சீனாவில் வேகமாக பரவிவரும் கொரானா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 560 உயர்ந்துள்ளது. சினாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே அங்கு 2 புதிய தற்காலிக மருத்துவமனைகள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை […]
Tag: #worldnews
கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் வேகமாக பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகநாடுகளில் வேகமாக பரவிவருவதால் அவசரநிலையை உலக சுகாதாரநிலையம் அறிவித்துள்ளது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணடறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்குதல் வலுவடைந்து வருவதால் உலக நாடுகள் […]
சீனாவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டுடனான எல்லையை ரஷ்யா அடைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸானது அந்நாட்டில் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையிலிருந்து முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த கரோனா வைரஸால் இதுவரை 170 பேர் உயரிழந்துள்ளனர். மேலும், ஏழுயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க சீனாவுடனான எல்லையை மூடுவதாக […]
சீனாவை தொடர்ந்து மேலும் 15 நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சில நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரையில் பலி எண்ணிக்கை […]
கொரனோ வைரஸ் தாக்குதலை கவனிக்க தவறி விட்டோம் என்று WORLD HEALTH ORGANISATION முதல்முறையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியுள்ளது. தற்போது உலக நாடுகளே பயந்து நடுங்கக்கூடிய ஒரு நோய் என்றால் அது கொரோனா வைரஸ் தாக்குதல் தான். இது சீனாவின் ஹூகான் நகரில் ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை தாக்கக் கூடிய அபாயத்தை விடுத்துள்ளது. எளிதாக காற்றில் பரவும் நோயை கண்டு உலகநாடுகள் நடுங்கி கொண்டிருக்கின்றன. தற்போது பரவலாக இது குறித்து பல நாட்டு […]
கியூபா மற்றும் ஜமாக இடையே அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர நிலநடுக்கங்களால்சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.7 to 6.12 அளவில் நிலநடுக்கங்கள் கியூபா மற்றும் அதற்கு அருகில் உள்ள தீவுப்பகுதிகளில் பதிவாகி இருப்பதாக அமெரிக்க இயற்கை பேரிடர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஆழிப் பேரலைகள் தாக்கலாம் என அஞ்சப்படும் சூழ்நிலையில், நிலநடுக்கம் காரணமாக ஜமாய்க்கா மற்றும் மியான்மரில் மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியேறினர். தொலைதூரத்தில் உள்ள புளோரிடாவில் சுனாமி எச்சரிக்கையால் அச்சம் […]
ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் அமெரிக்கப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஈரான் பாதுகாப்புப் படை தளபதி காசிம் சுலைமானியின் கொலைக்கு காரணமான மைக்கேல் தே ஆன்ரே உள்ளிட்ட பல மூத்த சிஐஏ அலுவலர்கள் உயிரிழந்ததாக தலிபான் பயங்கரவாத அமைப்பின் ஊடகம் செய்தி […]
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணின் உடல் பல்கலைக்கழகத்திலுள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆன்ரோஸ் ஜெரி. இசைவாத்தியங்களில் கைதேர்ந்தவரான இவர், அமெரிக்காவில் உள்ள நாட்ர டேம் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை ( ஜனவரி 21ஆம் தேதி) முதல் மாணவி ஆன்ரோஸ் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஏரியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆன்ரோஸ் […]
கனடாவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட தமிழக மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தின் குன்னுர் பகுதியை சேர்ந்த ராச்சல் ஆல்பர்ட் என்பவர் கனடாவில் யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பை பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு பல்கலைக்கழகம் அருகே நடந்த வழிப்பறியில் ராச்சலை வழி மறித்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியதில் மாணவி படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் […]
சீனாவில் கொரோனோ வைரஸின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால் சீனாவிலுள்ள இந்திய தூதரகத்தில் ஜனவரி 26ஆம் தேதி நடக்கவிருந்த குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 71ஆவது குடியரசு தினம் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் இந்தியாவில் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களிலும் குடியரசு தினம் கொண்டாடப்படும். அதன்படி, வரும் ஜனவரி 26ஆம் தேதி அன்று சீன தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட இருந்தது. ஆனால், […]
கலிபோர்னியாவில் உள்ள விமான நிலையத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ளது கொரோனா மாநகராட்சி விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் 4 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் உயரே எழும்பும் போது ஓடுதளத்தின் கடைசி பகுதியில் உள்ள புதருக்குள் திடீரென விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த […]
அமெரிக்காவில் சிறைக் கைதி ஒருவன் காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் உள்ள காவல் நிலைய சிறையில் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த கைதி கேப்ரின் என்பவனை அதிகாரி ஒருவர் நெஞ்சில் கைவைத்து சிறைக்குள் போகுமாறு கூறியதால், ஆத்திரமடைந்த கேப்ரின் அதிகாரியை மூக்கில் பஞ்ச் விட்டு அதன்பின் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதை பார்த்து ஓடி வந்த அதிகாரிகள் கேப்ரினை மடக்கிப் பிடித்து […]
கொரோனா வைரஸ் காரணமான சீனாவின் ஹூகான் மாநகரின் ஓனான் கடலுணவு சந்தைக்கு அந்நாட்டு அரசு சீல் வைத்துள்ளது. சீன நாட்டின் ஹூகான் மாநகரின் பிரபல கடலுணவு சந்தையில் முதலைகள், ஆமைகள், பாம்புகள், எலி, எறும்பு திண்ணி, ஒட்டகம் சாலமாண்டர் எனப்படும் பிரம்மாண்டமான பள்ளி வகை என நீளும் பட்டியலில் மொத்தம் 121 காட்டு விலங்குகள் இடம் பெற்று உள்ளன. காட்டு விலங்குகளை உணவுக்காக கடத்துவது சீனாவில் தடை செய்யப்பட்டாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி இந்த விலங்குகள் […]
மனிதர்களின் உடல் வெப்ப நிலை குறித்த பல்வேறு புதிய தகவல்கள் மருத்துவ உலகில் இருந்த பல பழைய நம்பிக்கைகளை உடைத்து எரிந்துள்ளது. உலகெங்கும் உயிரியல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மனிதர்களின் இயல்பான உடல் வெப்ப நிலை 94.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்று கூறுகின்றனர். காய்ச்சல் உள்ளவர்களின் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அடிப்படை அளவிலிருந்து அளக்கப்படுகிறது. இந்த முறையானது கடந்த 150 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் மனிதர்களின் உடல் வெப்பநிலையானது முன்பு […]
சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் அமெரிக்காவிலும் பரவியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்க சீன அதிபர் உத்தரவிட்டுள்ள நிலையில், சீனாவிலிருந்து வாஷிங்டனுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் வாஷிங்டன்னின் தனியார் மருத்துவமனையில் தனியாக தங்க […]
உலகில் இரண்டாவது மிகப்பெரிய வைரத்தை புகழ்பெற்ற லூயிஸ் வியூஷன் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் வைர சுரங்கங்களில் உள்ள ஒன்றான கோட்ஸ் சுரங்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1758 கேரட் வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. டென்னிஸ் பந்து வடிவிலான இந்த வைரத்தின் விலை இந்திய மதிப்பில் 350 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடம்பர கை பைகளுக்கு பெயர்போன நிறுவனமான லூயிஸ் வியூஷன் இந்த வைரத்தை வாங்க உள்ளதாக […]
ஓமன் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்ற சுல்தான் காபூஸ் நேற்று திடீரென காலமானார். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் சையத் மரணமடைந்தார். அவருக்கு வயது 79. 1970களில் அவரது தந்தை சையத் பல்கோவை ஆட்சியிலிருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்தார். எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்றவர் காபூஸ். சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று பின் நாடு […]
எதிர்பார்த்ததைவிட செவ்வாய் கிரகம் தன்னிடம் இருக்கும் தண்ணீரை வேகமாக இழந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகம் தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் பிரான்சின் சி என் ஆர் எஸ் எஸ் என்னும் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியிலுள்ள வளிமண்டலத்தில் நீர் மூலக்கூறுகள் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. நீருக்கான வேதியல் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் ஆக்சிஜன் அணுக்களாக சூரிய ஒளி பிரித்து விடுவதாகவும், செவ்வாய் கிரகத்தின் பலவீனமான ஈர்ப்பு விசையால் […]
போர்: டிரம்புக்கு ஸ்பீடு பிரேக்!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற அவையான ஹவுஸ் நேற்று (ஜனவரி 9) நிறைவேற்றியிருக்கிறது. இதன்படி அவையின் ஒப்புதல் கிடைக்காவிட்டால், 30 நாட்களுக்குள் ஈரானுடனான மோதலில் இருந்து யு.எஸ். படைகளை டிரம்ப் திரும்பப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் டிரம்ப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. ஈரான் ராணுவ தலைவர் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்க ராணுவம் கொலை செய்ததற்கு பதிலடியாக, ஈராக்கில் இருக்கும் இரு அமெரிக்க ராணுவ தளங்களின் […]
ஈரானின் புதிதாக பொறுப்பேற்ற தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் காணி ,சுலைமானின் கொலைக்கு பழிவாங்க போவதாக சபதம் ஏற்றார். அமெரிக்க தாக்குதலில் ஈரானின் தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். பின்னர் அவரது இடத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் காணி, கொல்லப்பட்ட சுலைமானின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார். அப்பொழுது காணி அவரது பிரேதப் பெட்டியின் மேல் விழுந்து கதறி அழுதார். மேலும் சுலைமானின் கொலைக்கு பழிவாங்க போவதாக சபதம் ஏற்றார். மேலும் சுலைமானியின் பாதையில் […]
வாஷிங்டன்: ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார். ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் செல்வாக்குமிகுந்த ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவத் தளபதி அபு மஹதி அல் முகந்திஸி உள்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பழித் தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்தது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம், […]
ஈரான் தளபதியை கொன்று பெருமை பேசும் அமெரிக்கா பாகிஸ்தானிடம் மவுனம் காப்பது ஏன் என்று பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஈரான் இராணுவத்தளபதி சோலிமானி கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளித்த அமெரிக்கா டெல்லி முதல் லண்டன் வரையிலான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு அவர் மூளையாக செயல்பட்டார் என்றும் அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பயங்கரவாதி சோலிமானியை ஆளில்லா விமானம் மூலம் கொன்ற அமெரிக்கா அதே காரணத்திற்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதிகளை […]
புத்தாண்டு தினத்தையொட்டி வாட்ஸப்பில் 10,000 தகவல்கள் பரிமாற்றப்பட்டு புதிய சாதனையை அந்நிறுவனம் எட்டியுள்ளது. முன்பெல்லாம் புதிய ஆண்டு பிறக்கப் போகிறது என்றால் கடிதங்கள் மூலம் வாழ்த்து செய்திகள் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படும். முகநூல் அறிமுகம் ஆனதையடுத்து இண்டர்நெட்டை பயன்படுத்தி அதில் வாழ்த்து செய்திகளை தெரிவித்து வந்தனர் மக்கள். தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய வாட்ஸ்அப் மூலமே அதிகமான தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. புத்தாண்டு தினத்தன்றும் அதேபோல் அதிகமான வாழ்த்துக்கள் வாட்ஸ்அப் மூலம் பரிமாறப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி […]
சீன அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு யாங்ட்சீ ஆற்றில் மீன்பிடிக்க தடை விதித்து உள்ளது. சீன நாட்டின் பெரிய ஆறாக கருதப்படும் யாங்ட்சீ ஆற்றில் 1950களில் 4 லட்சத்து 20 ஆயிரம் டன் மீன்கள் அந்நாட்டு மீனவர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஒரு லட்சம் டன் மீன்கள் கூட ஓராண்டில் பிடிக்கப்படுவதில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மிக அதிகமான மீன் பிடித்ததால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு யாங்ட்சீ ஆற்றின் தன்மை காலப்போக்கில் மாறியதால் மீன்களின் வரத்து […]
ஆஸ்திரேலியா புதர் தீக்கு எதிரொலியாக தமது இந்திய பயணத்தை ரத்து செய்ய இருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் புதர் பற்றி எரிந்து வரும் சூழலில் நாட்டை விட்டு செல்வது பொருத்தமானதாக இருக்காது என்ற விமர்சனம் எழுந்த நிலையில், இம்மாதம் 13-ம் தேதி இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்துள்ளார் ஆஸ்திரேலியா பிரதமர். ஏற்கனவே இம்மாதிரியான ஒரு பிரச்சினை ஆஸ்திரேலியாவில் நிலவிய பொழுது அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு […]
ரஷ்யாவில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது நீச்சல் வீரர் ஒருவர் சுறா மீனை கட்டிப்பிடித்தபடி நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நெப்டியூன் வணிக வளாகத்தில் பிரமாண்டமான மீன் கண்காட்சி அமைக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பம்சங்கள் மீன்கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்பொழுது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கண்ணாடி தொட்டிக்குள் நீச்சல் வீரர் ஒருவர் உள்ளே இறங்கி சுறாமீன் ஒன்றை கட்டி பிடித்து நடனமாடி பார்வையாளர்களை உற்சாகமூட்டினார். பின் […]
அமெரிக்காவில் கடல் சீற்றத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாண்டா குரூஸ் கடலின் உள்பகுதி பாறையின் மீது ஒருவர் ஏறி நின்று கடல் அலையை படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்து வந்த பேரலை ஒன்று அந்த வாலிபரை தூக்கி வீசி எறிந்தது. பின் மீண்டும் வந்த மற்றொரு பெரிய அலை அவரை பின்னால் தள்ள அலையின் தாக்கத்தில் வாலிபரும் இழுத்து செல்லப்பட்டு […]
மெக்ஸிக்கோவில் கால்பந்து விளையாடும் பொழுது ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ, ஸகாடகாஸ் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே கால்பந்து விளையாட்டு தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக சிறை நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கைதிகள் குழுவாக இணைந்து கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சில கைதிகள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பின் மோதலை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் ஆயுதங்களுடன் சிறைக்குள் நுழைந்தனர். அதற்குள் கைதிகளுக்கு இடையே […]
காலம்தான் மிகச் சிறந்த பரிசு என்று கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு விடுத்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். பின்லாந்து நாடு லாவாந்து பகுதியில் சாண்டா கிளாஸ் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ள கடிதங்களில் குடும்பத்தினருடன் பெற்றோருடன் சக குழந்தைகளுடன் நண்பர்களுடன் உங்கள் நேரத்தை செலவழியுங்கள் என்றும் அதுதான் நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் மிகச்சிறந்த பரிசு என்றும் கூறப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒருவர் பேசும் பொழுது பணிவான அன்பு நிறைந்த வார்த்தைகளை பேசுங்கள் என்றும் அடுத்தவரின் சிந்தனைகளை படிப்பதும் அடுத்தவரின் உணர்வுகளை உணர்வதும் மிகச் […]
ஹாங்காங்கில் சீனாவுக்கு ஆதரவாகவும், வன்முறைகளை கண்டித்தும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹாங்காங்கில் கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும் கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் பல மாதங்களாக நடைபெறும் போராட்டம் பெரும்பாலான நேரங்களில் வன்முறைகளில் முடிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இந்த வன்முறை போராட்டங்களை கண்டித்து ஹாங்காங்கில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. தாமார் பூங்காவில் கூடிய மக்கள் காவல்துறைக்கு ஆதரவாக […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியை பறிப்பதற்கு கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய சபையின் சட்டக்குழு அங்கீகரித்துள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளான ட்ரம்ப் அவர்களின் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் ஹவுஸ் புரோபர்டி குழுவினர் தீர்மானத்திற்கு ஆதரவாக 23 பேரும் எதிராக 17 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து 435 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு செல்கிறது. ஜனநாயக கட்சியில் 233 […]
உலகத்தில் இருக்கக்கூடிய பலசாலி ஆண்களால் கூட செய்ய முடியாத டாஸ்க் ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்பொழுது tik.tok, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சேர் சேலஞ்ச் என்ற ஹேஸ்டேக் வைரலாக பரவி வருகிறது. இந்த #ஹாஷ்டாக் சேலஞ்சை ஆண்கள் மேற்கொள்ள வேண்டும். அதாவது ஆண்கள் குனிந்து நாற்காலியை தங்களது மார்பு அல்லது வயிற்றுப் பகுதியுடன் ஒட்டி வைத்து பின் நிமிர வேண்டும். இதனை உலகில் இருக்கக்கூடிய பல்வேறு ஆண்களும் முயற்சி செய்தும் […]
அமெரிக்காவில் வீட்டில் வளர்த்த மலைப்பாம்பு கழுத்தை இறுக்கி அதில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்கா இண்டியான பகுதியைச் சேர்ந்த லாரா என்ற இளம்பெண் தனது வீட்டில் 140 க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்தார். அதிலும் செல்லப்பிள்ளையாக மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார் லாரா. இந்நிலையில் கடந்த வாரம் அவரது வீடு பூட்டப்பட்டு உள்ளே துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டை உடைத்து […]
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட அதி நவீன சமையல் சாதனம் இன்று அவர்களை சென்றடைகிறது. அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சர்வதேச விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றை தயாரிக்க மாவு, மைக்ரோவேவ் ஆகியவற்றை அமெரிக்கா வெர்ஜினியா பகுதியிலிருந்து 3.7 டன் எடை கொண்ட சைக்னஸ்விண்கலம் மூலம் அனுப்பி வைத்தது. இந்நிலையில் சைக்னஸ் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பம் ஈர்ப்புவிசை […]
ஐநா பாதுகாப்பு கவுன்சில் மாதாந்திரக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பட மாட்டாது என்று தற்காலிக பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான கிரியாஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டன் தூதரான கிரியாஸ் நவம்பர் மாதத்திற்கான தற்காலிக பாதுகாப்பு கவுன்சிலிங் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பற்றி விவாதம் ஏதும் நடைபெறாது என்று தெரிவித்த அவர், ஜம்மு விவகாரத்தை ஏற்கனவே விவாதித்து விட்டதாகவும், அது தொடர்பாக […]
ரேடார் சென்சார் கருவியுடன் கூடிய பிக்சல்புக் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள பிக்சல் போர் மற்றும் பிக்சல் ஸ்மார்ட்போன் நியூ அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் எளிதான வடிவமைப்புடன் சைகை மூலம் இயங்கும் வசதி கொண்ட இந்த செல்போன்களில் ரேடார் சென்சார் கருவிகள் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் உயர்தர கேமரா வசதிகள் இடம் பெற்றுள்ளன. அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக நடுத்தர வழியில் […]
ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரையாக உட்கொள்ள அமெரிக்க ஆய்வாளர்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு நுட்பத்தை கண்டறிந்து உள்ளனர். அமெரிக்காவில் மசாஜ் ஸ்டர்ட்ச் என்ற தொழில் கல்வி நிறுவன ஆய்வாளர்கள் பன்றி ஒன்றை வைத்து மேற்கொண்ட பரிசோதனையின் முடிவுகள் நேச்சர் மெடிசன் என்ற இதழில் இந்த வாரம் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இன்சுலின் மருந்து ஊசி மூலமே செலுத்தப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவிலான மாத்திரையை கண்டறிந்து அதன் மூலம் இன்சுலின் […]
இஸ்ரேலை சேர்ந்த அல்போன்ஸ் என்ற உணவு நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து மாட்டிறைச்சியை வெற்றிகரமாக வளர்த்து காட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. மாட்டு இறைச்சியை வளர்த்து காட்டும் முயற்சியில் இறங்கிய இஸ்ரேலைச் சேர்ந்த என்ற அல்போன்ஸ் என்ற உணவு நிறுவனம் ரஷ்யாவைச் சேர்ந்த3d பிரின்டிங் நிறுவனத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டது. அந்த வகையில் பசுவிலிருந்து செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டு வளர்ச்சி பெற ஏதுவான சூழல்களில் செல்கள் வைக்கப்பட்டு பெருக்கம் அடைய வைக்கப்பட்டன. இறுதியில் […]
இந்த ஆண்டில் 90 சதவிகித நாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என கூறியுள்ள சர்வதேச பண நிதியம் இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் அமைந்துள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் அதன் பொது இயக்குனரான கிறிஸ்டினா ஜியாஜீவா உரை நிகழ்த்தினார். அப்பொழுது அவர் உலக பொருளாதாரம் ஒருங்கிணைந்த மந்த நிலையை சந்தித்து வருவதாக தெரிவித்த அவர், அமெரிக்கா சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போர் தான் இதற்கு காரணம் […]
ஃபெராரியை நிறுவனத்தின் புதிய காரின் விற்பனை குறித்த தகவல்கல் வெளியாகி உள்ளது. ரேஸ் கார்கள் என்றாலே ஃபெராரியை நிறுவனம் தான் என சொல்லும் அளவிற்கு பெயர்போனது இந்நிறுவனம். தற்போது இந்நிறுவனத்தின் புதிய ‘எப்ஃ8 டிரிபியூடோ’ மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.4.02 கோடி என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இத கார் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஹைபிரிட் மாடல் […]
ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்களை தேசிய நாளான அக்டோபர் 1-ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டுவர சீனா தீவிரமாக திட்டமிட்டுள்ளது. ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவரை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் சுமுகமாக சென்ற போராட்டம் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. போராட்டம் தொடங்கி 100 நாட்கள் கடந்த நிலையில் போராட்டத்தின் கவலையினால் அதனை முடிவுக்கு கொண்டு வர சீனா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. […]
நேபாளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை ஏற்றம் நடைப்பயிற்சி செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இது தொடர்பாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மலை ஏற்றம் மற்றும் சாகச பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் மற்ற பகுதிகளைவிட மலைப்பகுதிகளில் மழையின் அளவு அதிகமாவதால் ஏற்கனவே சென்றவர்கள் பாதுகாப்பாக […]
இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் மீது அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஈரான் தலைவர் கூறியுள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்று […]
உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. ஆராய்ச்சி கட்டுரைகள், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அறிவுசார்ந்த திறன்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் தர வரிசைப் படுத்தி ஒவ்வொரு ஆண்டும் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்நிறுவனம் இன்று வெளியிட்டது. அதில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளன. முதல் 10 […]
ஏர்பஸ் நிறுவனம் விபத்தை தவிர்க்க 400 ஹெலிகாப்டர்களை தரவரிசை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. நார்வேயில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஏர்பஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக 400 ஹெலிகாப்டர்களை தர பரிசோதனை செய்ய ஏர்பஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எஞ்சினிற்கும் மின் உற்பத்திக்கும் இடையேயான பகுதிகளை ஆராயுமாறு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஏர்பஸ் நிறுவனம் உத்தரவிட்டு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் டெலிவரி செய்யப்பட்ட 125 s29 உள்ளிட்ட […]
ஈராக்கை ஒட்டியுள்ள பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானங்கள் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. மத்திய ஈராக்கில் உள்ள டைகிரிஸ் நதியின் நடுப்பகுதியில் கானஸ் என்ற தீவு பகுதி உள்ளது. அப்பகுதியில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த நவீன ரக அமெரிக்க போர் விமானங்கள் டைக்ரீஸ் நதியின் குறிப்பிட்ட பகுதியில் 40 டன் அளவிற்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். […]
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை திடீரென பதவியை விட்டு நீக்கியுள்ளார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற மூன்றாவது நபர் போல்டன். அவர் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் டிரம்புக்கு போல்டன் ஆலோசனைகளை வழங்கி வந்தார். ஈரான் விவகாரத்தில் எடுத்த பல்வேறு அதிரடி முடிவுகளுக்கு போல்டனே காரணம். இந்த தீவிர நிலைப்பாட்டை வடகொரிய, ஆப்கானிஸ்தான், ரஷ்யா தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும் […]
அமெரிக்காவில் வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்சம் ரூபாயை செலவு செய்த தம்பதிகள் வழக்கை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவின் பெனிசிலியா மாகாணத்திலுள்ள மாண்டீஸ்ட்டர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் ரிப்பனில் வில்லியம்ஸ். இவர்களது வங்கி கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. சட்டப்படி இதனை வங்கிக்கு தெரிவிக்காத அந்த தம்பதி கேம்பர், ஷோபி ரேஸ் கார்கள் வாங்கியது, நண்பர்களுக்கு உதவியது என்று பணத்தை தாறுமாறாக […]
அமெரிக்காவில் சொல்லாமல் வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சி தர முயன்ற இளம்பெண் தாயாலே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மகள் தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க மெதுவாக வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் திருடன் ஒருவன் வீட்டிற்குள் வருவதாக கருதிய பெண் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு தனது படுக்கை அறையின் கதவை திறந்து வைத்து காத்திருந்தார். அப்பொழுது உள்ளே ஒருவர் நுழைந்ததும் தாய் ஸ்பெஷல் ரிவால்வர் துப்பாக்கியால் சுட்டார். பின் சுடப்பட்டது தான் பெற்ற […]
கூகிள் நிறுவனம் playstore யில் இருந்து கேம் ஸ்கேனர் செயலியை நீக்கியுள்ளது . லட்சக்கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி கேம் ஸ்கேனர். இந்த செயலியில் ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை எளிதில் பிடிஎப் ஆக மாற்றலாம்.இந்நிலையில் , இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். எனவே, கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் “playstore” இல் இருந்து நீக்கியுள்ளது. மேலும், மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதாகவும், ஐஓஎஸ் வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]