Categories
உலக செய்திகள்

பிரபல நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை…. மிக வேகமாக பரவி வரும் ஓமிக்ரான்…. இஸ்ரேலின் அதிரடி உத்தரவு….!!

இஸ்ரேல் அரசாங்கம் ஓமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நாடுகளான டென்மார்க், பெல்ஜியம், இங்கிலாந்து போன்றவைகளை சிவப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு எல்லைகளை மிக வேகமாக மூடி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் அரசாங்கம் ஓமிக்ரான் மிக வேகமாக அதிகரித்து வரும் நாடுகளான டென்மார்க், பெல்ஜியம், இங்கிலாந்து போன்றவற்றிற்கு செல்ல பயண தடையை விதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி மேல் குறிப்பிட்டுள்ள நாடுகளை சிவப்பு பட்டியலிலும் இஸ்ரேல் அரசாங்கம் சேர்த்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் நாட்டில் ஓமிக்ரானால் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |