Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் திருட்டில் ஈடுபட்டவர் கைது… நகைகள் பறிமுதல்.!!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகை, கைப்பேசிகளை திருடி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் நகைகள், கைப்பேசிகள் திருடுபோவதாக சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈட்டுப்பட்டு வந்தனர். இந்த நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை எண் 6-ல் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்யும் போது திருப்பத்தூர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மின்னல் தாக்கி இளம்பெண் பலி… 2 பேர் காயம்..!!

விழுப்புரத்தில் மின்னல் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமுற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி நித்யா என்கிற சிவப்பிரியா (23). நித்யாவும், அதேபகுதியைச் சேர்ந்த விசாலாட்சி என்பவரும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென அப்பகுதியில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது திடீரென இடி தாக்கியது. இதில் நித்யா சம்பவ இடத்திலேயே பலியானார். ஆபத்தான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவன் வெளியூரில்…. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர்… கமிஷனரிடம் மனு கொடுத்த இளம்பெண்..!!

இளம்பெண் ஒருவர் தான் தனியாக வசித்து வருவதால் பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக  கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  சென்னையை அடுத்துள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்தஇளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கோவூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவர் பெங்களூருவில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் […]

Categories
உலக செய்திகள்

செல்ஃபியால் ஏற்பட்ட சோகம்… இளம்பெண் உயிரிழப்பு..!!

ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் பாறைகள் நிறைந்த பகுதியில் செல்ஃபி எடுக்கும் போது  தவறி விழுந்து உயிரிழந்தார்.  ஆஸ்திரேலியாவின்  டைமண்ட் வளைகுடா என்ற இடத்திற்கு அவ்வப்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். அதன்படி சென்ற  சனிக்கிழமையும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதில்  27 வயது மதிக்கத்தக்க ஒரு  இளம்பெண்  200 அடி உயரமுள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் செல்ஃபி  எடுக்கும்போது காற்று மிகவும் பலமாக வீசியது. இதனால் தன் நிலைதடுமாறிய அப்பெண்  கால் இடறி […]

Categories
தேசிய செய்திகள்

“காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி” துணிச்சலாக நாக்கை கடித்து தப்பிய பெண்… அதிரடியாக இருவர் கைது..!!

ஜெய்ப்பூரில் இளம்பெண்ணை காரில் வைத்து இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது நாக்கை கடித்து விட்டு தப்பி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  ஜெய்ப்பூரை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் தனது  நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பின் வீடு திரும்புவதற்காக வாடகை காரை  அழைத்துள்ளார். அப்போது அந்த காரில் டிரைவர் தவிர இன்னொரு நபரும் இருந்துள்ளார். சிறிது தூரம் கார் புறப்பட்டு செல்ல தொடங்கியதும் காரில் இருந்த இருவரும் அப்பெண்ணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு, ரயிலில் பாய்ந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணம்..!!

சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு, ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில்  இரண்டாவது பிளாட் பாரத்தில் கடந்த 14-ம் தேதி இரவு 8 மணி அளவில் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், அதே ஊரை சேர்ந்த கூட்டுறவுத்துறை ஊழியரான தேன் மொழி என்ற இளம்பெண்ணும் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலையத்தில் “இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு” இளைஞன் தற்கொலை முயற்சி..!!

சென்னை ரயில் நிலையத்தில் இளைஞன் ஒருவன் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்    சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞரும், அதே ஊரை சேர்ந்த தேன் மொழி என்ற இளம்பெண்ணும் பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அப்பெண்ணை வெட்டினான். கழுத்தில் காயம் பட்ட அப்பெண் கீழே விழுந்தார். இளம்பெண்ணை வெட்டிய பிறகு அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் […]

Categories

Tech |