கொரோனா அச்சுறுத்தலால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா ஓட்டு மொத்த உலகையும் கொலை நடுங்க செய்து வருகிறது. 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலைகார கொரோனாவின் தாக்குதலுக்கு இந்தியாவிலும் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவின் வேகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லுரி விடுமுறை, திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்கள் யாரும் பொது இடங்களில் ஓன்று கூட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல உலக அதிசயங்களில் முக்கியமானதும், இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தாஜ்மஹால் மூடப்பட்டு, அங்கு பார்வையாளர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.