Categories
உலக செய்திகள் லைப் ஸ்டைல்

கொரோனா பாதித்தவர் குணமடைய எவ்வளவு நாளாகும்…?

கொரோனா தொற்றில் இருந்து விடுபட இரண்டு வாரங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக எத்தனை நாட்கள் ஆகும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருப்பதே.  எந்த அளவுக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனரோ  அதற்கேற்றார் போல் குணமடையும் காலமும் அமையும்.

பாதிக்கப்பட்டவர்களின் வயது, பாலினம் அவரது உடல்நல பிரச்சனைகள் போன்றவற்றை பொறுத்தே அவர்கள் விரைவில் தொற்றிலிருந்து விடுபடுவதும் இல்லை நீண்டகாலம்  அவதிப்படுவதும். அதோடு சிகிச்சை எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்கள் அதையும் சார்ந்தே  தொற்றிலிருந்து எவ்வளவு விரைவில் குணமடைவீர்கள் என்பது உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் முதலில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதனோடு உடல் வலி, சோர்வு மற்றும் தலைவலி தொண்டை வலி ஆகியவை இருக்கும். ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருந்து போகப்போக சளியாக மாறும். இந்த சூழலில் அதிக நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்டு பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை போட்டு நன்றாக ஓய்வு எடுத்தால் எளிதில் சரிசெய்ய முடியும்.

இதனால் சிறிய அறிகுறிகள் இருப்பவர்கள் மிகவும் விரைவாக குணமடைவார்கள் இருமல் குணமாக நீண்ட காலம் ஆகலாம். ஆனால் காய்ச்சல் ஒரு வாரத்திற்குள் ஆக குறைந்துவிடும் குறைந்தது இரண்டு வாரங்களுக்குள் இந்த தொற்றில் இருந்து குணமடைவார்கள்  என சீன தரவுகளை ஆராய்ந்த உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

Categories

Tech |