புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலுள்ள மார்க் தனியார் துறைமுகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தலைமையிலான புதுச்சேரி சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு இன்று ஆய்வு மேற்கொண்டது. துறைமுகத்தின் மாசு கட்டுப்பாடு, உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்களை இந்தக் குழு ஆய்வு செய்தது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மதிப்பீட்டுக் குழுத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பழகன், “புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாட்டைப் போக்க புதுச்சேரி அரசு மலேசியா நாட்டிலிருந்து 55 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.