Categories
உலக செய்திகள்

ஓட்டலில் இறந்து கிடந்த தைவானின் முக்கிய தலைவர்… வெளியான காரணம்…!!!

தைவான் நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சக ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவினுடைய துணை தலைவராக இருக்கும் ஓ யாங் லி-ஹ்சிங் மாரடைப்பால் ஓட்டலில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சக ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவினுடைய துணை தலைவராக இருக்கும் ஓ யாங் லி-ஹ்சிங் தனிப்பட்ட பணிக்காக ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.  அந்த சமயத்தில், அவருடன் யாருமில்லாததால் சிறிது நேரமாக போராடி பரிதாபமாக மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருந்ததாக குடும்பத்தினர் கூறியிருக்கிறார்கள். மேலும், விசாரணையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு தான் உயிரிழந்தார் எனவும் அவர் இருந்த அறையில் எந்த ஊடுருவல்களும் இல்லை. இதனால், அவரை யாரும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்

Categories

Tech |