நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, பூரண உடல் நலத்தோடு இருப்பதாக தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா (71), நெஞ்சு வலி காரணமாக கடந்த புதன்கிழமை (டிச11) பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த ராமையாவுக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார். […]
Tag: #Yediyurappa
கர்நாடகாவில் நிலையான ஆட்சிக்காக மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஐந்து கட்டமாக நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஹசரிபாக் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். நேற்று வெளியான கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், “கர்நாடக மக்களை ஏமாற்றிவிட்டு தப்பித்து விட முடியாது என்பதை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா […]
கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, அக்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவிற்கு தாவினர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியமைத்தது. இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன. இதில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான […]
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் ராஜிமானா செய்த நிலையில், காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி முடிவுக்குவந்தது. இதனிடையே கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து பாஜக ஆட்சியமைத்தது. இந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் 68% வாக்குகள் […]
கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி நடந்தபோது, அக்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவிற்கு தாவினர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியமைத்தது. இதனையடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன. இதில் காலியாக உள்ள 17 தொகுதிகளிலில் 15 தொகுதிகளுக்கு மட்டும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ராஜராஜேஸ்வரி நகர், மஸ்கி தொகுதிகளில் […]
கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். கர்நாடகாவில் நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிச. 5ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதற்கான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும், காங்கிரஸ், மஜத தலா இரண்டு தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர். […]
குமாரசாமி ஆட்சி செய்ய தெரியாதவர் என்று சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி_யின் தந்தையும் , முன்னாள் பிரதமருமான தேவேகவுடா_வும் சித்தராமையா_வை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.அதில், குமாரசாமி முதல்வராக […]
என்னை காங்கிரஸ் கட்சி அடிமை போல நடத்தியது என்று குமாரசாமி வேதனையடைந்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகாவின் முந்தைய அரசு கவிழ்த்து குறித்து காங்கிரஸ் கட்சியினர் மீது குமாரசாமி கடும் விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றார்.இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் கர்நாடகாவில் 14 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை கிளார்க் போல் […]
கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார் சமீபத்தில் கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்து தோல்வியடைந்ததையடுத்து பெரும்பான்மையுடன் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மேகதாது அணை சம்பந்தம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின் எடியூரப்பா […]
4-ஆவது முறை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்து கவிழ்ந்ததால் தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து 105 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு முயற்சிகளை செய்து வந்தது. அதை தொடர்ந்து கர்நாடக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா இன்று காலை ஆளுனர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு […]