தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் ஆக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதற்கு பிறகு தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கிடையே ஐ.நா. சுமார் ஆயிரம் அப்பாவி மக்கள் ஒரே மாதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அரசு படைகள் தலிபான்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இதனால் பெண்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில் தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பெண்கள் தொடர்பில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்களையோ, ஆட்சியாளர்களையோ கொலை செய்வது மற்றும் கொள்ளை அடிப்பது எங்களுடைய நோக்கம் அல்ல. மேலும் பெண்களின் உரிமைகளை மதிப்பதற்காக சபதம் எடுப்போம். அவர்களுக்கு கல்வி கற்பதற்கும் எந்த விதமான தடையும் இல்லை. ஆனால் பெண்கள் பர்தா அணிவது ஆப்கானிஸ்தானில் கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.