அங்கோர்வாட் கோவில் கம்போடியாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 162 ஹெக்டர் ஆகும். இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனால் 12-ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சில மன்னர்களின் ஆட்சி காலத்தால் பதினாறாம் நூற்றாண்டில் முழுமையாக கைவிடப்பட்டது. இதனை அடுத்து 20- ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இந்த கோவிலில் விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட சன்னதி சுமார் 400 ஆண்டு காலம் பராமரிக்காமல் இருந்ததால் மரங்களால் மூடப்பட்ட […]
Tag: worship
காய்கறியால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு பகுதியில் ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்துள்ளனர்.
முருகப்பெருமான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட வைரவேலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலுக்கு பாலகுமார், சபரி பாபு ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் வெள்ளியில் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசி நெற்றியில் வைரக்கல் பதித்த வேலை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். இந்நிலையில் கோவிலில் வைத்து வேலுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன்பின் முருகப் பெருமானை தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
கோவிலில் உருவ பொம்மைகளை வைத்து பக்தர்கள் வினோதமாக வழிபாடு நடத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைதுறையம் பாளையம் கிராமத்தில் இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் மாதையன் என்கிற நவக்கிணற்று மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கலை முன்னிட்டு யானை, மாடு, நாய், மனிதன் உள்ளிட்ட உருவ பொம்மைகளுக்கு பக்தர்கள் வர்ணம் பூசி வனத்துறையினரின் அனுமதியுடன் வழிபாடு நடத்துவது வழக்கம். இப்படி வழிபாடு செய்தால் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் ஆரோக்கியமாக வாழும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. […]
சூரிய தோஷத்தில் இருந்து விடுபட ஞாயிற்றுக்கிழமை தினத்தின் சூரிய பகவானை வழிபட்டு பரிகாரம் செய்வதன் மூலம் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று சூரிய பகவானை தரிசிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு நபரின் ஜாதகத்தில் பாதகமான சூரியதிசை நடப்பதாலும், சூரியனின் நிலை கெட்டிருந்தாலும் சூரிய தோஷம் ஏற்படும். அதோடு வயதான காலத்தில் தங்களது தந்தையை சரியாக பராமரிக்காமல் இருந்தாலும் தோஷம் ஏற்படும். இப்படி சூரிய […]
சனிக்கிழமை எள் தீபமேற்றி சனீஸ்வர பகவானை வழிபடுவதன் மூலம் கூடுதல் நன்மைகள் கிட்டும். சனிக்கிழமை தினத்தன்று சனீஸ்வர பகவானை வழிபட்டு வந்தால் தோஷங்களிலிருந்து விடுபட்டு வாழ்வில் நன்மை கிட்டும். அதாவது சனிக்கிழமை நாளில் பகவானின் சன்னதிக்கு சென்று தீபமேற்றி வழிபடவேண்டும். மேலும் பிறருக்கு உதவி செய்வதன் மூலமும், அவர்களுக்கு உணவு வாங்கி கொடுப்பதன் மூலமும் சனீஸ்வர பகவானின் அருளைப் பெற்று அனைத்து காரியங்களிலும் வெற்றிபெறலாம். ஆனால் நம் மீது நேரடியாக சனி பகவானின் பார்வை படக்கூடாது என்று […]
அக்கினி நட்சத்திரம் என்ற உச்ச வெயில் காலம் பற்றி பார்க்கலாம். கோடை காலத்தில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும் காலம் அக்கினி நட்சத்திரம், அக்கினி நாள் அல்லது கத்தரி வெயில் என்று அழைக்கப்படும். இது ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் பஞ்சாங்கப்படி ஞாயிறு (சூரியன்) பரணி விண்மீன் மூன்றாம் பாதத்தில் தொடங்கி கிருத்திகை மீன் முழுவதும் வலம்வரும் காலகட்டமாகும். சூரியன் மேட இராசியில் உலவும் உச்ச வெயில் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படும். அருச்சுனன் காண்டாவனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் எனக் கூறப்படுகின்றது. அக்னி நட்சத்திர தோசம் என்று ஒரு தோசமும் ஜோசியத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. […]
அட்சய திருதியை இன்று செய்யும் பூஜைக்கு சத்யநாராயண பூஜை என்று பெயர். இன்று அன்னதானம் செய்யுங்கள் ஆயுள் பெருகும். அட்சய திருதியை இன்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜை என்று பெயர். இன்றைய தினம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன் மேல் மனைப் பலகை போட்டு அதன் மேல் வாழையிலை வைத்து, இலையில் பச்சரிசி சிறிது பரப்பி ஒரு சொம்பில் தண்ணீர் ஊற்றி மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை […]
அட்சய திரிதியை இன்று சொல்ல வேண்டிய சுலோகம் பற்றி பார்க்கலாம். இன்று காலையில் அட்சய திருதியை முன்னிட்டு எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலுள்ள பூஜை அறையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமமோ, அஷ்டோத்தரமோ சொல்லி வழிபடுங்கள். பாயசம் அல்லது பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். இன்று முழுவதும், ‘ஓம் நமோ நாராயணா.. ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ..’ என சொல்ல, நன்மைகள் கிடைக்கும். இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் […]
சிவராத்திரி அன்று சிவபக்தர்கள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும். வருகின்ற 21 ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி வருகின்றது. எப்படி விரதம் இருக்க வேண்டும் என்றும், அந்த நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம். அன்றைக்கு சில விஷயங்களை செய்யும் பொழுது கோடான கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என குறிப்பிடப் பட்டிருக்கிறது. மகா சிவராத்திரியன்று இரவில் தூங்கக் கூடாது என்று சொல்லுவார்கள். ஏன்னென்றால் நம்முடைய உயிர் சக்தியானது மேலெழும்பும் நாள் என்று கூறுவார்கள் […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுகள் பெறும் நாளாகவே இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும், விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சினை தலைதூக்கும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுங்கள். எந்த ஒரு பிரச்சனையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். அடுத்தவரிடம் கொஞ்சம் கவனமாகவே […]
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று சிவாலய வழிபாட்டை கொண்டு சிறப்பினை காணவேண்டிய நாளாகவே இருக்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். அதிகாரிகளின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். இன்று எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செய்யுங்கள். பணவரவு ஓரளவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்தோடு இருங்கள். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும், உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணம் எதிர்பார்த்தபடியே வந்து செல்லும். வெளியூர் […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று விரயங்களை சுப விரயமாக மாற்றிக்கொள்ள வேண்டிய நாளாகவே இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். இன்று தெய்வீக வழிபாடு குதூகலத்தை கொடுக்கும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் கொஞ்சம் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறு ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூல் தாமதமான போக்கே […]
செம்மையான மனதினைப் பெறுவதற்காகத் தான் தினந்தோறும் “திருக்கோவில் வழிபாடு அவசியம்” என ரத்தினச் சுருக்கமாய் பெரும் மகத்துவத்தை ஆன்றோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். பழமையான & புராதனமான (முறைப்படி பூஜை நடைபெற்றுவரும்) திருக்கோவில்களில்=அதுவும் சித்தர்கள் அருளிய அல்லது ஜீவசமாதி அடைந்த கோவில்களில் மிகுதியான பிரபஞ்ச சக்தி (காந்த சக்தி) இருக்கும் இந்த தெய்வீக சக்தி பல அரிய ஆற்றல்களை கொண்டது. இது ஆத்ம பலத்தினை தரவல்லது. இயன்றளவு கோவில்களுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் நமது மூளையின் நரம்பு மண்டலங்கள் […]
சூரியனில் இருந்துதான் பூமி ஆரம்பகிறது. சூரியன் இல்லையேல் நாம் வாழும் பூமியும் இயங்காது சூரியனை வழிபடுவது ஆன்மிகம் மட்டுமில்லை, ஆரோக்கியமும் கூட. நம் நாடுகளில் இன்றும் பெருமளவு சூரியனை வழிபாடுதான் வருகிறோம். சூரியன் இல்லாமல் உலகம் இயங்குமா. இல்லை. பூமியின் தாயே சூரியன் தான். `சூரிய நமஸ்காரம்’ எனும் வழிபாடு ஆன்மிக உணர்வுக்காக மட்டுமன்றி ஆரோக்கிய விஷயத்துக்காகவும் பலராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிகாலை சூரியனை வணங்கி அவனது ஆற்றலை நாம் பெற்றுக்கொள்வது என்பது பல வியாதிகளை நீக்கும். பல […]
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருகோவிலில் லட்சதீபம் ஏற்றும் விழா, ஆறு ஆண்டுக்கு ஒருமுறை இந்த லட்சதீப திருவிழா நடைபெறுகிறது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான லட்சதீப விழா நேற்று இரவு நடைபெற்றது. நெல்லையப்பர் கோவிலில் பல்வேறு பகுதிகளில் தீபம் ஏற்றப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினர்.
திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. திருவிழாவின் 9ஆம் நாளான இன்று, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக கிளிமாலை கொண்டு வரப்பட்டது. இதை அணிந்த படி, நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அருளினார் . அப்போது ,பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா’ என பரவசத்துடன் தேரை இழுத்து தரிசனம் செய்தனர்.திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு […]