3 வயது சிறுவன் 53 உலக நாடுகளின் தலைநகரங்களில் பெயர்களை சரளமாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதூர் கிராமத்தில் தர்மபாலா-முத்துலட்சுமி என்ற தம்பதிகள் வசித்து வருகின்றன. ஹோட்டல் உரிமையாளரான தர்மபாலாக்கு அகரன், ஆதவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் தர்மபாலாவின் இளைய மகனான ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 53 உலக நாடுகளின் தலைநகரங்கள், தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை, ஆங்கில மாதங்கள், 16 வகை செல்வங்கள், இந்தியாவின் 7 தேசிய சின்னங்கள் என அனைத்தையும் சரளமாக ஒப்புவித்துள்ளார்.
3 வயது சிறுவனான ஆதவன் ஏற்கனவே ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம் பிடித்து புதிய சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதவனின் பெற்றோர் தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சையை நேரில் சென்று சந்தித்து ஆதவனின் சான்றிதழ்கள் கேடயங்கள் மற்றும் சாதனைகளைப் பற்றி கூறினர். இதனை கண்ட போலீஸ் சூப்பிரண்டு அச்சிறுவனின் சாதனைகளை பாராட்டி உள்ளார்.