பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தான் நாட்டை பற்றி செய்தி சேகரிக்க சென்ற நிலையில் அவரை தலீபான்கள் கடத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய நாட்டின் ஒரு செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அனல் மல்லிக் என்னும் பத்திரிகையாளர், ஆப்கானிஸ்தான் நாட்டில் தகவல்களை சேகரிக்கக்கூடிய பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அல்கொய்தா தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக சென்றிருக்கிறார்.
அப்போது தான் கடந்த புதன் கிழமை அன்று இரவு நேரத்தில், அவர் தலீபான்களால் கடத்தப்பட்டிருக்கிறார். அவரின் தொலைபேசியை தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே, அவர் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. இந்நிலையில் தற்போது அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
தன்னை தலீபான்கள் கடத்திச் சென்றது குறித்து அவர் தெரிவித்ததாவது, கடந்த 3-ஆம் தேதி அன்று காபூல் நகருக்கு சென்றேன். அப்போது தலிபான்கள் என்னை கடத்திச் சென்றனர். என் செல்போனை பறித்து விட்டார்கள். அதன் பிறகு இரக்கமற்ற முறையில், என் வாகன ஓட்டுனரையும் என்னையும் தாக்கினார்கள்.
என் கைகளை கட்டி, கண்களையும் கட்டி விசாரித்தனர். அதன் பிறகு நேற்று என்னை விடுவித்தார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாகன ஓட்டுனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் தலீபான்களிடம் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.