Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள்.. நாட்டின் அடுத்த ஜனாதிபதி இவரா..? வெளியான புகைப்படம்..!!

ஆப்கானிஸ்தானின் அடுத்த ஜனாதிபதியாக தலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, அமெரிக்க படைகள் வெளியேறியதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தலிபான்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றினர். கிட்டதட்ட ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிவிட்டார்கள். தலிபான்களுக்கு பயந்து காபூல் நகரில் பல்வேறு மக்கள் தஞ்சம் அடைந்தார்கள்.

தற்போது, அங்கிருந்து மக்கள் தப்பி வருகிறார்கள். மேலும் நாட்டின் ஜனாதிபதி அஸ்ரப் கனியும் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார். எனவே தலிபான்கள், போர் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார்? என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து, தலிபான்களின் தலைவரான, முல்லா அப்துல் கனி பரதார் தான் அடுத்த ஜனாதிபதியாக பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |