சீன அதிபர் ஜின்பிங் சுதந்திரமும் ஜனநாயகமும் சமரசம் கிடையாது என்று கூறியதற்கு தைவான் பதிலடி கொடுத்திருக்கிறது.
சீன நாட்டில் அதிகம் பேர் எதிர்பார்த்த ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. மாநாட்டின் தொடக்கத்தில் அதிபர் ஜின் பிங் உரையாற்றிய போது, தைவான் பிரச்சனை பற்றி பேசி உள்ளார். அவர் தெரிவித்ததாவது, தைவான் விவகாரத்தில் பிரிவினைவாதிகளை வென்று நாட்டினுடைய ஒருமைப்பாட்டை எதிர்க்கும் நிலைப்பாட்டை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறோம்.
தைவான் விவகாரத்தில் தயங்காமல் படைபலத்தை பயன்படுத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் அதிபர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, எங்களின் நிலைப்பாடு உறுதியாக இருக்கிறது.
தங்களின் தேசிய இறையாண்மையிலிருந்து தைவான் எப்போதும் பின்வாங்குவதில்லை. சுதந்திரத்திலும், ஜனநாயகத்திலும் சமரசம் செய்யப்படாது. சுதந்திர நாடாக தைவான் உள்ளது. போரை எதிர்கொள்வது எங்களின் விருப்பம் கிடையாது. இதுவே, தங்கள் மக்களின் ஒருமித்தமான கருத்தாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.