ஒரு குழந்தை காயப்படும் போது தாயின் மனம் காயப்படும். அது மனிதருக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் தான். ஒடிசாவில் ஒரு கன்றுக்குட்டி காயமடைந்த போது பசு வேதனை தாங்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வண்டியின் பின்னாலே ஓடும். வாகனம் மோதியதில் கன்றுக்குட்டிக்கு காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளது. இதனை பார்த்த பசு சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்தது. இதனை பார்த்த சிலர் ட்ராலி ரிக்ஷாவில் கன்று குட்டியை வைத்து தலைமை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ரிக்ஷாவில் தனது கன்றுக்குட்டியை கொண்டு செல்வதை பார்த்த பசு பயத்துடனும், வேதனையுடனும் அதனை பின்தொடர்ந்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிறது. மூன்று கிலோமீட்டர் வரை அந்த பசு கன்று குட்டியின் பின்னால் ஓடியது. மேலும் தற்போது கண்டு நன்றாக குணமடைந்து உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு, பலரின் தாய் பாசத்தை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
https://youtu.be/SE7evTjNcxQ