சையது முஷ்டாக் அலி தொடரில் இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழக அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஷாருக்கான் அதன் ரகசியத்தை கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதின .இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இப்போட்டியில் கடைசி பந்தில் தமிழக அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது .அப்போது ஷாருக்கான் சிக்சருக்கு அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் .அதோடு அவர் 15 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 33 ரன்கள் குவித்தார். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து அவர் கூறும்போது,” ஐபிஎல் போட்டியின்போது தோனியிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவர் ஒரு பினிஷரின் ரோல் என்றால் என்ன என்பதை எனக்கு தெளிவாக விளக்கி கூறினார்.
களத்தில் நிற்கும் போது நாம் செய்வது சரிதான் என நாம் நம்பும் அளவுக்கு என்னிடம் எடுத்துக் கூறினார். ஏனென்றால் ஆட்டத்தின் போக்கை களத்தில் நிற்கும் போது அதனை கணிப்பவர் நாம்தான் .அதனால் நாம் எவ்வாறு ஆட போகிறோம் என்பதும் ,இலக்கை துரத்தும் போது நம் மூளைக்குள் என்ன ஓடுகிறது என்பதையும் நாம் தான் சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவர் கூறியபடியே நான் இறுதிப்போட்டியில் எந்த ஒரு பதட்டமுமின்றி சேஸிங்கை மனதில் வைத்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன் “இவ்வாறு ஷாருக்கான் கூறியுள்ளார்.