி வைத்தால் காலத்தின் காலடி சுவடு பட்டு சிதைந்து விடலாம் . உன் நினைவுகளை காகிதத்தில் கவிதையாய் எழுதி வைத்தால் வான் மகளின் கண்ணீர் பட்டு அழிந்து விடலாம். உன் உணர்வுகளை கண்ணீரில் உயிரோவியமாக தீட்டி வைத்தாலும் மறைந்து விடலாம். உன்னை என் உயிராய் இதயத்தில் உருவாக்கி வைத்திருக்கிறேன் மரணம் கூட உடலுக்கு […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குளாகி பலியானோர் எண்ணிக்கை 1,350ஐ கடந்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் கொரோனா தொற்று வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் அங்குள்ள பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் வேகமாக இந்த வைரஸ் பரவியது. இந்த வைரஸ் முதலில் பரவ தொடங்கிய உகானில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருந்தன. கொரோனா தொற்று வைரஸ்சின் […]
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-பாஸ்தீன் இடையே நீண்ட காலமாக பிரச்னை நிலவிவருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கு திட்டத்தை கடந்த மாதம் அறிவித்தார். இந்த திட்டத்தின் படி, இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்படும். அதே சமயம் 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த கிழக்கு ஜெருசலேம், பாலஸ்தீன தலைநகராக அறிவிக்கப்படும். பாலஸ்தீனம் சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் […]
ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற தனியார் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பூமிக்கு மிக அருகாமையிலுள்ள கோளை கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளனர். நாம் சிறுவயது முதலே விண்வெளியையும், அதனைப்பற்றியும் பாடப்புத்தகங்களில் படித்ததுண்டு. அந்த வகையில் நமது சூரியமண்டலத்தில் இதுவரை நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்பது கோள்களும், அதனுடைய பெயர்களும் மட்டுமே. அதன்பின் தற்போது நாட்கள் செல்ல செல்ல பூமியைப் போன்று வேறு ஏதேனும் கிரகங்கள் இந்த சூரிய மண்டலத்தில் உள்ளதா, அப்படி இருந்தால் அங்கும் மனிதர்கள் வாழ்கின்றனறா? இல்லை அங்கு மனிதர்கள் […]
அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலையானது இரண்டு டிகிரி உயர்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகின் சுற்றுச்சுழல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் உலகின் ஏதோ ஒரு பகுதி நில வளத்தை இழந்தும், மரங்களை இழந்தும் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது எனவும், பனிப்பாறைகள் உருகி, உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் எனவும் ஐ.நா., முன்பே எச்சரித்துள்ளது. இந்நிலையில் அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் அண்டார்டிகா கண்டமானது, தனது வரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு […]
ஆமெரிக்காவில் மான்களை அழைத்து வந்து வீட்டில் வைத்து உணவு பரிமாறிய பெண் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. ஆம், அந்த நாட்டின் கொலார்டோ மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காட்டில் சுற்றி கொண்டிருந்த மான்களை வீட்டிற்குள் அழைத்து வந்து பிரெட், பழங்கள், கேரட் போன்ற உணவுப்பொருட்களை பரிமாறியுள்ளார். அவர் விருந்து வைத்தது மட்டுமில்லாமல் வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோ வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதன்பின் அந்த பெண்ணின் மீது […]
கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில், புதிதாக 39 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனிடையே, சீனாவில் இருந்து ஜப்பான் […]
அடுத்த 10 ஆண்டுகளில் கண்கவரும் மலர் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க உள்ளதாக கொலம்பிய அரசு அறிவித்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மலர் ஏற்றுமதி செய்யும் நாடு கொலம்பியா. இங்கிருந்து கலர் கலராக கண்களை கவரும் வித விதமான ரோஜாக்கள், சாமந்தி என 1, 500-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 66 கோடி பூக்கள் ஆண்டுதோறும் அமெரிக்கா, மெக்ஸிகோவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காதலர் தினத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள் தான் இருக்கிறது. இந்ததினத்தையொட்டி மட்டும் 1, 000 கோடி ரூபாய்க்கு […]
சிரியாவில் அரசுப் படையின் ஹெலிகாப்டரை போராளிகள் சுட்டு வீழ்த்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். ரஷ்யத் தயாரிப்பான எம்ஐ -17 ரக ஹெலிகாப்டர் ஓன்று நேற்று இட்லிப் நகரின் மேற்பரப்பில் பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த கிளர்ச்சியாளர்கள் ஹெலிகாப்டரை குறி வைத்து தாக்கினர்.இதில் தாக்குதலுக்கு உள்ளான அந்த ஹெலிகாப்டர் தீ பற்றி எறிந்தவாறு கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்கும் வானத்தை சுற்றித் திரிந்தது. பின்னர் சிறு சிறு துண்டுகளாக நொறுங்கிய அந்த ஹெலிகாப்டர் கொளுந்து […]
ஆப்கானில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலைப் படைத் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் அடிக்கடி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் அங்குள்ள தலைநகர் காபூலில் உள்ள மார்ஷல் ஃபாஹிம் ராணுவப் பயிற்சி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், […]
பிரேசிலில் முதலையை மிகவும் நெருக்கமாக போட்டோ பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபரின் செல்போனை அதே முதலை கடித்துக் குதறி விழுங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பிரேசில் நாட்டின் தெற்குப் பகுதியில் ‘புளோரியா நோபிள்ஸ்’ என்ற இடத்தில் உள்ள ஆற்றில் ஏராளமான முதலைகள் வசித்து வருகின்றன. இதில் ஏதாவது ஒரு முதலையை நெருக்கமாக படம் பிடிக்க வேண்டும் என விரும்பிய ஒரு நபர் விசித்திரமாக யோசித்து தனது டேப்லட் வகை செல்போனை கயிறு கட்டி தண்ணீரில் இருந்த […]
துருக்கியில் வாடிக்கையாளருக்கு பீட்சாவில் எச்சில் துப்பி கொடுத்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. துருக்கி நாட்டில் எஸ்கிஷெகிர் (Eskişehir) என்ற இடத்தில் இந்த கேவலமான சம்பவம் நடந்துள்ளது.. ஆம் வாடிக்கையாளர் ஒருவர் பீட்ஸா ஆர்டர் செய்திருந்தார். அதன்படி அதனை விநியோகிக்கும் நபர் வாடிக்கையாளர் வீட்டின் வாசல் பக்கத்தில் நின்று கொடுக்கப்பட வேண்டிய பீட்சாவில், உமிழ்நீரை (எச்சில்) துப்பிய பின் வழங்கியுள்ளார். ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த அருவெறுப்பான நிகழ்வு அருகில் இருந்த […]
உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு ‘கோவிட்-19’ என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டியுள்ளது. சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ என்னும் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த நோய் பரவி வருவதால் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த கொடூர நோய்க்கு ‘கோவிட்-19’ என […]
இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் மனைவி மெலனியா ட்ரம்ப்புடன் அகமதாபாத்துக்கு செல்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பயணித்தின் போது, தலைநகர் டெல்லிக்கும், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கும் செல்ல உள்ளனர். […]
ஒட்டுமொத்த சீனாவை ஆட்டிப்படைத்து வரும் “கொரோனா” வைரஸ்-ஐ கண்டு உலக மக்கள் அஞ்சி வருகிறாகள். முன்னதாக, காய்ச்சல், தொண்டை வரட்சி என அறிகுறிகள் தென்படும் என கூறினார்கள். ஆனால், இப்போது அந்த அறிகுறியும் கிடையாது. அந்த உடல் உபாதையையும் காட்டாமல் ஆளை கொன்று விடும் அளவுக்கு அந்த வைரஸ் வளர்ந்துள்ளது. இதனால்,சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் இறந்து விட்டார்கள் எனவும் ஆனால், சீன அரசு 200 பேர் 300 பேர் என இறப்பு எண்ணிக்கையை குறைத்து கூறுகிறது என்றும் […]
விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தில், நான்கு இந்திய பைலட்கள் பயிற்சி பெற ரஷ்யா சென்றுள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் ரஷ்யா விண்வெளி ஆய்வு மையமும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய விமானப் படையைச் சேர்ந்த நான்கு பைலட்கள் ரஷ்யாவிலுள்ள காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையத்திற்குச் (GCTC) சென்றுள்ளனர். இந்த நால்வரும் 12 மாதங்கள் நீடிக்கும் விண்வெளி பயிற்சியில் பங்கேற்கிறார்கள். இந்தப் பயிற்சியில், சோயுஸ் (Soyuz) ஆளில்லா விண்கலத்தின் அமைப்புகளைப் […]
சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங், பெய்ஜிங்யில் உள்ள டிடன் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் அவர், நோயாளிகளைப் பார்வையிட்டு மருத்துவர்களை முழுமையாக நம்புங்கள் என ஆறுதல் தெரிவித்தார். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இரவுபகலாக சேவைசெய்யும் மருத்துவர்கள், மருத்துவ […]
மும்பையில் ரூ. 24 லட்சம் மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுக் கள் பிடிபட்டுள்ளன. துபாயிலிருந்து வந்தவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இந்தரூபாய் நோட்டுக்கள், பாகிஸ்தானில் அச்சிடப்பட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம் கல்வாபகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் ஷேக் (36). இவர், துபாய்க்கு சென்றுவிட்டு விமானத்தில் மும்பைக்கு வந்துள்ளார். சோதனைகள் எல் லாம் முடிந்து, வெளியே வந்த அவர் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்ற போலீசார், சந்தேகத்தின் பேரில் ஜாவித்ஷேக்கை அழைத்து விசாரித்ததாகவும், அப்போது அவரிடம்ரூ. 24 லட்சம் […]
‘அமெரிக்கன் ஃபேக்டரி’ என்ற பெயரில் தனது முதல் தயாரிப்பில், வெளியான ஆவணப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதால், அதன் இயக்குநர்களுக்குப் பாராட்டு தெரிவித்து ‘திறமையானவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ படத்தின் இயக்குநர்களை ஆஸ்கர் விருது வென்றதற்காகப் பாராட்டியுள்ளார். ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ படத்தின் இயக்குநர்கள் ஸ்டீவன் பொக்னர், ஜூலியா ரிச்சர்ட் ஆகியோரை ட்விட்டரில் பாராட்டி […]
ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் கேன்சரை உண்டாக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், அந்நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடி அபராதம் விதித்துள்ளது அமெரிக்காவின் நியூஜெர்ஸி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவன பவுடரைப் பயன்படுத்தியதால், குழந்தைகளுக்கு கேன்சர் ஏற்பட்டதாக அமெரிக்காவில் 4 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்குகள் நியூஜெர்ஸியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் மனுதாரர்கள் வலியுறுத்தி இருந்தனர். அந்நிறுவனம் தனது தயாரிப்பில் ஆஸ்பெஸ்டாசின் இருப்பதாக முறையாக பொதுமக்களிடம் அறிவிக்கவில்லை […]
தனக்கெதிராக புகாரளித்த ராணுவ அதிகாரியை நீக்கும் முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை அறிவித்தார். அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர் லெப்டினன்ட் கர்னல் அலெக்ஸாண்டர் விண்ட்மேன். இவர் உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்தில் ட்ரம்புக்கு எதிராக பதிலளித்தவர். இந்த நிலையில் அவரை வெள்ளை மாளிகை பணிநீக்கம் செய்துள்ளது. இதுபற்றி பேசிய விண்ட்மேன் வழக்குரைஞர், “இது ட்ரம்பின் பழிவாங்கும் நடவடிக்கை” என விமர்சித்துள்ளார். சர்ச்சைகளின் அதிபரான […]
ஒருங்கிணந்த அமெரிக்க, ஆப்கானிஸ்தான் படைகள் மீது ஆப்கான் சீருடையில் இருந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நங்கர்ஹார் மாகாணத்திலுள்ள அமெரிக்க, ஆப்கானிஸ்தானின் ஒருங்கிணந்த படைகளின் மீது ஆப்கானிஸ்தான் சீருடையில் இருந்த நபர் ஒருவர் தூப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு அமெரிக்க துருப்புகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு ஆப்கானிஸ்தானிலுள்ள ஷெர்சாத் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. இது குறித்து அமெரிக்க படைகளின் செய்தி தொடர்பாளர் கர்னல் சோனி லெகெட் கூறுகையில், ஆப்கான் சீருடையில் இருந்த […]
கோரானா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் மாயமான சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசியமாக தஞ்சம் அடைந்திருப்பதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அவர்மீது பொதுமக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர் . சீனாவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது. உலகளவில் தலைசிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள் வைரஸூக்கு மருந்து உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக சீனாவில் ஏராளமான மக்களின் உயிரை கொரோனா வைரஸ் பறித்துள்ளது. இச்சமயத்தில் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதிபர் ஜி ஜின்பிங், […]
சீனாவில் கொரோனா வைரசை கண்டறிய தானாக வந்து பரிசோதிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 10,000 பரிசளிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 906 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு சீன அரசு தினமும் முடிந்த அளவுக்கு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து கொண்டு தான் வருகிறது. ஆனாலும் நாளுக்குநாள் பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். […]
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன (British Airways) விமானம் ஓன்று அதிவேகமாக வீசிய காற்றுக்கு நடுவே அட்லாண்டிக் பெருங்கடலை 5 மணி நேரத்துக்குள் கடந்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு நார்வேகியன் நிறுவன விமானம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரம் 13 நிமிடங்களில் சென்றது. இதுவே யாரும் முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது. இந்தநிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங்க் 747 ரக விமானம், அதிவேகமாக வீசிய காற்றுக்கு நடுவில் மணிக்கு 800 மைல்கள் வேகத்தில் […]
கொரானோ வைரஸ் பாதித்த வுகாண் மாகாணத்தில் இருந்து 5 மில்லியன் மக்கள் மயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரானோ வைரஸினால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள சீனாவின் வுகான் மாகாணத்தில் வாழ்ந்து வந்த சுமார் 5 மில்லியன் சீனர்கள் தீடிரென மாயமாகி விட்டதாக வுகாண் மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சர்வதேச ஊடகமான ஏபி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கொரானோ வைரஸ் வுகாண் மாகாணத்தில் மிக வேகமாக பரவி , பல நூறு […]
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசளிக்க உள்ளதாக நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை சீனாவில் 906 பேர் மற்றும் பிற நாடுகளில் 2 பேர் என மொத்தம் 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரானா வைரசுக்கு எப்படியாவது மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று கொண்டு தான் வருகிறது. ஆனால் […]
தென் ஆப்பிரிக்காவில் கரடுமுடனான மலைப் பாதையில் நடந்த சைக்கிள் பந்தயத்தில் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தென் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் கரடு முரடான மலைப்பாதையில் 4 நாட்களாக நடந்த சைக்கிள் பந்தயத்தில் நிறைய பேர் கலந்து கொண்டனர். 4 நிலையாக நடந்த இந்த போட்டியில் 3 நிலைகளில் உர்ஸ் ஹூபர்(Urs Huber) மற்றும் சைமன் ஸ்டீப்ஜான் (Simon Stiebjahn) இணை முன்னிலை வகித்ததால் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதே போல் பெண்கள் பிரிவில் 4 […]
சீனாவில் கொரோனா வைரசின் தாக்குதலை உலகுக்கு அம்பலப்படுத்தி வந்த இளம் பத்திரிகையாளர் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவின் ஊகான் நகரில் இருந்து தான் முதலில் பரவத் தொடங்கியது. இதனால் சீனாவில் இருந்து ஊகான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அந்த நகருக்கு சென்ற சென் கியுசி […]
எகிப்து ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்ற 10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி (Mohamed Morsi) ஜூலையில் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இதையடுத்து அந்த நாட்டில் இருக்கும் சினாய் நகரை அடிப்படையாக கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்படும் பயங்கரவாத அமைப்பு தொடர்ந்து அத்துமீறி கடும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் […]
மடகாஸ்கர் நாட்டை சூறாவளி தாக்கியபோது உதவியாக இருந்த இந்தியா, மிகச்சிறந்த நண்பன் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறினார். லக்னோவில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சி 2020இல் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் மடகாஸ்கர் பாதுகாப்புத் துறை அமைச்சர் லெப்டினென்ட் ஜெனரல் ரிச்சர்ட் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து ஈடிவி பாரத் உடனான ஒரு பிரத்யேக உரையாடலில், “இந்தியாவை ஒரு சிறந்த நண்பர்” என்று அவர் குறிப்பிட்டார். கடந்த சில வாரங்களில் இந்திய கடற்படை, பாதிக்கப்பட்ட […]
ஆஸ்திரேலிய அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் வீராங்கனையான எல்லீஸ் பெர்ரியின் வேண்டுகோளை ஏற்று, சச்சின் இன்று ஒரு ஓவர் எதிர்கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் தொடரில் பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுலகர் செயல்பட்டு வருகிறார். இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பலப்பரிட்சை செய்து வருகிறது. இதனை சாக்காக […]
புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியின் மூலம் இதுவரை 20 லட்சம் டாலருக்கும் மேலாக நிவாரண நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணம் வழங்குவதற்கு, புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாண்டிங் தலைமையில் ஒரு அணியும் கில்கிறிஸ்ட் தலைமையில் ஒரு அணியும் கட்டமைக்கப்பட்டன. இதில் பாண்டிங் அணிக்கு சச்சின் பயிற்சியாளராகவும், கில்கிறிஸ்ட் அணிக்கு டிம் பெய்ன் பயிற்சியாளராகவும் செயல்படத் தொடங்கினர். Ricky Ponting wanted a piece of […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சார்ஸ் தொற்று வைரஸ் பலி எண்ணிக்கையை தாண்டியது என்று சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.வைரஸ் பாதிப்பால் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்துகளை […]
கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய வீராங்கனையின் அழைப்பை ஏற்று அவரது நாளைய போட்டியில் பேட்டிங் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். உலகக் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்பட்டு வருபவர், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் நாளை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் புஷ் ஃபையர் போட்டியில் பங்கேற்கும் ரிக்கி பாண்டிங் அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பலப்பரிட்சை […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இதுவரை சீனாவில் 722 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே, வூகான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை 722 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மேலும் 34,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹூபே மாகாணத்தில் மட்டும் மூவாயிரத்து 399 […]
ஆப்கானிஸ்தானில் அதிபருக்கான தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், முடிவுகளை அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இதனை கண்டிக்கும் விதமாக மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், நாட்டின் பாதுகாப்பும் அரசியல் ஸ்திரதன்மையும் கேள்விக்குறியாகி உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், “முடிவுகளை […]
தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடருக்கு பின், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து நேற்று நடக்கவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்தது. இதனால் நீண்ட நேரக் […]
ஸ்பெயினில் நடத்தப்படும் கோப்பா டெல் ரே கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகளில் பார்சிலோனோ, ரியல் மாட்ரிட் ஆகிய அணிகள் தோல்வியைத் தழுவின. ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கோப்பா டெல் ரே தொடர் ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படுகிறது.இதனிடையே இந்தாண்டுக்கான தொடரின் காலிறுதிப் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனோ அணி அத்லெட்டிக் பில்பாவ் அணியுடன் மோதியது.இப்போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சமபலத்துடன் மோதிக்கொண்டதால் ஆட்டம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இதுவரை சீனாவில் 722 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபே, வூகான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை 722 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மேலும் 34,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹூபே மாகாணத்தில் மட்டும் 3,399 பேருக்கு […]