Categories
சென்னை மாநில செய்திகள்

டக்குனு…! ”உடைச்சிட்டு வாறாங்க” அலேக்கா தூக்கிடுவோம் – எச்சரித்த ராதாகிருஷ்ணன் …!!

தமிழகத்தில் இறப்பை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் IAS கூறுகையில், ஒரு நபரிடம் இருந்து உடனே 10 பேருக்கு கொரோனா பரவுற மாதிரி ஒரு சவால் இருக்கும் போது, இப்போ என்ன வழி ? நம்ம மருத்துவ வல்லுனர்கள் என்ன சொல்றாங்கன்னா ? கொரோனா பாதிக்கப்பட்டவரை உடனே கண்டறிய வேண்டும். அவுங்க குடும்பத்தில் இருப்பவர்கள் மற்றும் அறிகுறிகள் இருந்தா உடனே கண்டுபுடிச்சுரனும். இப்போ காய்ச்சல் முகாம் போட்டுள்ளோம், இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவரை முன் கூட்டியே கண்டறிய வேண்டும்.

இறப்பை மேலும் குறைக்க வேண்டும்:

நம்மளோட நோக்கம் எண்ணிக்கையை பார்த்து பயப்படாமல், நம்மளோட இறப்பை குறைக்க வேண்டும். இந்தியாவிலேயே நமக்கு இறப்பு வீதம் குறைவாக உள்ளது. கொரோனா இருந்தும் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு வருவதால் அதிகமானோர் இறக்கின்றார்கள். எனவே அந்த இறப்பை மேலும் குறைக்க வேண்டும் என்பதற்காக காய்ச்சல் முகாம் போட்டுள்ளோம். காய்ச்சல் முகாம் வருபவருக்கு காய்ச்சலோ, சளியோ,  தொண்டை வலியோ இருந்தால் அவர்களுக்கு டெஸ்ட் பண்ணுறோம். அதே போல மல்லிகை கடை, வெஜிடபிள் கடை, டீ கடை, தள்ளுவண்டி கடை இந்த மாதிரி ஏரியாவில் அறிகுறியுடன் இருப்பபவர்களையும் சோதனை செய்கிறோம்.

தேடி புடிச்சு தனிமை படுத்துறோம்:

இப்படி தெருத்தெருவாய் டெஸ்ட் செய்து, தேடி சென்று அவர்களை கண்டறிந்து தனிமைப் படுத்தினால் தான் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். 1000, 1,500 அப்படி போகுதுனு நாம  அச்சம் பட கூடாது. இதனால் அவர்கள் மட்டுமல்ல, அவர்களுடைய குடும்பத்தையும் தேடிப் பிடித்து அவர்களை தனிமைப்படுத்த முடியும். முதலமைச்சர் அதற்கு தேவையான இடவசதியையும் தயார்படுத்திக் கொண்டு செல்லுங்கள் என்று சொல்லி இருக்காங்க.

ஏழு நாள் – பத்து நாளில் குணமாகும்:

பெட் வசதியை பொருத்தவரைக்கும் தேவையான சென்னை அரசு மருத்துவமனையிலேயே 4,944 பெட்  வசதி இருக்கு. தனியார் மருத்துமனையில் 4438 பெட் வசதி இருக்கு.கோவியட் ஹெல்த் சென்டர்ல 2960 பெட் வசதி வைத்துள்ளோம். கோவியட் கேர் சென்டர் 25 ஆயிரம் பெட் ரெடி பண்ணலாம். கொரோனா பாசிட்டிவ் கேஸ்ஸை அங்க வைத்து கண்காணித்து சிகிச்சை கொடுத்தால் ஏழு நாள் – பத்து நாளில் முழுமையாக குணம் அடைந்து விடுவார்கள்.

அச்சம் வேண்டாம்:

இதனால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.முதியோர்கள், நோய்வாய்ப்பட்ட, டிபி, சுகர் இருப்பவர்களுக்கு  தனி  கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக கார்ப்பரேஷனில் பதிவு செய்த 1 1/2 லட்சம் பேரை டெஸ்ட் செய்யுறோம்.தயவு செய்து பொதுமக்கள் அச்சம் வேண்டாம். அதே நேரத்தில் ஆக்கபூர்வமான சப்போர்ட் வேணும்.

அலேக்கா தூக்கிடுவோம்:

நேற்று ஒரு தெருவை பாக்குறோம் டக்குனு அதை உடைச்சு கிட்டு வெளிய வறாங்க, முக கவசத்தை போட்டுக்கல. ”சாரி சர்” அப்படின்னு சொல்றாங்க. இது அவர்கள் மட்டும் ஏமாற்றும் நிகழ்வல்ல. அவரினால் மற்றவர்களுக்கு பரவுது. அதனால்தான் இந்த மாதிரி மக்கள் பண்ணினா, அவங்களை அப்படியே அலேக்கா தூக்கி நாங்க முகாமில் போட்டு காவல்துறை உதவியோடு கேஸ் கூட போட்டுருவோம். அவர்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு வர கூடாது.

Categories

Tech |