நிவர் புயலில் வேகம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்த நிலையில் தற்போது 11 கிலோ மீட்டர் வேகமாக மாறியுள்ளது.
நிவர் புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து உள்ளது. தற்போது இதின் காற்றின் வேகம் 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கிறது.
இன்று மதியம் அதி தீவிர புயலாக வந்து பெறக்கூடும். வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரி பகுதியில் அருகே கரையைக் கடக்க கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூ,ர் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனம் முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
காற்றை பொறுத்தவரையிலே புயல் கரையை கிடைக்கின்ற சமயங்களில் நாகப்பட்டினம் காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சமயங்களில் 150 கிலோமீட்டர் வரையிலும் வீசும். மேலும் திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சமயங்களில் 100 கிலோமீட்டர் வேத்திலும் காற்று வீசும்.
கடல் அலையை பொறுத்தவரை இன்று இரவு வரை கடல் தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.