Categories
உலக செய்திகள்

“ஹாங்காங்கில் தினசரி பத்திரிகை முடக்கப்படுவதா!”.. தைவான் அதிபர் கண்டனம்..!!

ஹாங்காங்கின் தினசரி பத்திரிக்கை நிறுவனமானது, அரசாங்கத்தின் அச்சுறுத்தலால் தன் பதிப்பை நிறுத்தியதற்கு, தைவான் அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் ஹாங்காங் உள்ளது. எனவே சீன அரசு, ஹாங்காங்கில் ஒடுக்குமுறையை கையாண்டு வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கின் தினசரி பத்திரிகை நிறுவனம் அரசிற்கு எதிரான கருத்தை வெளியிட்டதால், அதன் பதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தைவான் அதிபர், இந்த செயலுக்கு தான் வருத்தம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் ஹாங்காங்கின், சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு தைவான் உதவி செய்யும் என்று கூறியிருக்கிறார். சீன அரசிற்கு எதிராக செயல்படும் ஊடகங்கள் மீது வன்முறை நடத்தப்படுகிறது. தற்போது சீனா, தைவான் அரசை எதிர்த்து வருவதால் ஹாங்காங்கை சேர்ந்த இந்தப் பத்திரிகைக்கு அந்நாட்டின் அதிபர் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |