Categories
உலக செய்திகள்

என் உடலையும், சொத்துக்களையும்…. அங்கே கொண்டு செல்லுங்கள் – நித்யானந்தா…!!

தான் இறந்த பிறகு தன்னையும் தன்னுடைய சொத்துக்களையும் இந்தியாவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

தான் இறந்த பிறகும் தன்னையும், தன்னுடைய மொத்த சொத்துக்களையும், இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை சாமியார் நித்யானந்தா முன்வைத்துள்ளார். இந்துவத்திற்காக தான் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மரணத்திற்கு பின்னர் உடலை பெங்களூருவில் அமைந்துள்ள ஆசிரமத்தில் அடக்கம் செய்ய வேண்டுமெனவும், மேலும் தனது மொத்த சொத்துக்கள் முழுவதும் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்துக்களுக்கும், இந்தியாவுக்கு எதிரான சில அமைப்புகளிடமிருந்தும் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறியுள்ளார்.

மேலும் சிலர் கூட்டாக சேர்ந்து தன்னை அடித்துக் கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தம்முடைய நாடான கைலாசவுக்கு செல்ல ஆஸ்திரேலியாவிலிருந்து இலவச விமான சேவை அளிப்பதாக முன்னதாக அறிவித்திருந்தார். மேலும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு விசா வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். குஜராத் ஆசிரமத்தில் பல இளம்பெண்களை கடத்தியதாக வழக்கு பதிவு செய்த நிலையில் தப்பித்து சென்றார். இதன் பிறகு தான் தீவு ஒன்றை வாங்கி புதிய நாடாக அறிவித்தார் என்று குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |