உலகம் முழுவதும் இருக்கக் கூடிய இளைஞர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்த பல கட்ட நடவடிக்கைகளை உலக நாடுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இளைஞர்கள் இரவு விடுதி, கடற்கரைகளுக்கு தேவையின்றி செல்வதால், 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு […]
Tag: youngster
இரவு நேரத்தில் காதலி வீட்டுக்குச்சென்ற இளைஞர் தெரியாமல் கிணற்றில் விழுந்து, படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அடுத்த அம்பத்தூர் வெங்கடாபுரம் கன்னிப்பசெட்டி தெருவில் வசித்து வரும் ஜிலான் என்பவர் தொழிற்கல்வி முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில், வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரகடம் சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர் செல்போன் கடைக்கு வர, ஜிலானுக்கும், அந்த பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.. இருவரும் ரொம்ப தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு […]
ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த வாரம் மாயமான இளைஞர், கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது ஜான்ரோஸ் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவருடன், கடந்த ஜூன் 26ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பயந்து போன அவரது குடும்பத்தினர், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகாரளித்தனர். […]
தன்னை காதலித்து ஏமாற்றிய இளைஞரை கைது செய்ய கோரி இளம்பெண் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள பகவான் பட்டியைச் சேர்ந்தவர் ராம்கி.. இவருக்கு வயது 22 ஆகிறது.. ராம்கி கவரப்பட்டியைச் சேர்ந்த தனது மாமன் மகள் உறவு முறை கொண்ட இளம்பெண்ணை கடந்த ஓராண்டிக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி தனிமையில் நெருக்கமாக இருந்து வந்ததால் 5 மாதம் கர்ப்பிணியான அந்த பெண், தன்னை […]
சீர்காழி அருகே முன்விரோதம் காரணமாக கட்டையால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயில், மருவத்தூர் பெரிய தெருவில் வசித்துவரும் 30 வயதுடைய கட்டட தொழிலாளி சுகதேவ் என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், அரவிந்த், பாலகுரு, சிவசாமி ஆகிய 4 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தநிலையில், கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று இரவு மேற்கண்ட 4 பேருக்கும், சுகதேவ்விற்கும் […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று பரிதாபமாக பலியானார்.. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகேயுள்ள புல்லக்கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்.. 34 வயதுடைய இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பொறியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 7ஆம் தேதி தனது மனைவி அருள்மொழி (28) மற்றும் மகள் சிஸ்டிகா (4), ஆகியோருடன் சென்னை வண்டலூரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். மணிகண்டனுக்கு உடல்நிலை […]
நெல்லையில் கொரோனா ஆபத்தை உணராமல் வயல்வெளியில் கூட்டாகச் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்ட 8 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகஅரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் துபாய் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது […]
காளவாசல் சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் தொடர்புடைய நபர்களை அதிரடியாகக் கைது செய்தும் வருகிறது. இந்நிலையில் மதுரை காளவாசல் சந்திப்பு அருகேயுள்ள வணிக வளாகத்தின் முன்புறம் 17வயது சிறுவன் கஞ்சா விற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து எஸ்எஸ் காலனி காவல் ஆய்வாளர் […]
சேலம் மாவட்டம் கச்ச பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5000 பனை விதைகளை ஏரிக்கரையில் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாரமங்கலம் வரலாற்று அறக்கட்டளை சார்பில் கச்ச பள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் ஏராளமான மாணவர்கள் 5000 பனை விதைகள் ஆர்வத்துடன் விதைத்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்வில் மாணவர்களிடம் மரம் வளர்த்து நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது பனை […]
திருச்சியில் காவலர் ஒருவரை மிக தரக்குறைவாக குடிபோதையில் இளைஞர் ஒருவர் பேசும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி வந்துள்ளார். இதனை கவனித்த அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் இளைஞர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சாவியை பறிமுதல் செய்துள்ளார். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் எல்லை மீறி மிக […]