அடுத்த இரண்டு நாட்களுக்கு 14 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் யாஷ் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் வறண்ட காற்று வீசி வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 14 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.
அதன்படி மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அங்கு மழை குறையும் என்றும் தெரிவித்துள்ளது.